Category: புஹாரி

Bukhari

Bukhari-7182

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7182. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

உத்பான இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்கள் தம் சகோதரர் ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம், ‘ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகன் எனக்குப் பிறந்தவன். அவனைப் பிடித்து உன்னிடம் வைத்துக் கொள்’ என்று உறுதிமொழி வாங்கியிருந்தார். மக்கா வெற்றி ஆண்டில் ஸஅத்(ரலி) அவர்கள் அவனைப் பிடித்துவைத்துக் கொண்டு ‘(இவன்) என் சகோதரர் மகன். இவன் விஷயத்தில் என் சகோதரர் (இவனைப் பிடித்துவருமாறு) என்னிடம் உறுதிமொழி வாங்கியிருந்தார்’ என்றார்கள். அப்போது அப்து இப்னு ஸம்ஆ(ரலி) அவர்கள் சஅதை நோக்கி எழுந்து, ‘(இவன்) என் சகோதரன். என் தந்தையின் அடிமைப் பெண்ணுடைய மகன். இவன் (உடைய தாய்) என் தந்தையின் அதிகாரத்திலிருந்தபோது பிறந்தவன்’ என்று கூறினார். எனவே, இருவரும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் பின் ஒருவராக (தீர்ப்புக் கேட்டுச்) சென்றர். ஸஅத்(ரலி) அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (இவன்) விஷயத்தில் (இவனைப் பிடித்துவருமாறு) என்னிடம் உறுதிமொழி வாங்கியிருந்தார்’ என்று கூற, அப்து இப்னு ஸம்ஆ(ரலி) அவர்கள், ‘(இவன்) என் சகோதரன். என் தந்தையின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவன்; அவரின் ஆதிக்கத்தில் (இவனுடைய

كَانَ عُتْبَةُ بْنُ أَبِي وَقَّاصٍ عَهِدَ إِلَى أَخِيهِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ أَنَّ ابْنَ وَلِيدَةِ زَمْعَةَ مِنِّي، فَاقْبِضْهُ إِلَيْكَ، فَلَمَّا كَانَ عَامُ الفَتْحِ أَخَذَهُ سَعْدٌ فَقَالَ ابْنُ أَخِي قَدْ كَانَ عَهِدَ إِلَيَّ فِيهِ، فَقَامَ إِلَيْهِ عَبْدُ بْنُ زَمْعَةَ فَقَالَ: أَخِي وَابْنُ وَلِيدَةِ أَبِي، وُلِدَ عَلَى فِرَاشِهِ، فَتَسَاوَقَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ سَعْدٌ: يَا رَسُولَ اللَّهِ، ابْنُ أَخِي كَانَ عَهِدَ إِلَيَّ فِيهِ، وَقَالَ عَبْدُ بْنُ زَمْعَةَ: أَخِي وَابْنُ وَلِيدَةِ أَبِي وُلِدَ عَلَى فِرَاشِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هُوَ لَكَ يَا عَبْدُ بْنَ زَمْعَةَ» ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الوَلَدُ لِلْفِرَاشِ وَلِلْعَاهِرِ الحَجَرُ»، ثُمَّ قَالَ لِسَوْدَةَ بِنْتِ زَمْعَةَ: «احْتَجِبِي مِنْهُ» لِمَا رَأَى مِنْ شَبَهِهِ بِعُتْبَةَ، فَمَا رَآهَا حَتَّى لَقِيَ اللَّهَ تَعَالَى


Bukhari-7181

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 29 அடுத்தவருக்குரிய உரிமை (தொடர்பான வழக்கில், அது) தமக்குரியதென (வெளிப்படை ஆதாரங்களை வைத்து)த் தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டாலும் அதை எவரும் பெற வேண்டாம். ஏனெனில், நீதிபதியின் தீர்ப்பு தடை செய்யப்பட்டதை அனுமதிக்கப்பட்ட தாகவோ, அனுமதிக்கப்பட்டதைத் தடை செய்யப்பட்டதாகவோ மாற்றிவிடாது.

7181. நபி(ஸல்) அவர்கள் துணைவியார் உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் அறைவாசலில் (நின்று) சிலர் சப்தமிட்டுத் தகராறு செய்து கொள்வதைக் கேட்டார்கள். எனவே, வெளியேவந்து அவர்களிடம் சென்று, ‘நான் மனிதன்தான். என்னிடம் வழக்காடுபவர் வருகிறார். (அவரின் அந்தரங்க நிலை எனக்குத் தெரியாது.) உங்களில் ஒருவர் மற்றவரைவிட வாக்கு சாதுர்யம் மிக்கவராக இருக்கலாம். அவர் உண்மையே பேசுகிறார் என்றெண்ணி நான் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்துவிடுகிறேன். எனவே, அடுத்த முஸ்லிமுக்குரிய உரிமையை (உண்மை தெரியாமல்) யாருக்குரியதென நான் தீர்ப்பளித்துவிடுகிறனோ (அவர் அதைப் பெறவேண்டாம். ஏனெனில்,) அதுவெல்லாம் நரக நெருப்பின் ஒரு துண்டுதான். (இதைநினைவில் கொண்டு விரும்பினால், அதை அவர்

أَنَّهُ سَمِعَ خُصُومَةً بِبَابِ حُجْرَتِهِ فَخَرَجَ إِلَيْهِمْ، فَقَالَ: «إِنَّمَا أَنَا بَشَرٌ، وَإِنَّهُ يَأْتِينِي الخَصْمُ، فَلَعَلَّ بَعْضَكُمْ أَنْ يَكُونَ أَبْلَغَ مِنْ بَعْضٍ، فَأَحْسِبُ أَنَّهُ صَادِقٌ فَأَقْضِي لَهُ بِذَلِكَ، فَمَنْ قَضَيْتُ لَهُ بِحَقِّ مُسْلِمٍ، فَإِنَّمَا هِيَ قِطْعَةٌ مِنَ النَّارِ فَلْيَأْخُذْهَا أَوْ لِيَتْرُكْهَا»


Bukhari-7180

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 28 (நீதிபதி முன்) ஆஜராகாதவருக்குக்கெதிராகத் தீர்ப்பளிப்பது43

7180. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

(ஒருமுறை) ஹிந்த் பின்த் உத்பா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், ‘(என் கணவர்) அபூ சுஃப்யான் கருமித்தனம் உள்ள ஒருவர். நான் (செலவுக்காக) அவரின் பணத்திலிருந்து (அவருக்குத் தெரியாமல்) எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. (அப்படிச் செய்ய எனக்கு அனுமதியுண்டா?)’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உனக்கும் உன் குழந்தைக்கும் போதுமான அளவிற்கு நியாயமான முறையில் எடுத்துக்கொள்’ என்றார்கள்.44

Book : 93


أَنَّ هِنْدًا قَالَتْ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ شَحِيحٌ، فَأَحْتَاجُ أَنْ آخُذَ مِنْ مَالِهِ، قَالَ: «خُذِي مَا يَكْفِيكِ وَوَلَدَكِ بِالْمَعْرُوفِ»


Bukhari-7179

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7179. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

மனிதர்களிலேயே மிகவும் மோசமானவன் இரட்டை முகத்தான் ஆவான். அவன் இவர்களிடம் செல்லும்போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும்போது இன்னொரு முகத்துடனும் செல்கிறான்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.42

Book :93


«إِنَّ شَرَّ النَّاسِ ذُو الوَجْهَيْنِ، الَّذِي يَأْتِي هَؤُلاَءِ بِوَجْهٍ، وَهَؤُلاَءِ بِوَجْهٍ»


Bukhari-7178

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7178. முஹம்மத் இப்னு ஸைத் இப்னி அப்தில்லாஹ் இப்னி உமர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

மக்கள் சிலர் (எங்கள் பாட்டனார்) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களிடம், ‘நாங்கள் எங்கள் மன்னர்களிடம் செல்கிறோம். அவர்களிடமிருந்து வெளியேறியதும் (அவர்களைப் பற்றி) நாங்கள் என்ன பேசிக் கொள்வோமோ அதற்கு நேர் மாறானதையே அவர்களுக்கு (முன்னிலையில்) நாங்கள் கூறுவோம்’ என்றார்கள். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள், ‘இப்படி (முன்னால் ஒன்று பின்னால் ஒன்று பேசுவதை (நபி(ஸல்) அவர்களின் காலத்தில்) நாங்கள் நயவஞ்சகமாகக் கருதிவந்தோம்’ என்று பதிலளித்தார்கள்.

Book :93


قَالَ أُنَاسٌ لِابْنِ عُمَرَ: إِنَّا نَدْخُلُ عَلَى سُلْطَانِنَا، فَنَقُولُ لَهُمْ خِلاَفَ مَا نَتَكَلَّمُ إِذَا خَرَجْنَا مِنْ عِنْدِهِمْ، قَالَ: «كُنَّا نَعُدُّهَا نِفَاقًا»


Bukhari-7176 & 7177

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 26 சமூகத் தலைவர்கள் (அல்உரஃபா)41

7176. & 7177. மர்வான் இப்னு ஹகம் மற்றும் மிஸ்வர் இப்னு உக்ரமா(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்:

ஹாவாஸின் குலத்தாரின் போர்க் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கும் அவர்களுடனிருந்தவர்களுக்கும் முஸ்லிம்கள் அனுமதியளித்தபோது, ‘உங்களில் யார் போர்க் கைதிகளை விடுவிக்க) சம்மதம் தெரிவிக்கிறார்; யார் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று எனக்குத் தெரியாது. எனவே, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள். உங்கள் சமூகத் தலைவர்கள் உங்களின் முடிவை எங்களிடம் வந்து தெரிவிக்கட்டும்’ என்று கூறினார்கள்.

உடனே மக்கள் திரும்பிச் சென்றார்கள். அவர்களிடம் அவர்களின் சமூகத் தலைவர்களை பேசி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் திரும்பிவந்து மக்கள் மனப்பூர்வமாக சம்மதித்துவிட்டார்கள் என்று தெரிவித்தார்கள்.41-ஹ

Book : 93


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ حِينَ أَذِنَ لَهُمُ المُسْلِمُونَ فِي عِتْقِ سَبْيِ هَوَازِنَ: «إِنِّي لاَ أَدْرِي مَنْ أَذِنَ مِنْكُمْ مِمَّنْ لَمْ يَأْذَنْ، فَارْجِعُوا حَتَّى يَرْفَعَ إِلَيْنَا عُرَفَاؤُكُمْ أَمْرَكُمْ»، فَرَجَعَ النَّاسُ فَكَلَّمَهُمْ عُرَفَاؤُهُمْ، فَرَجَعُوا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرُوهُ أَنَّ النَّاسَ قَدْ طَيَّبُوا وَأَذِنُوا


Bukhari-7175

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 25 அடிமையாயிருந்து விடுதலையடைந்தவர் களை நீதிபதிகளாக்குவதும் அதிகாரிகளாக்கு வதும்.

7175. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

அபூ ஹுதைஃபாவின் அடிமையாயிருந்த சலீம்(ரலி) அவர்கள் முதலாவதாக ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் நபித்தோழர்களுக்கும் ‘குபா’ பள்ளிவாசலில் தலைமை தாங்கித் தொழுகை நடத்தினார்கள். அந்த நபித்தோழர்களில் அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி), அபூ ஸலமா(ரலி), ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி), ஆமிர் இப்னு ரபீஆ(ரலி) ஆகியோரும் அடங்குவர்.40

Book : 93


«كَانَ سَالِمٌ مَوْلَى أَبِي حُذَيْفَةَ يَؤُمُّ المُهَاجِرِينَ الأَوَّلِينَ، وَأَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَسْجِدِ قُبَاءٍ فِيهِمْ أَبُو بَكْرٍ، وَعُمَرُ، وَأَبُو سَلَمَةَ، وَزَيْدٌ، وَعَامِرُ بْنُ رَبِيعَةَ»


Bukhari-7174

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 24 அதிகாரிகள் பெறும் அன்பளிப்புகள்

7174. அபூ ஹுமைத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் பனூஸஅத் குலத்தாரில் ஒருவரை ஸகாத் வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள். அவர் இப்னுல் உதபிய்யா (அல்லது இப்னுல் லுதபிய்யா) என்று அழைக்கப்பட்டார். அவர் (ஸகாத் வசூலித்துக்கொண்டு) வந்தபோது, ‘இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது’ என்றார். உடனே நபி(ஸல்) அவர்கள் (எழுந்து) சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்று, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்த பின்னர், ‘நாம் அனுப்பும் அதிகாரியின் நிலை என்ன? அவர் (பணியை முடித்துத் திரும்பி) வந்து, ‘இது உமக்குரியது; இது எனக்குரியது’ என்று கூறுகிறாரே! அவர் (மட்டும்) தம் தந்தை அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து பார்க்கட்டுமே! அவருக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா? இல்லையா? என்று தெரியும். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அவர் கொண்டுவரும் (அன்பளிப்பு) எதுவாயினும் அதைத் தம் கழுத்தில் சுமந்தபடிதான் மறுமைநாளில் வருவார். அந்த அன்பளிப்பு ஒட்டகமாக இருந்தால் அது கனைத்துக் கொண்டிருக்கும்; அது

اسْتَعْمَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا مِنْ بَنِي أَسْدٍ يُقَالُ لَهُ ابْنُ الأُتَبِيَّةِ عَلَى صَدَقَةٍ، فَلَمَّا قَدِمَ قَالَ: هَذَا لَكُمْ وَهَذَا أُهْدِيَ لِي، فَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى المِنْبَرِ – قَالَ سُفْيَانُ أَيْضًا فَصَعِدَ المِنْبَرَ – فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ: ” مَا بَالُ العَامِلِ نَبْعَثُهُ فَيَأْتِي يَقُولُ: هَذَا لَكَ وَهَذَا لِي، فَهَلَّا جَلَسَ فِي بَيْتِ أَبِيهِ وَأُمِّهِ، فَيَنْظُرُ أَيُهْدَى لَهُ أَمْ لا، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لا يَأْتِي بِشَيْءٍ إِلَّا جَاءَ بِهِ يَوْمَ القِيَامَةِ يَحْمِلُهُ عَلَى رَقَبَتِهِ، إِنْ كَانَ بَعِيرًا لَهُ رُغَاءٌ، أَوْ بَقَرَةً لَهَا خُوَارٌ، أَوْ شَاةً تَيْعَرُ «، ثُمَّ رَفَعَ يَدَيْهِ حَتَّى رَأَيْنَا عُفْرَتَيْ إِبْطَيْهِ» أَلا هَلْ بَلَّغْتُ ” ثَلاَثًا، قَالَ سُفْيَانُ: قَصَّهُ عَلَيْنَا الزُّهْرِيُّ، وَزَادَ هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي حُمَيْدٍ قَالَ: سَمِعَ أُذُنَايَ، وَأَبْصَرَتْهُ عَيْنِي، وَسَلُوا زَيْدَ بْنَ ثَابِتٍ فَإِنَّهُ سَمِعَهُ مَعِي، وَلَمْ يَقُلِ الزُّهْرِيُّ سَمِعَ أُذُنِي، خُوَارٌ: صَوْتٌ، «وَالجُؤَارُ مِنْ» تَجْأَرُونَ: «كَصَوْتِ البَقَرَةِ»


Bukhari-7173

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 23 ஆட்சியாளர் (வலீமா-மண) விருந்தழைப்பை ஏற்பது (கலீஃபா)

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களுடைய அடிமையின் விருந்தழைப்பை ஏற்றுச் சென்றார்கள்.

7173. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

(போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து) விடுவியுங்கள்; (விருந்துக்கு) அழைப்பவருக்கு (அவரின் அழைப்பை ஏற்று) பதிலளியுங்கள்.

என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.38

Book : 93


«فُكُّوا العَانِيَ وَأَجِيبُوا الدَّاعِيَ»


Bukhari-7172

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 22 ஆட்சித் தலைவர் இரு ஆட்சியர்களை ஒரே இடத்திற்கு அனுப்பும் போது அவ்விருவரும் இணக்கத்தோடு நடந்து கொள்ளும்படியும் பிணங்கிக்கொள்ளாமல் இருக்கும்படியும் கட்டளையிடுவது.

7172. அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் என்னையும் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தார்கள். அப்போது, ‘(மார்க்க விஷயத்தில் மக்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள்; (மக்களைச்) சிரமப்படுத்திவிடாதீர்கள்; நற்செய்தி(களை அதிகம்) கூறுங்கள்; (எச்சரிக்கை செய்யும்போது கூட) வெறுப்பேற்றிவிடாதீர்கள். (தீர்ப்பளிக்கும் போது) இணக்கமாக நடந்துகொள்ளுங்கள்’ என்றார்கள். அப்போது நான், ‘எங்கள் (யமன்) நாட்டில் ‘பித்உ’ எனும் (மது) பானம் (தேனில்) தயாரிக்கப்படுகிறதே!’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘போதை தரும் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும்’ என்றார்கள்.37

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book : 93


بَعَثَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبِي، وَمُعَاذَ بْنَ جَبَلٍ، إِلَى اليَمَنِ، فَقَالَ: «يَسِّرَا وَلاَ تُعَسِّرَا، وَبَشِّرَا وَلاَ تُنَفِّرَا، وَتَطَاوَعَا» فَقَالَ لَهُ أَبُو مُوسَى إِنَّهُ يُصْنَعُ بِأَرْضِنَا البِتْعُ، فَقَالَ: «كُلُّ مُسْكِرٍ حَرَامٌ»، وَقَالَ النَّضْرُ، وَأَبُو دَاوُدَ، وَيَزِيدُ بْنُ هَارُونَ، وَوَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Next Page » « Previous Page