Category: புஹாரி

Bukhari

Bukhari-2968

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 114 திருமணமான புதிதில் புனிதப் போருக்குச் செல்வது.

இது குறித்து ஜாபிர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித் துள்ளார்கள்.

பாடம் : 115 (மனைவியுடன்) வீடு கூடிய பின்பு புனிதப் போருக்குச் செல்ல முனைதல்.

இது குறித்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள்.

பாடம் : 116 (எதிரிகளின் படையெடுப்புப் பற்றி மக்கள்) பீதிக்குள்ளாகும் போது (அவர்களை அமைதிப்படுத்தவும் அவர்களுக்குப் பாதுகாப்புத் தரவும்) தலைவர் விரைந்து செல்லுதல்.

2968. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

(எதிரிகள் படையெடுத்து வருவதாக) மதீனா நகரில் பீதி நிலவியது. உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், அபூ தல்ஹா(ரலி) அவர்களின் குதிரை ஒன்றில் ஏறி (விபரமறிந்து வரப்) புறப்பட்டார்கள். அப்போது அவர்கள், ‘(பீதி ஏற்படுத்தும்) எதனையும் நாம் காணவில்லை. தங்கு தடையின்றி வேகமாக ஓடக் கூடியதாகவே நாம் இந்த குதிரையைக் கண்டோம்’ என்று கூறினார்கள்.
Book : 56


كَانَ بِالْمَدِينَةِ فَزَعٌ، فَرَكِبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَسًا لِأَبِي طَلْحَةَ، فَقَالَ: «مَا رَأَيْنَا مِنْ شَيْءٍ، وَإِنْ وَجَدْنَاهُ لَبَحْرًا»


Bukhari-2967

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 113 (போரிலிருந்து திரும்பிச் செல்லவோ, போரில் கலந்து கொள்ளாமலிருக்கவோ) ஒருவர் தலைவரிடம் அனுமதி கேட்பது. ஏனெனில், அல்லாஹ் கூறுகிறான்:

அல்லாஹ்வையும் அவனது திருத் தூதரையும் (மனப்பூர்வமாக) நம்பி, ஒரு பொதுப்பணிக்காக இறைத்தூதருடன் இருக்கும் போது அவரிடம் அனுமதி பெறாத வரை (அவரைப் பிரிந்து) செல்லாமலிருப்பவர்களே உண்மையான இறை நம்பிக்கையாளர்கள்.

நபியே! உங்களிடம் அனுமதி கேட்பவர்கள் தாம், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் உண்மையாக ஏற்றுக் கொண்டவர்கள். எனவே,அவர்கள் தமது தேவை எதற்காவது உங்களிடம் அனுமதி கேட்டால் அவர்களில் நீங்கள் விரும்பியவருக்கு அனுமதியளியுங்கள்! மேலும், அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பும் கோருங்கள்! நிச்சயமாக, அல்லாஹ் மிகவும் மன்னிக்கக் கூடியவனாகவும் கிருபை நிறைந்தவனாகவும் இருக்கின்றான். (24:62)

2967. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் புனிதப் போருக்குச் சென்றேன். நான், களைப்படைந்து நடக்க முடியாமல் போய்க்கொண்டிருந்த, நீர் சுமக்கும் ஒட்டகம் ஒன்றின் மீது அமர்ந்து சென்று கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னை (வழியில்) வந்தடைந்தார்கள். அப்போது என்னிடம், ‘உன் ஒட்டகத்திற்கு

غَزَوْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَتَلاَحَقَ بِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَا عَلَى نَاضِحٍ لَنَا، قَدْ أَعْيَا فَلاَ يَكَادُ يَسِيرُ، فَقَالَ لِي: «مَا لِبَعِيرِكَ؟»، قَالَ: قُلْتُ: عَيِيَ، قَالَ: فَتَخَلَّفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَزَجَرَهُ، وَدَعَا لَهُ، فَمَا زَالَ بَيْنَ يَدَيِ الإِبِلِ قُدَّامَهَا يَسِيرُ، فَقَالَ لِي: «كَيْفَ تَرَى بَعِيرَكَ؟»، قَالَ: قُلْتُ: بِخَيْرٍ، قَدْ أَصَابَتْهُ بَرَكَتُكَ، قَالَ: «أَفَتَبِيعُنِيهِ؟» قَالَ: فَاسْتَحْيَيْتُ وَلَمْ يَكُنْ لَنَا نَاضِحٌ غَيْرُهُ، قَالَ: فَقُلْتُ: نَعَمْ، قَالَ: فَبِعْنِيهِ، فَبِعْتُهُ إِيَّاهُ عَلَى أَنَّ لِي فَقَارَ ظَهْرهِ، حَتَّى أَبْلُغَ المَدِينَةَ قَالَ : فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي عَرُوسٌ، فَاسْتَأْذَنْتُهُ، فَأَذِنَ لِي، فَتَقَدَّمْتُ النَّاسَ إِلَى المَدِينَةِ حَتَّى أَتَيْتُ المَدِينَةَ، فَلَقِيَنِي خَالِي، فَسَأَلَنِي عَنِ البَعِيرِ، فَأَخْبَرْتُهُ بِمَا صَنَعْتُ فِيهِ، فَلاَمَنِي قَالَ: وَقَدْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لِي حِينَ اسْتَأْذَنْتُهُ: «هَلْ تَزَوَّجْتَ بِكْرًا أَمْ ثَيِّبًا؟»، فَقُلْتُ: تَزَوَّجْتُ ثَيِّبًا، فَقَالَ: «هَلَّا تَزَوَّجْتَ بِكْرًا تُلاَعِبُهَا وَتُلاَعِبُكَ»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، تُوُفِّيَ وَالِدِي أَوِ اسْتُشْهِدَ وَلِي أَخَوَاتٌ صِغَارٌ فَكَرِهْتُ أَنْ أَتَزَوَّجَ مِثْلَهُنَّ، فَلاَ تُؤَدِّبُهُنَّ، وَلاَ تَقُومُ عَلَيْهِنَّ، فَتَزَوَّجْتُ ثَيِّبًا لِتَقُومَ عَلَيْهِنَّ وَتُؤَدِّبَهُنَّ، قَالَ: فَلَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ غَدَوْتُ عَلَيْهِ بِالْبَعِيرِ، فَأَعْطَانِي ثَمَنَهُ وَرَدَّهُ عَلَيَّ قَالَ المُغِيرَةُ هَذَا فِي قَضَائِنَا حَسَنٌ لاَ نَرَى بِهِ بَأْسًا


Bukhari-2966

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2966. பிறகு மக்களிடையே எழுந்து நின்று உரை நிகழ்த்தலானார்கள்:

மக்களே! (போர்க்களம் சென்று) எதிரிகளைச் சந்திக்க வேண்டுமென்று ஆசைப்படாதீர்கள். அல்லாஹ்விடம் (போரைத் தவிர்க்க வாய்ப்பளித்து) அமைதி நிலை தரும்படி கேளுங்கள். (அதையும் மீறி) எதிரிகளை (போர்க்களத்தில்) சந்திக்க நேரிட்டால் நிலைகுலைந்து விடாமல் போரின் துன்பங்களைச் சகித்துக் கொண்டு பொறுமையாயிருங்கள்.

மேலும், சொர்க்கம் வாட்களின் நிழல்களில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டு, ‘இறைவா! வேதத்தை அருள்பவனே! மேகத்தை நகர்த்திச் செல்பவனே! படைகளைத் தோற்கடிப்பவனே! இ(ப்பகை)வர்களைத் தோற்கடித்து இவர்களுக்கெதிராக எங்களுக்கு உதவுவாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள்.
Book :56


ثُمَّ قَامَ فِي النَّاسِ خَطِيبًا قَالَ: «أَيُّهَا النَّاسُ، لاَ تَتَمَنَّوْا لِقَاءَ العَدُوِّ، وَسَلُوا اللَّهَ العَافِيَةَ، فَإِذَا لَقِيتُمُوهُمْ فَاصْبِرُوا، وَاعْلَمُوا أَنَّ الجَنَّةَ تَحْتَ ظِلاَلِ السُّيُوفِ»، ثُمَّ قَالَ: «اللَّهُمَّ مُنْزِلَ الكِتَابِ، وَمُجْرِيَ السَّحَابِ، وَهَازِمَ الأَحْزَابِ، اهْزِمْهُمْ وَانْصُرْنَا عَلَيْهِمْ»


Bukhari-2965

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 112 நபி (ஸல்) அவர்கள் முற்பகலில் போரிட வில்லையென்றால் சூரியன் உச்சியிலிருந்து சாயும் வரை போரைத் தள்ளிப் போட்டு விடுவார்கள்.

2965. உமர் இப்னு உபைதில்லாஹ்(ரஹ்) அவர்களின் அடிமையாகவும் அவர்களின் எழுத்தராகவும் இருந்த சாலிம் அபுள் நள்ர்(ரஹ்) அறிவித்தார்.

உமர் இப்னு உபைதில்லாஹ்(ரஹ்) அவர்களுக்கு அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) கடிதம் எழுதினார்கள். அதில் எழுதியிருந்ததை நான் படித்துக் காட்டினேன்.

(அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எதிரிகளைப் போர்க் களத்தில் சந்தித்த நாள்களில் ஒருமுறை சூரியன் உச்சி சாயும் வரை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.
Book : 56


إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَيَّامِهِ الَّتِي لَقِيَ فِيهَا، انْتَظَرَ حَتَّى مَالَتِ الشَّمْسُ


Bukhari-2964

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2964. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

இன்று என்னிடம் ஒருவர் வந்து, ஒரு விஷயத்தைக் குறித்து கேட்டார். அவருக்கு என்ன பதில் கூறுவது என்று எனக்குத் தெரியவில்லை. அவர், ‘ஆயுத பாணியான, செயல் வேகமுள்ள ஒருவர் தம் தலைவர்களுடன் புனிதப் போரில் கலந்து கொள்கிறார். அப்போது தலைவர் அவரால் செய்ய முடியாத சில விஷயங்களைச் செய்யும்படி (வற்புறுத்தி) அவருக்கு உத்தரவிடுகிறார் எனில் அவர் என்ன செய்வது?’ என்று கேட்டார்.

நான், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு என்ன(பதில்) சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், நாங்கள் (இத்தகைய புனிதப் போர்களில்) நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போதெல்லாம் அவர்கள் ஒரு விஷயத்தை ஒருமுறை தான் உத்தரவிடுவார்கள். நாங்கள் அதைச் செய்து விடுவோம். நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கும் வரை நன்மையில் இருப்பீர்கள். (நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சித் தலைவருக்குக் கீழ்ப்படிவதால் தீங்கேதும் நேராது.)

உங்கள் உள்ளத்தில் சந்தேகம் ஏதும் ஏற்பட்டால் (விஷயமறிந்த) யாரிடமாவது கேளுங்கள். அவர், உங்கள் (நெருடலை நீக்கி) சந்தேகத்தை நிவர்த்தி செய்யக்கூடும். (இனிவரும் காலங்களில்) அத்தகைய (தகுதி வாய்ந்த ஒரு)வரை நீங்கள் அடைய முடியாமலும் போகக் கூடும்.

எவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவரும்

لَقَدْ أَتَانِي اليَوْمَ رَجُلٌ، فَسَأَلَنِي عَنْ أَمْرٍ مَا دَرَيْتُ مَا أَرُدُّ عَلَيْهِ، فَقَالَ: أَرَأَيْتَ رَجُلًا مُؤْدِيًا نَشِيطًا، يَخْرُجُ مَعَ أُمَرَائِنَا فِي المَغَازِي، فَيَعْزِمُ عَلَيْنَا فِي أَشْيَاءَ لاَ نُحْصِيهَا؟ فَقُلْتُ لَهُ: وَاللَّهِ مَا أَدْرِي مَا أَقُولُ لَكَ، إِلَّا أَنَّا «كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَعَسَى أَنْ لاَ يَعْزِمَ عَلَيْنَا فِي أَمْرٍ إِلَّا مَرَّةً حَتَّى نَفْعَلَهُ، وَإِنَّ أَحَدَكُمْ لَنْ يَزَالَ بِخَيْرٍ مَا اتَّقَى اللَّهَ، وَإِذَا شَكَّ فِي نَفْسِهِ شَيْءٌ سَأَلَ رَجُلًا، فَشَفَاهُ مِنْهُ، وَأَوْشَكَ أَنْ لاَ تَجِدُوهُ، وَالَّذِي لاَ إِلَهَ إِلَّا هُوَ مَا أَذْكُرُ مَا غَبَرَ مِنَ الدُّنْيَا إِلَّا كَالثَّغْبِ شُرِبَ، صَفْوُهُ وَبَقِيَ كَدَرُهُ»


Bukhari-2962 & 2963

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2962. & 2963. முஜாஷிஉ(ரலி) அறிவித்தார்.
நானும் என் சகோதரரும் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம். நான் நபி(ஸல்) அவர்களிடம், ‘ஹிஜ்ரத் செய்ய (மார்க்கத்திற்காகத் தாயகம் துறக்க) எங்களிடம் உறுதிமொழி வாங்குங்கள்’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஹிஜ்ரத் (அதற்குரிய வேளையில்) அதற்குரியவர்களுக்கு (கடமையாகி) நடந்து முடிந்துவிட்டது. (இஸ்லாம் மேலோங்கிவிட்டதால் இனி அது தேவையில்லை)’ என்று பதிலளித்தார்கள். நான், ‘(இனி) வேறெதற்காகத் தாங்கள் எங்களிடம் உறுதிமொழி வாங்குவீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இஸ்லாத்தைச் செயல்படுவதற்காகவும் (இறைவழியில்) அறப்போரிடுவதற்காகவும் (உறுதிமொழி வாங்குவேன்)’ என்று பதிலளித்தார்கள்.
Book :56


أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَا وَأَخِي، فَقُلْتُ: بَايِعْنَا عَلَى الهِجْرَةِ، فَقَالَ: «مَضَتِ الهِجْرَةُ لِأَهْلِهَا»، فَقُلْتُ: عَلاَمَ تُبَايِعُنَا؟ قَالَ: «عَلَى الإِسْلاَمِ وَالجِهَادِ»


Bukhari-2961

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2961. அனஸ்(ரலி) அறிவித்தார்.
அகழ்ப் போரின்போது (மதீனா வாசிகளான) அன்சாரிகள், ‘நாங்கள் (எத்தகையவர்கள் எனில்) ‘நாங்கள் உயிராயிருக்கும் வரை (தொடர்ந்து) அறப்போர் புரிந்து கொண்டிருப்போம்’ என்று முஹம்மத்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழியளித்திருக்கிறோம்’ என்று பாடிய வண்ணம் (அகழ்தோண்டிக் கொண்டு) இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! மறுமை வாழ்க்கையைத் தவிர (நிரந்தரமான பெரு) வாழ்க்கை வேறெதுவுமில்லை. எனவே, (அதை மகிழ்ச்சிகரமானதாக ஆக்கிக் கொள்ள உழைக்கிற மதீனாவாசிகளான) அன்சாரிகளையும் (மக்காவாசிகளான) முஹாஜிர்களையும் கண்ணியப்படுத்துவாயாக!’ என்று (பாடலிலேயே) பதிலளித்தார்கள்.
Book :56


كَانَتِ الأَنْصَارُ يَوْمَ الخَنْدَقِ تَقُولُ:
[البحر]
نَحْنُ الَّذِينَ بَايَعُوا مُحَمَّدَا … عَلَى الجِهَادِ مَا حَيِينَا أَبَدَا
، فَأَجَابَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ:
«اللَّهُمَّ لاَ عَيْشَ إِلَّا عَيْشُ الآخِرَهْ … فَأَكْرِمِ الأَنْصَارَ، وَالمُهَاجِرَهْ»


Bukhari-2960

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2960. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) கூறினார்.

நான் (‘இறைமறுப்பாளர்களுடன் அறப்போர் புரிவேன்; இறைவழியில் துன்பங்களைச் சுமப்பேன்’ என்று) நபி(ஸல்) அவர்களிடம் ஹுதைபிய்யாவில் உறுதிமொழியளித்தேன்; பிறகு மரத்தின் நிழலில் (சற்று) ஒதுங்கினேன். (நபி(ஸல்) அவர்களைச் சுற்றிலுமிருந்த) மக்கள் (கூட்டம்) சற்று குறைந்தபோது நபி(ஸல்) அவர்கள், ‘அக்வஃ உடைய மகனே! (ஸலமாவே!) நீ உறுதிமொழியளிக்கவில்லையா?’ என்று கேட்டார்கள். ‘நான் ஏற்கனவே உறுதிமொழியளித்து விட்டேன், இறைத்தூதர் அவர்களே!’ என்று பதிலளித்தேன்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘மீண்டும் (அளிப்பீராக!)’ என்று கூறினார்கள். எனவே, நான் இரண்டாவது முறையாக உறுதிமொழியளித்தேன்.

அறிவிப்பாளர் யஸீத் இப்னு அபீ உபைத்(ரஹ்) கூறினார்.

(இதை எனக்கு அறிவித்த ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அவர்களிடம்) நான், ‘அபூ முஸ்லிமே! அன்று (நபித் தோழர்களான) நீங்கள் எந்த விஷயத்திற்காக (நபி(ஸல்) அவர்களிடம்) உறுதிமொழியளித்தீர்கள்’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘மரணத்தைச் சந்திக்கத் தயாராயிருப்பதாக நாங்கள் உறுதிமொழியளித்தோம்’ என்று பதிலளித்தார்கள்.
Book :56


بَايَعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ عَدَلْتُ إِلَى ظِلِّ الشَّجَرَةِ، فَلَمَّا خَفَّ النَّاسُ قَالَ: «يَا ابْنَ الأَكْوَعِ أَلاَ تُبَايِعُ؟» قَالَ: قُلْتُ: قَدْ بَايَعْتُ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «وَأَيْضًا» فَبَايَعْتُهُ الثَّانِيَةَ، فَقُلْتُ لَهُ: يَا أَبَا مُسْلِمٍ عَلَى أَيِّ شَيْءٍ كُنْتُمْ تُبَايِعُونَ يَوْمَئِذٍ؟ قَالَ: عَلَى المَوْتِ


Bukhari-2959

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2959. அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.

‘ஹர்ரா’ போரின்போது என்னிடம் ஒருவர் வந்து, ‘அப்துல்லாஹ் இப்னு ஹன்ழலா(ரலி), மக்களிடம் மரணத்தைச் சந்திக்கத் தாயாராயிருக்கும் படி உறுதிமொழி வாங்குகிறார்கள்’ என்று கூறினார்.

அதற்கு நான், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு (ஹுதைபிய்யாவில் அளித்த உறுதிமொழிக்கு)ப் பின்னர் வேறெவரிடமும் இதற்காக நான் உறுதிமொழியளிக்க மாட்டேன்’ என்று கூறினேன்.
Book :56


لَمَّا كَانَ زَمَنُ الحَرَّةِ أَتَاهُ آتٍ فَقَالَ لَهُ: إِنَّ ابْنَ حَنْظَلَةَ يُبَايِعُ النَّاسَ عَلَى المَوْتِ، فَقَالَ: لاَ أُبَايِعُ عَلَى هَذَا أَحَدًا بَعْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-2958

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 110 போரில் பின்வாங்கி ஓடக் கூடாது என்று உறுதிமொழி வாங்குவது.

சிலர்,போரில் மரணத்தைச் சந்திக்கத் தயாராயிருப்பதாக உறுதி மொழி வாங்குவது என்றும் அறிவித்துள்ளனர். ஏனெனில்,

(நபியே!) நம்பிக்கையாளர்கள் உங்களிடம் (குறிப்பிட்ட) மரத்திற்குக் கீழே உறுதிமொழியளித்த போது அவர்களைக் குறித்து அல்லாஹ் திருப்தி கொண்டான் (48:18) என்று இறைவன் (பொதுவாகவே) கூறு கின்றான்.

2958. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் (ஹுதைபிய்யா உடன்படிக்கை கையொப்பமான ஆண்டிற்கு) அடுத்த ஆண்டு (ஒப்பந்தப்படி உம்ரா செய்யத்) திரும்பி வந்தோம். ‘நாங்கள் (ஹுதைபிய்யா ஆண்டில்) எந்த மரத்திற்குக் கீழே (நபி(ஸல்) அவர்களின் கரத்தில்) உறுதிமொழி எடுத்துக் கொண்டோமோ அந்த மரம் இதுதான்’ என்று எங்களில் எந்த இருவரும் ஒருமித்த கருத்துக் கொள்ளவில்லை. அது அல்லாஹ்விடமிருந்து (அவனுடைய) கருணை பொழிந்த இடமாக இருந்தது.

அறிவிப்பாளர் ஜுவைரிய்யா(ரஹ்) கூறினார்:

(இப்னு உமர்(ரலி) அவர்களிடமிருந்து கேட்டு இதை எங்களுக்கு அறிவித்த) நாஃபிஉ(ரஹ்) அவர்களிடம் நாங்கள், ‘எதற்காக நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களிடமிருந்து உறுதிமொழி பெற்றார்கள்? மரணத்தைச் சந்திக்கத் தயாராயிருப்பதற்காகவா?’ என்று கேட்டோம். அதற்கு அவர்கள்,

«رَجَعْنَا مِنَ العَامِ المُقْبِلِ فَمَا اجْتَمَعَ مِنَّا اثْنَانِ عَلَى الشَّجَرَةِ الَّتِي بَايَعْنَا تَحْتَهَا، كَانَتْ رَحْمَةً مِنَ اللَّهِ»، فَسَأَلْتُ نَافِعًا: عَلَى أَيِّ شَيْءٍ بَايَعَهُمْ، عَلَى المَوْتِ؟ قَالَ: «لاَ، بَلْ بَايَعَهُمْ عَلَى الصَّبْرِ»


Next Page » « Previous Page