Category: தாரகுத்னீ

Sunan al-Daraqutni

Daraqutni-2693

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2693. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் இறந்த பின், ஹஜ் செய்பவர் என்னுடைய மண்ணறையை தரிசிக்க வந்தால் நான் வாழும் போது என்னை சந்தித்தவரைப் போன்றவராவார்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


«مَنْ حَجَّ فَزَارَ قَبْرِي بَعْدَ وَفَاتِي فَكَأَنَّمَا زَارَنِي فِي حَيَاتِي»


Daraqutni-2694

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2694. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் இறந்தப் பின் என்னை (என் கப்ரை) சந்திப்பவர் நான் உயிரோடிருக்கும்போது என்னை சந்தித்தவரைப் போன்றவராவார். மேலும், (மக்கா, மதீனா ஆகிய) இரண்டு புனிதத் தலங்களில் யார் மரணிக்கிறாரோ அவர் கியாமத் நாளில் அச்சமற்றவர்களில் (ஒருவராக) எழுப்பப்படுவார்.

அறிவிப்பவர் : ஹாத்திப் (ரலி)


«مَنْ زَارَنِي بَعْدَ مَوْتِي فَكَأَنَّمَا زَارَنِي فِي حَيَاتِي , وَمَنْ مَاتَ بِأَحَدِ الْحَرَمَيْنِ بُعِثَ مِنَ الْآمِنِينَ يَوْمَ الْقِيَامَةِ»


Daraqutni-4606

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4606. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் உங்களிடம் எனக்குப் பின் இரண்டை விட்டுச் செல்கிறேன். அதற்குப் பின் நீங்கள் வழிதவற மாட்டீர்கள். 1. அல்லாஹ்வின் வேதம் (திருக்குர்ஆன்). 2 . அவனுடைய நபியின் வழிமுறைகள். நிச்சயமாக இவ்விரண்டும் ஹவ்ளுல் கவுஸரிடம், என்னை வந்தடையும் வரை ஒன்றையொன்று பிரியாது.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


خَلَّفْتُ فِيكُمْ شَيْئَيْنِ لَنْ تَضِلُّوا بَعْدَهُمَا: كِتَابُ اللَّهِ وَسُنَّتِي , وَلَنْ يَفْتَرِقَا حَتَّى يَرِدَا عَلَيَّ الْحَوْضَ


Daraqutni-1820

ஹதீஸின் தரம்: Pending

1820. நாங்கள் இறந்தவரைக் குளிப்பாட்டி விட்டு சிலர் குளிப்பவர்களாகவும், மற்றும் சிலர் குளிக்காதவர்களாகவும் இருந்தோம் என இப்னு உமர் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர் : நாஃபிஉ (ரஹ்)


«كُنَّا نُغَسِّلُ الْمَيِّتَ فَمِنَّا مَنْ يَغْتَسِلُ وَمِنَّا مَنْ لَا يَغْتَسِلُ»


Daraqutni-1643

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1643. “வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஏழு ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஅய்யூப் அல்அன்ஸாரி (ரலி)


«الْوِتْرُ حَقٌّ فَمَنْ شَاءَ أَوْتَرَ بِسَبْعٍ , وَمَنْ شَاءَ أَوْتَرَ بِخَمْسٍ , وَمَنْ شَاءَ أَوْتَرَ بِثَلَاثٍ , وَمَنْ شَاءَ أَوْتَرَ بِوَاحِدَةٍ»


Daraqutni-1642

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1642. “வித்ரு தொழுகை ஐந்து அல்லது மூன்று அல்லது ஒரு ரக்அத் ஆகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ அய்யூப் (ரலி)


«الْوِتْرُ خَمْسٌ أَوْ ثَلَاثٌ أَوْ وَاحِدَةٌ»


Daraqutni-1641

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1641. “வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் வித்ர் தொழட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி)


«الْوِتْرُ حَقٌّ فَمَنْ شَاءَ فَلْيُوتِرْ بِخَمْسٍ , وَمَنْ شَاءَ فَلْيُوتِرْ بِثَلَاثٍ , وَمَنْ شَاءَ فَلْيُوتِرْ بِوَاحِدَةٍ»


Daraqutni-1640

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1640. “வித்ரு தொழுகை அவசியமானதாகும்; கட்டாயமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் வித்ர் தொழட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ அய்யூப் (ரலி)

 

இமாம் தாரகுத்னீ கூறுகிறார்:

முஹம்மது பின் ஹஸ்ஸான் அறிவிக்கும் (வித்ரு வாஜிப்) வித்ரு தொழுகை கட்டாயம் என்பது சரியானதல்ல. ஸுஃப்யான் பின் உயைனாவிடமிருந்து அறிவிக்கும் மற்றவர்கள் யாரும் இப்படி அறிவிக்கவில்லை.


«الْوِتْرُ حَقٌّ وَاجِبٌ فَمَنْ شَاءَ أَوْتَرَ بِثَلَاثٍ فَلْيُوتِرْ , وَمَنْ شَاءَ أَنْ يُوتِرَ بِوَاحِدَةٍ فَلْيُوتِرْ بِوَاحِدَةٍ»


Daraqutni-1646

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1646. “வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் வித்ர் தொழட்டும்; சைகை செய்துதான் தொழ முடியும் என்றால் அவர் சைகை செய்து (தொழுது) கொள்ளட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி)


«الْوِتْرُ حَقٌّ فَمَنْ شَاءَ فَلْيُوتِرْ بِخَمْسٍ , وَمَنْ شَاءَ فَلْيُوتِرْ بِثَلَاثٍ , وَمَنْ شَاءَ فَلْيُوتِرْ بِرَكْعَةٍ , وَمَنْ لَمْ يَسْتَطِعْ إِلَّا أَنْ يُومِئَ فَلْيُومِئْ»


Next Page » « Previous Page