Category: பைஹகீ – தலாஇலுன் நுபுவ்வஹ்

Dala’il-Annubuwwah-Bayhaqi

Dalail-Annubuwwah-Bayhaqi-2735

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

அலீ (ரலி) அவர்களின் காலத்தில் நியமிக்கப்படும் இரு சட்டஆலோசகர்களைப் பற்றிய (முன்னறிவிப்பு) செய்தி.

2735. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பனூஇஸ்ராயீல் மக்கள் (தங்களுக்குள்) கருத்துவேறுபாடு கொண்டனர். எனவே அவர்கள் இரு சட்டஆலோசகர்களை நியமித்தனர். அவ்விரு சட்டஆலோசகர்களும்  வழிகெட்டு, மக்களையும் வழிகெடுத்தனர்.

இதுபோன்று என்னுடைய இந்தச் சமுதாயமும் கருத்துவேறுபாடு கொள்வர். அவர்கள் இரு சட்டஆலோசகர்களை நியமிப்பார்கள். அவ்விரு சட்டஆலோசகர்களும் வழிகெட்டு, தங்களைப் பின்பற்றுவோரையும் வழிகெடுப்பார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)


«إِنَّ بَنِي إِسْرَائِيلَ اخْتَلَفُوا فَلَمْ يَزَلِ اخْتِلَافُهُمْ بَيْنَهُمْ حَتَّى بَعَثُوا حَكَمَيْنِ فَضَلَّا وَأَضَلَّا، وَإِنَّ هَذِهِ الْأُمَّةَ سَتَخْتَلِفُ فَلَا يَزَالُ اخْتِلَافُهُمْ بَيْنَهُمْ حَتَّى يَبْعَثُوا حَكَمَيْنِ ضَلَّا وَضَلَّ مَنِ اتَّبَعْهُمَا»


Dalail-Annubuwwah-Bayhaqi-913

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

913. பத்ருப் போர் அன்று நபிகள் நாயகத்துடன் அபூ லுபாபா, அலி பின் அபீதாலிப் ஆகிய இருவரும் ஒட்டகத் தோழராக இருந்தனர். நபிகள் நாயகத்தின் முறை வந்த போது ‘உங்களுக்காக நாங்கள் நடக்கிறோம்’ என இருவரும் கூறினார்கள். ‘நீங்கள் என்னை விட வலிமையானவரும் அல்லர். நான் உங்களை விட (இறைவனின்) கூலியில் தேவையற்றவனும் அல்லன்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)


كُنَّا يَوْمَ بَدْرٍ نَتَعَاقَبُ ثَلَاثَةٍ عَلَى بَعِيرٍ، فَكَانَ عَلِيٌّ وَأَبُو لُبَابَةَ زَمِيلَيْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَانَ إِذَا كَانَتْ عَقَبَةُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولَانِ لَهُ: ارْكَبْ حَتَّى نَمْشِيَ، فَيَقُولُ: «إِنِّي لَسْتُ بِأَغْنَى عَنِ الْأَجْرِ مِنْكُمَا، وَلَا أَنْتُمَا بِأَقْوَى عَلَى الْمَشْيِ مِنِّي»


Dalail-Annubuwwah-Bayhaqi-2658

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

2658. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள், ஸாரியா என்பவரின் தலைமையில் ஒரு படையை போருக்கு அனுப்பினார்கள். (சில நாட்களுக்கு பிறகு) உமர் (ரலி) அவர்கள் ஜுமுஆ தினத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கையில் தன் உரையின் இடையே, “ஸாரியாவே அந்த மலைக்குள் செல்! ஸாரியாவே அந்த மலைக்குள் செல்!” என்று கூறினார்கள்.

பிறகு, படையின் தூதர் வந்தார். அவர் உமர் (ரலி) அவர்களிடம், இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நாங்கள் போரில் எதிரிகளிடம் சண்டையிட்டோம். அவர்கள் எங்களை தோற்கடிக்கும் நிலைக்கு சென்று விட்டனர். அப்போது ஒருவர், “ஸாரியாவே! அந்த மலைக்குள் செல்! என்று கத்தினார். எனவே நாங்கள், எங்கள் முதுகுகளை மலையை நோக்கியவர்களாக பின்வாங்கி வந்து சண்டையிட்டோம். அதனால் அல்லாஹ் அவர்களை தோல்வியுறச் செய்தான்” என்று கூறினார். அப்போது நாங்கள், உமர் (ரலி) அவர்களே! நீங்கள் தானே அவ்வாறு கத்தினீர்கள்! என்று கூறினோம்.


أَنَّ عُمَرَ بَعَثَ جَيْشًا وَأَمَّرَ عَلَيْهِمْ رَجُلًا يُدْعَى سَارِيَةَ فَبَيْنَمَا عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ يَخْطُبُ فَجَعَلَ يَصِيحُ: يَا سَارِيَ , الْجَبَلَ، فَقَدِمَ رَسُولٌ مِنَ الْجَيْشِ فَقَالَ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ , لَقِينَا عَدُوَّنَا فَهَزَمُونَا , فَإِذَا صَائِحٌ يَصِيحُ: يَا سَارِيَ , الْجَبَلَ , فَأَسْنَدْنَا ظُهُورَنَا إِلَى الْجَبَلِ فَهَزَمَهُمُ اللهُ , فَقُلْنَا لِعُمَرَ: كُنْتَ تَصِيحُ بِذَلِكَ.

قَالَ ابْنُ عَجْلَانَ وَحَدَّثَنَا إِيَاسُ بْنُ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ بِذَلِكَ , وَاللهُ تَعَالَى أَعْلَمُ


Dalail-Annubuwwah-Bayhaqi-614

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

614. இஸ்லாத்தில் முதல் ஷஹீத் (உயிர்த் தியாகி) அம்மார் (ரலி) அவர்களின் தாயார் ஸுமைய்யா (ரலி) ஆவார். அவரின் மர்ம உறுப்பில் ஈட்டியை குத்தி கொன்றான் அபூஜஹ்ல்.

அறிவிப்பவர்: முஜாஹித் (ரஹ்)


«أَوَّلُ شَهِيدٍ كَانَ فِي الْإِسْلَامِ اسْتُشْهِدَ أُمُّ عَمَّارٍ سُمَيَّةُ طَعَنَهَا أَبُو جَهْلٍ بِحَرْبَةٍ فِي قُبُلِهَا»


Dalail-Annubuwwah-Bayhaqi-3181

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3181. நபி (ஸல்) அவர்கள் ஸஃபர் மாதம் 22 ஆம் நாள் திங்கள் கிழமை நோயுற்றார்கள். ரைஹானா என்ற பெயருடைய அவர்களின் மகளிடம் இருக்கும் போது அவர்களுக்கு நோய் ஆரம்பமானது. (இவர் யூத சமுதாயத்தை சேர்ந்த கைதி ஆவார்). முதலில் சனிக்கிழமை நோயுற்றார்கள். ஹிஜ்ரி 10 ம் வருடம், ரபீஉல் அவ்வல் 10 ம் நாள் திங்கள்கிழமை மரணித்தார்கள்.

அறிவிப்பவர்: சுலைமான் பின் தர்கான் அத்தைமீ


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرِضَ لِاثْنَتَيْنِ وَعِشْرِينَ لَيْلَةً مِنْ صَفَرٍ، وَبَدَأَهُ وَجَعُهُ عِنْدَ وَلِيدَةٍ لَهُ، يُقَالُ لَهَا رَيْحَانَةُ كَانَتْ مِنْ سَبْيِ الْيَهُودِ، وَكَانَ أَوَّلُ يَوْمٍ مَرِضَ فِيهِ يَوْمَ السَّبْتِ، وَكَانَتْ وَفَاتُهُ الْيَوْمَ الْعَاشِرَ، يَوْمَ الْإِثْنَيْنِ لِلَيْلَتَيْنِ خَلَتَا مِنْ شَهْرِ رَبِيعٍ الْأَوَّلِ، لِتَمَامِ عَشْرِ سِنِينَ مِنْ مَقْدَمِهِ الْمَدِينَةَ


« Previous Page