பாடம் : 2 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய (வாழ்வும் வாக்குமான) நடைமுறைகளை ஏற்று நடப்பது. அல்லாஹ் கூறுகின்றான்: (இறைவா!) எங்களை இறையச்சமுடையோருக்கு முன்னோடிகளாக ஆக்குவாயாக! ளஎன்று அந்த நல்லடியார்கள் கூறுவார்கள்.ன (25:74) அதாவது நாங்கள் எங்களுக்கு முன் இருந்த(நல்ல)வர்களைப் பின்பற்றியும், எங்களுக்குப் பின்வருவோர் எங்களைப் பின்பற்றியும் நடக்கின்ற சான்றோர்களாக எங்களை ஆக்கிடுவாயாக! இப்னு அவ்ன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் மூன்று விஷயங்களை எனக்கும் என் சகோதரர்களுக்கும் விரும்புகின்றேன்: 1. இந்த நபிவழியை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்; அதைப் பற்றி (அறிந்திட) நிறைய கேள்விகள் கேட்க வேண்டும். 2. இந்தக் குர்ஆனை அவர்கள் விளங்கி அதைப் பற்றி (இன்னும் அறிந்திட) மக்களிடம் நிறையக் கேள்விகள் கேட்க வேண்டும். 3. மக்களுக்கு நன்மையே நாட வேண்டும்.
7275. அபூ வாயில் ஷகீக் இப்னு ஸலமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
இந்தப் (புனித கஅபா) பள்ளிவாசலில் நான் ஷைபா இப்னு உஸ்மான்(ரஹ்) அவர்களின் அருகில் அமர்ந்தேன். அவர்கள் சொன்னார்கள். உமர்(ரலி) அவர்கள் என்னுடன் நீங்கள் அமர்ந்திருக்கும் جَلَسْتُ إِلَى شَيْبَةَ فِي هَذَا المَسْجِدِ، قَالَ: جَلَسَ إِلَيَّ عُمَرُ فِي مَجْلِسِكَ هَذَا، فَقَالَ: «لَقَدْ هَمَمْتُ أَنْ لاَ أَدَعَ فِيهَا صَفْرَاءَ وَلاَ بَيْضَاءَ إِلَّا قَسَمْتُهَا بَيْنَ المُسْلِمِينَ»، قُلْتُ: مَا أَنْتَ بِفَاعِلٍ، قَالَ: «لِمَ؟»، قُلْتُ: لَمْ يَفْعَلْهُ صَاحِبَاكَ، قَالَ: «هُمَا المَرْءَانِ يُقْتَدَى بِهِمَا»
சமீப விமர்சனங்கள்