Category: புஹாரி

Bukhari

Bukhari-6764

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 26

ஒரு முஸ்லிம் இறைமறுப்பாளருக்கோ, ஓர் இறைமறுப்பாளர் ஒரு முஸ்லிமுக்கோ வாரிசாக மாட்டார்.51

(முஸ்லிமான தந்தை இறந்த போது) இறைமறுப்பாளராக இருந்த ஒருவர் சொத்து பங்கிடுவதற்கு முன்பு முஸ்லிமானாலும் அவருக்கு வாரிசுரிமை கிடையாது.52

6764. ஒரு முஸ்லிம் இறைமறுப்பாளருக்கு வாரிசாக மாட்டார். ஓர் இறைமறுப்பாளர் முஸ்லிமுக்கு வாரிசாகமாட்டார்  ‘ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,

என உசாமா இப்னு ஸைத் (ரலி) அறிவித்தார்.

Book : 86


«لاَ يَرِثُ المُسْلِمُ الكَافِرَ وَلاَ الكَافِرُ المُسْلِمَ»


Bukhari-6763

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 25

(எதிரிகளால்) சிறை பிடிக்கப்பட்டவரின் வாரிசுரிமை.49

(பிரபல நீதிபதி) ஷுரைஹ் பின் ஹாரிஸ் (ரஹ்) அவர்கள், எதிரிகளின் கையில் சிறைக் கைதியாய் உள்ளவருக்கு வாரிசுரிமை அளித்து வந்தார்கள். மேலும், (மற்றவர்களை விட) அவருக்குத்தான் அ(ந்தச் சொத்)து மிகவும் தேவை என்று கூறுவார்கள்.

உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: சிறைக் கைதியின் மரண சாசனம், அடிமை விடுதலை, தனது செல்வத்தில் அவன் மேற்கொள்ளும் இதரப் பொருளாதார நடிவடிக்கைகள் ஆகியவற்றை, அவன் மதம் மாறாமல் இருக்கும்வரை அனுமதியுங்கள். ஏனெனில், அது அவனது செல்வம்; அதில் தான் விரும்பியவாறு அவன் செயல்படலாம்.

6763. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறந்துவிட்ட) ஒருவர் ஒரு செல்வத்தை விட்டுச்சென்றால் அது அவரின் வாரிசுகளுக்குரியதாகும். ஒருவர் (தம்மைத் தவிர வேறு திக்கற்ற) தம் மனைவி மற்றும் மக்களை விட்டுச்சென்றால் அவர்களைப் பராமரிப்பது (மக்கள் தலைவரான) எம்முடைய பொறுப்பாகும்.

«مَنْ تَرَكَ مَالًا فَلِوَرَثَتِهِ، وَمَنْ تَرَكَ كَلًّا فَإِلَيْنَا»


Bukhari-6761

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 24

ஒரு கூட்டத்தாரால் விடுதலை செய்யப்பட்ட அடிமை அவர்களைச் சேர்ந்தவனே. ஒரு கூட்டத்தாரின் சகோதரி மகன் அவர்களைச் சேர்ந்தவனே!

6761. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

‘ஒரு கூட்டத்தாரால் விடுதலை செய்யப் பட்ட அடிமை அவர்களில் உள்ளவனே’ என்றோ, ‘இதைப் போன்றோ’இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.48

Book : 86


«مَوْلَى القَوْمِ مِنْ أَنْفُسِهِمْ» أَوْ كَمَا قَالَ


Bukhari-6760

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6760. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

வெள்ளியை(க் கிரயமாக)க் கொடுத்து (விலைக்கு வாங்கி, விடுதலை எனும்) பேருபகாரம் செய்தவருக்கே (அடிமைக்கு) வாரிசாகும் உரிமை உண்டு.

என ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

Book :86


«الوَلاَءُ لِمَنْ أَعْطَى الوَرِقَ، وَوَلِيَ النِّعْمَةَ»


Bukhari-6758

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6758. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நான் பரீராவை விலைக்கு வாங்க விரும்பினேன். அப்போது பரீராவின் எசமானர்கள் அவளுடைய வாரிசுரிமை தங்களுக்கே உரியது என்று நிபந்தனை விதித்தார்கள். நான் இது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் சொன்னேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அவளை நீ விடுதலை செய்! ஏனெனில், வெள்ளியைக் கொடுத்(து விலைக்கு வாங்கி விடுதலை செய்)தவருக்கே வாரிசுரிமை உரியது’ என்றார்கள்.

எனவே, நான் பரீராவை (விலைக்கு வாங்கி) விடுதலை செய்தேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பரீராவை அழைத்து, அவள் தன்னுடைய கணவரிடமிருந்து (பிரிந்துவிட) விருப்ப உரிமையளித்தார்கள். அப்போது பரீரா, ‘அவர் எனக்கு இவ்வளவு இவ்வளவு (செல்வம்) தந்தாலும் நான் அவருடன் சேர்ந்து வாழமாட்டேன்’ என்று கூறி தனித்து வாழ்வதையே தேர்ந்தெடுத்தார்.

என அஸ்வத் (ரஹ்) அறிவித்தார்.46

Book :86


اشْتَرَيْتُ بَرِيرَةَ، فَاشْتَرَطَ أَهْلُهَا وَلاَءَهَا. فَذَكَرَتْ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَعْتِقِيهَا، فَإِنَّ الوَلاَءَ لِمَنْ أَعْطَى الوَرِقَ» قَالَتْ: فَأَعْتَقْتُهَا. قَالَتْ: فَدَعَاهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَيَّرَهَا مِنْ زَوْجِهَا، فَقَالَتْ: لَوْ أَعْطَانِي كَذَا وَكَذَا مَا بِتُّ عِنْدَهُ، فَاخْتَارَتْ نَفْسَهَا قَالَ: وَكَانَ زَوْجُهَا حُرًّا


Bukhari-6757

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 22

ஒருவரின் உதவியால் மற்றொருவர் இஸ்லாத்தை ஏற்றால் (இவருக்கு அவர் வாரிசாவாரா?)

(இஸ்லாத்தை ஏற்க உதவிய) அவருக்கு வாரிசுரிமை இல்லை என்றே ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கருதிவந்தார்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் விடுதலை செய்தவருக்கே (அடிமையின் சொத்தில்) வாரிசுரிமை உண்டு என்று தான் கூறினார்கள்.45

நபி (ஸல்) அவர்கள் கூறியதாகத் தமீமுத்தாரீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: (இஸ்லாத்தை ஏற்க உதவியாக இருந்த) அவரே இவருடைய வாழ்விலும் சாவிலும் மனிதர்களிலேயே மிகவும் நெருக்கமான (உரிமையுடைய)வர் ஆவார். (புகாரியாகிய நான் கூறுகின்றேன்:) இது சரியான ஹதீஸா என்பதில் கருத்துவேறுபாடு காணப்படுகிறது.

6757. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (பரீரா எனும்) ஓர் அடிமைப் பெண்ணை விலைக்கு வாதங்கி விடுதலை செய்ய விரும்பினார்கள். பரீராவின் எசமானர்களோ ‘பரீராவின் வாரிசுரிமை எங்களுக்கே வேண்டுமென்ற நிபந்தனையின் பேரில்

أَرَادَتْ أَنْ تَشْتَرِيَ جَارِيَةً تُعْتِقُهَا، فَقَالَ أَهْلُهَا: نَبِيعُكِهَا عَلَى أَنَّ وَلاَءَهَا لَنَا، فَذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «لاَ يَمْنَعُكِ ذَلِكِ، فَإِنَّمَا الوَلاَءُ لِمَنْ أَعْتَقَ»


Bukhari-6756

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6756. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் ‘(முன்னாள் அடிமையின் சொத்திற்கு) வாரிசாகும் உரிமையை விற்பதற்கும், அதை அன்பளிப்புச் செய்வதற்கும் தடை விதித்தார்கள்.44

Book :86


«نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ الوَلاَءِ وَعَنْ هِبَتِهِ»


Bukhari-6755

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 21

விடுதலை செய்த எசமானர்களின் உறவிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் அடிமை பாவி ஆவான்.

6755. யஸீத் இப்னு ஷரீக் அத்தைமீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

அலீ (ரலி) அவர்கள், ‘நாங்கள் ஓதி வருகிற அல்லாஹ்வின் வேதத்தையும் (நபியவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற) இந்த ஏட்டையும் தவிர (எழுத்து வடிவிலான மார்க்கச் சட்டம்) வேறெதுவும் (நபியின் குடும்பத்தாரான) எங்களிடம் இல்லை’ என்று கூறிவிட்டு, அந்த ஏட்டை வெளியே எடுத்தார்கள். அதில் காயங்களுக்கான தண்டனை குறித்தும் (உயிரீட்டிற்காகவும் ஸகாத்தாகவும் வழங்கப்படும்) ஒட்டகங்களின் வயது குறித்தும் எழுதப்பட்டிருந்தன. மேலும், அதில் (பின்வருமாறு குறிப்பிடப்பட்டு) இருந்தது: மதீனா நகரம் ‘அய்ர்’ எனும் மலையிலிருந்து ‘ஸவ்ர்’ மலை வரை புனிதமானதாகும். அதில் யார் (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக ஒன்றை உருவாக்குகிறானே, (அவ்வாறு) புதிதாக ஒன்றை உருவாக்குகிறவனுக்கு அடைக்கலம் அளிக்கிறானோ அவன் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். மேலும்,

مَا عِنْدَنَا كِتَابٌ نَقْرَؤُهُ إِلَّا كِتَابُ اللَّهِ غَيْرَ هَذِهِ الصَّحِيفَةِ، قَالَ: فَأَخْرَجَهَا، فَإِذَا فِيهَا أَشْيَاءُ مِنَ الجِرَاحَاتِ وَأَسْنَانِ الإِبِلِ، قَالَ: وَفِيهَا: «المَدِينَةُ حَرَمٌ مَا بَيْنَ عَيْرٍ إِلَى ثَوْرٍ، فَمَنْ أَحْدَثَ فِيهَا حَدَثًا، أَوْ آوَى مُحْدِثًا، فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ، لاَ يُقْبَلُ مِنْهُ يَوْمَ القِيَامَةِ صَرْفٌ وَلاَ عَدْلٌ. وَمَنْ وَالَى قَوْمًا بِغَيْرِ إِذْنِ مَوَالِيهِ، فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ، لاَ يُقْبَلُ مِنْهُ يَوْمَ القِيَامَةِ صَرْفٌ وَلاَ عَدْلٌ. وَذِمَّةُ المُسْلِمِينَ وَاحِدَةٌ، يَسْعَى بِهَا أَدْنَاهُمْ، فَمَنْ أَخْفَرَ مُسْلِمًا فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ، لاَ يُقْبَلُ مِنْهُ يَوْمَ القِيَامَةِ صَرْفٌ وَلاَ عَدْلٌ»


Bukhari-6754

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6754. அஸ்வத் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

ஆயிஷா (ரலி) அவர்கள் (அடிமைப் பெண்ணாயிருந்த) பரீராவை விடுதலை செய்வதற்காக விலைக்கு வாங்க விரும்பினார்கள். பரீராவின் எசமானார்கள் ‘பரீராவின் வாரிசுரிமை தங்களுக்கே இருக்கவேண்டும்’ என நிபந்தனையிட்டார்கள். எனவே, ஆயிஷா (ரலி) அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! விடுதலை செய்வதற்காக நான் பரீராவை விலைக்கு வாங்க விரும்பினேன். பரீராவின் எசமானர்களோ அவளுடைய வாரிசுரிமை தங்களுக்கே உரியது என்று நிபந்தனையிடுகிறார்கள்’ என்றார்கள்.

அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘(பரீராவை) விலைக்கு வாங்கி) விடுதலை செய்! ஏனெனில், (பொதுவாக) விடுதலை செய்தவருக்கே (அடிமையின் சொத்தில்) வாரிசுரிமை உண்டு’ அல்லது ‘விலையைக் கொடுத்துவிடு’ என்றார்கள். எனவே, ஆயிஷா(ரலி) அவர்கள் பரீராவை விலைக்கு வாங்கி விடுதலை செய்தார்கள்.

(தொடர்ந்து கணவர் முஃகீஸுடன் சேர்ந்து வாழ, அல்லது திருமண உறவை முறித்துக்கொள்ள) பரீராவிற்கு விருப்ப உரிமை அளிக்கப்பட்டது. அப்போது பரீரா தன்னுடைய விருப்பத்திற்கேற்ப தனித்து) வாழ்வதையே

أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، اشْتَرَتْ بَرِيرَةَ لِتُعْتِقَهَا، وَاشْتَرَطَ أَهْلُهَا وَلاَءَهَا، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي اشْتَرَيْتُ بَرِيرَةَ لِأُعْتِقَهَا، وَإِنَّ أَهْلَهَا يَشْتَرِطُونَ وَلاَءَهَا، فَقَالَ: «أَعْتِقِيهَا، فَإِنَّمَا الوَلاَءُ لِمَنْ أَعْتَقَ» أَوْ قَالَ: «أَعْطَى الثَّمَنَ» قَالَ: فَاشْتَرَتْهَا فَأَعْتَقَتْهَا، قَالَ: وَخُيِّرَتْ فَاخْتَارَتْ نَفْسَهَا، وَقَالَتْ: لَوْ أُعْطِيتُ كَذَا وَكَذَا مَا كُنْتُ مَعَهُ


Bukhari-6753

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 20

உன் மீது யாருக்கும் வாரிசுரிமை கிடையாது’ என்ற நிபந்தனையின் பேரில் விடுதலை செய்யப்பட்ட அடிமைக்கு (-சாயிபாவுக்கு), வாரிசு யார்? 42

6753. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்.

‘உன் மீது யாருக்கும் வாரிசுரிமை கிடையாது’ என்ற நிபந்தனையின் பேரில் அடிமைகளை முஸ்லிம்கள் விடுதலை செய்வதில்லை. அறியாமைக் காலத்தவர்தாம் அவ்வாறு விடுதலை செய்துவந்தனர்.

Book : 86


«إِنَّ أَهْلَ الإِسْلاَمِ لاَ يُسَيِّبُونَ، وَإِنَّ أَهْلَ الجَاهِلِيَّةِ كَانُوا يُسَيِّبُونَ»


Next Page » « Previous Page