4758. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அய்யாமுத் தஷ்ரீக்” (துல்ஹஜ் 11,12,13 ஆகிய) நாட்கள் அனைத்தும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும்.
அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)
«كُلُّ أَيَّامِ التَّشْرِيقِ ذَبْحٌ»
Sunan al-Daraqutni
4758. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அய்யாமுத் தஷ்ரீக்” (துல்ஹஜ் 11,12,13 ஆகிய) நாட்கள் அனைத்தும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும்.
அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)
«كُلُّ أَيَّامِ التَّشْرِيقِ ذَبْحٌ»
4762. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவருக்கு வசதி இருந்தும் அவர் குர்பானி கொடுக்கவில்லையென்றால் அவர் நம்முடைய (ஈதுல் அழ்ஹா) தொழும் இடத்திற்கு வரவே வேண்டாம்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«مَنْ وَجَدَ مِنْكُمْ سَعَةً فَلَمْ يُضَحِّ فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا»
4743. யாருக்கு வசதி இருந்தும் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் நம்முடைய பள்ளிவாசல்களுக்கு வரவே வேண்டாம் என்று அபூஹுரைரா (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்)
«مَنْ وَجَدَ سَعَةً وَلَمْ يُضَحِّ فَلَا يَقْرَبْنَا فِي مَسَاجِدِنَا»
1228.
«أُمُّ الْقُرْآنِ عِوَضٌ مِنْ غَيْرِهَا وَلَيْسَ غَيْرُهَا مِنْهَا بِعِوَضٍ».
3781.
الْمَرْأَةُ تَقُولُ لِزَوْجِهَا: أَطْعِمْنِي أَوْ طَلِّقْنِي , وَيَقُولُ عَبْدُهُ: أَطْعِمْنِي وَاسْتَعْمِلْنِي , وَيَقُولُ وَلَدُهُ: إِلَى مَنْ تَكِلُنَا؟
3780. தேவை போக எஞ்சியதை தர்மம் செய்வதே சிறந்ததாகும். (வாங்கும்) தாழ்ந்த கையை விட (கொடுக்கும்) உயர்ந்த கையே மேலானது. மேலும் முதலில் உமது வீட்டாரிடமிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக!
நபி (ஸல்) அவர்களிடத்தில், “யாருக்கு நான் செலவிடுவது?” என்று கேட்டதற்கு “உனது மனைவிக்குத்தான்” என்று கூறினார்கள். மேலும், “எனக்கு உணவளி அல்லது என்னை விவாகரத்து செய்துவிடு என்று (சொல்லாமல்) சொல்லிக் கொண்டிருக்கிறாள். அதே போன்று உனது வேலையாளும் எனக்கு உணவளி, என்னை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறான்..” என்று நபியவர்கள் கூறினார்கள்…..
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«خَيْرُ الصَّدَقَةِ مَا كَانَ عَنْ ظَهْرِ غِنًى وَالْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى وَابْدَأْ بِمَنْ تَعُولُ»
قَالَ: وَمَنْ أَعُولُ يَا رَسُولَ اللَّهِ؟ , قَالَ: ” امْرَأَتُكَ تَقُولُ: أَطْعِمْنِي وَإِلَّا فَارِقْنِي , خَادِمُكَ يَقُولُ: أَطْعِمْنِي وَاسْتَعْمِلْنِي , وَلَدُكَ يَقُولُ: إِلَى مَنْ تَتْرُكُنِي؟
1342. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தனது நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறாதவருக்கு தொழுகை இல்லை.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)
«لَا صَلَاةَ لِمَنْ لَمْ يُصَلِّ عَلَى نَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ».
229. உளூ இல்லாதவருக்கு தொழுகை இல்லை. அல்லாஹ்வின் பெயர் கூறி உளூச் செய்யாதவருக்கு உளூ இல்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)
«لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ , وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ».
228. உளூ இல்லாதவருக்கு தொழுகை இல்லை. அல்லாஹ்வின் பெயர் கூறி உளூச் செய்யாதவருக்கு உளூ இல்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)
«لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ , وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ» , الْحَدِيثَ
சமீப விமர்சனங்கள்