Category: தாரகுத்னீ
Sunan al-Daraqutni
Daraqutni-1644
1644. “நீ ஐந்து ரக்அத் வித்ர் தொழு! ஐந்தை, நீ தொழ முடியாவிட்டால் மூன்று ரக்அத் வித்ர் தொழு ; மூன்றை, நீ தொழ முடியாவிட்டால் ஒரு ரக்அத் வித்ர் தொழு ; நீ நாடினால் சைகை செய்து (தொழுது) கொள்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி)
«أَوْتِرْ بِخَمْسٍ , فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَبِثَلَاثٍ , فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَوَاحِدَةٍ , فَإِنْ شِئْتَ فَأَوْمِئْ إِيمَاءً»
Daraqutni-1081
1081. நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார். அவர் தனியாக தொழ நின்றபோது நபி (ஸல்) அவர்கள், “இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம் இவருக்கு லாபம் அளிக்கக் கூடியவர் யார்?” என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
أَنَّ رَجُلًا جَاءَ وَقَدْ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَامَ يُصَلِّي وَحْدَهُ , فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَتَّجِرُ عَلَى هَذَا فَلْيُصَلِّي مَعَهُ؟»
Daraqutni-315
عَشْرٌ مِنَ الْفِطْرَةِ: قَصُّ الشَّارِبِ , وَإِعْفَاءُ اللِّحْيَةِ , وَالسِّوَاكُ , وَالِاسْتِنْشَاقُ بِالْمَاءِ , وَقَصُّ الْأَظْفَارِ , وَغَسْلُ الْبَرَاجِمِ , وَنَتْفُ الْإِبْطِ , وَحَلْقُ الْعَانَةِ وَانْتِقَاصُ الْمَاءِ “.
قَالَ زَكَرِيَّا: قَالَ مُصْعَبٌ: نَسِيتُ الْعَاشِرَةَ إِلَّا أَنْ يَكُونَ الْمَضْمَضَةُ.
رَوَاهُ خَارِجَةُ , عَنْ زَكَرِيَّا , وَقَالَ: «وَانْتِقَاصُ الْمَاءِ يَعْنِي الِاسْتِنْجَاءَ بِالْمَاءِ»
Daraqutni-1101
1101. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (தொழுகையில்) தமது வலது கையை இடது கையின் மேல் வைத்ததை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاضِعًا يَمِينَهُ عَلَى شِمَالِهِ فِي الصَّلَاةِ»
Daraqutni-1098
1098. தொழுகையில் ஒரு முன் கையை மற்றொரு முன் கையால் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ வாயில்
«وَضْعُ الْكَفِّ عَلَى الْكَفِّ فِي الصَّلَاةِ مِنَ السُّنَّةِ»
Daraqutni-1103
1103. தொழுகையில் (இடது) முன் கை மீது (வலது) முன் கையை வைத்து இரண்டையும் தொப்புளுக்குக் கீழே வைப்பது நபிவழியாகும் என அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : நுஃமான் பின் ஸஃத்
«إِنَّ مِنْ سُنَّةِ الصَّلَاةِ وَضْعَ الْيَمِينِ عَلَى الشِّمَالِ تَحْتَ السُّرَّةِ»
Daraqutni-1102
1102. தொழுகையில் (இடது) முன் கை மீது (வலது) முன் கையை வைத்து இரண்டையும் தொப்புளுக்குக் கீழே வைப்பது நபிவழியாகும் என அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஜுஹைஃபா (ரலி)
«إِنَّ مِنَ السُّنَّةِ فِي الصَّلَاةِ وَضْعَ الْكَفِّ عَلَى الْكَفِّ تَحْتَ السُّرَّةِ»
Daraqutni-3749
3749. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர் ஒரு தீனாரும், இரத்தம் வருவது நின்று குளிப்பதற்கு முன் உடலுறவு கொண்டவர் அரை தீனாரும் தர்மம் செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…
إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَمَرَ الْوَاطِئَ فِي الْعِرَاكِ بِصَدَقَةٍ دِينَارٍ , وَإِنْ وَطِئَهَا بَعْدَ أَنْ تَطْهُرَ وَلَمْ تَغْتَسِلْ بِصَدَقَةٍ نِصْفِ دِينَارٍ»
Daraqutni-3748
3748. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர், அந்த நேரத்தில் இரத்தம் சிகப்பு நிறத்தில் வந்திருந்தால் ஒரு தீனாரும், மஞ்சள் நிறத்தில் வந்திருந்தால் அரை தீனாரும் தர்மம் செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
«إِذَا كَانَ الدَّمُ عَبِيطًا فَلْيَتَصَدَّقْ بِدِينَارٍ , وَإِنْ كَانَ صُفْرَةً فَبِنِصْفِ دِينَارٍ»
சமீப விமர்சனங்கள்