Category: தாரகுத்னீ

Sunan al-Daraqutni

Daraqutni-4017

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4017. ராபிஃவு பின் ஸினான் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள். அவருடைய மனைவி இஸ்லாத்தைத் தழுவ மறுத்தாள். (அவர்களுக்கு) பால்குடி மறந்த அல்லது அதற்கு ஒத்த நிலையில் (ஒரு பெண் குழந்தை ) இருந்தது. அப்பெண் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ”என்னுடைய மகள்” என்றாள் . ராபிஃவு (ரலி) அவர்கள் ”என்னுடைய மகள்” என்றார். நபிகள் நாயக் (ஸல்) அவரை ”ஒரு மூலையில் உட்காருமாறு கூறினார்கள். அப்பெண்ணையும் ஒரு மூலையில் உட்காருமாறு கூறினார்கள். அக்குழந்தையை இருவருக்கும் மத்தியில் வைத்து பிறகு ”நீங்கள் இருவரும் அதை அழையுங்கள் என்று கூறினார்கள். அக்குழந்தை தாயின் பக்கம் சென்றது. நபியவர்கள் அல்லாஹ்வே இக்குழந்தைக்கு நேர்வழிகாட்டு என்று கூறினார்கள். அக்குழந்தை தந்தையின் பக்கம் சென்றது. அவர் அக்குழந்தையை எடுத்துக் கொண்டார்

அறிவிப்பவர் : ஜஃஃபர் பின் அப்தில்லாஹ் (ரஹ்)


أَنَّهُ أَسْلَمَ وَأَبَتِ امْرَأَتُهُ أَنْ تَسْلَمَ وَكَانَ لَهُ مِنْهَا ابْنَةٌ تُشَبَّهُ بِالْفَطِيمِ فَخَاصَمَهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَقَالَ: «ضَعَاهَا بَيْنَكُمَا ثُمَّ ادْعُوَاهَا» , فَفَعَلَا فَمَالَتْ إِلَى أُمِّهَا , فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ اهْدِهَا» , فَمَالَتْ إِلَى أَبِيهَا فَأَخَذَهَا


Daraqutni-1921

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1921. மன் நாட்டு மக்களுக்கு மார்க்கத்தைப் போதிப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூ மூசா (ரலி) மற்றும் முஆத் பின் ஜபல் (ரலி) ஆகிய இருவரையும் அந்நாட்டுக்கு அனுப்பிய போது தோல் நீக்கப்பட்ட கோதுமை, தோல் நீக்கப்படாத கோதுமை, காய்ந்த திராட்சை, பேரீச்சம் பழம் ஆகியவற்றில் தவிர (வேறு தானியங்களில்) நீங்கள் ஸகாத் வசூலிக்காதீர்கள் என அவ்விருவரிடமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்…


حِينَ بَعَثَهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْيَمَنِ يُعَلِّمَانِ النَّاسَ أَمْرَ دِينِهِمْ: ” لَا تَأْخُذُوا الصَّدَقَةَ إِلَّا مِنْ هَذِهِ الْأَرْبَعَةِ: الشَّعِيرِ وَالْحِنْطَةِ وَالزَّبِيبِ وَالتَّمْرِ


Daraqutni-1905

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

1905. தோல் நீக்கப்பட்ட கோதுமை, தோல் நீக்கப்படாத கோதுமை, பேரீச்சம் பழம், காய்ந்த திராட்சை, கம்பு ஆகிய ஐந்து தானியங்களில் மட்டுமே ஸகாத் இருப்பதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்…

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி)


سُئِلَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو عَنِ الْجَوْهَرِ , وَالدُّرِّ , وَالْفُصُوصِ , وَالْخَرَزِ , وَعَنْ نَبَاتِ الْأَرْضِ , الْبَقْلِ , وَالْقِثَّاءِ , وَالْخِيَارِ , فَقَالَ: «لَيْسَ فِي الْحَجَرِ زَكَاةٌ , وَلَيْسَ فِي الْبُقُولِ زَكَاةٌ , إِنَّمَا سَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْحِنْطَةِ وَالشَّعِيرِ وَالتَّمْرِ وَالزَّبِيبِ»


Daraqutni-886

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

886. உங்களுடைய குழந்தைகள் ஏழுவயதை அடைந்ததும் அவர்களுடைய படுக்கைகளை பிரித்து விடுங்கள். அவர்கள் பத்து வயதை அடைந்து விடும் போது தொழுகையை விட்டதற்காக அடியுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸப்ரா பின் மஃபத் (ரலி)


«إِذَا بَلَغَ أَوْلَادُكُمْ سَبْعَ سِنِينَ فَفَرِّقُوا بَيْنَ فُرُشِهِمْ , فَإِذَا بَلَغُوا عَشْرَ سِنِينَ فَاضْرِبُوهُمْ عَلَى الصَّلَاةِ»


Daraqutni-888

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

888. உங்கள் குழந்தைகள் ஏழு வயதினராக இருக்கும் போது அவர்களை தொழுகையை நிறைவேற்ற கட்டளையிடுங்கள். பத்து வயதினராக இருக்கும் போது (அவர்கள் தொழாவிட்டால்) அவர்களை அதற்காக அடியுங்கள். மேலும் படுக்கையிலிருந்து பிரித்து வையுங்கள்.…

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)


«مُرُوا صِبْيَانَكُمْ بِالصَّلَاةِ فِي سَبْعِ سِنِينَ وَاضْرِبُوهُمْ عَلَيْهَا فِي عَشْرٍ , وَفَرِّقُوا بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ , وَإِذَا زَوَّجَ الرَّجُلُ مِنْكُمْ عَبْدَهُ أَوْ أَجِيرَهُ فَلَا يَرَيْنَ مَا بَيْنَ رُكْبَتِهِ وَسَرَّتِهِ , فَإِنَّمَا بَيْنَ سُرَّتِهِ وَرُكْبَتِهِ مِنْ عَوْرَتِهِ»


Daraqutni-887

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

887. உங்கள் குழந்தைகள் ஏழு வயதினராக இருக்கும் போது அவர்களை தொழுகையை நிறைவேற்ற கட்டளையிடுங்கள். பத்து வயதினராக இருக்கும் போது (அவர்கள் தொழாவிட்டால்) அவர்களை அதற்காக அடியுங்கள். மேலும் படுக்கையிலிருந்து பிரித்து வையுங்கள்…

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)


«مُرُوا صِبْيَانَكُمْ بِالصَّلَاةِ لِسَبْعٍ , وَاضْرِبُوهُمْ عَلَيْهَا لِعَشْرٍ , وَفَرِّقُوا بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ , وَإِذَا زَوَّجَ أَحَدُكُمْ عَبْدَهُ أَمَتَهُ أَوْ أَجِيرَهُ فَلَا يَنْظُرْ إِلَى مَا دُونَ السُّرَّةِ وَفَوْقَ الرُّكْبَةِ , فَإِنَّ مَا تَحْتَ السُّرَّةِ إِلَى الرُّكْبَةِ مِنَ الْعَوْرَةِ»


Daraqutni-1521

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1521. ஹஜ் அத்தியாயத்தில் இரண்டு ஸஜ்தாக்கள் உள்ளதால் அது சிறப்பிக்கப்பட்டுள்ளதா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ”ஆம்! யார் அவ்விரு வசனங்களின் போதும் ஸஜ்தாச் செய்ய மாட்டாரோ அவர் அவ்விரு வசனங்களையும் ஓத வேண்டாம்” என்று கூறினார்கள்…

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ர­லி)


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ فِي سُورَةِ الْحَجِّ سَجْدَتَانِ؟ قَالَ: «نَعَمْ إِنْ لَمْ تَسْجُدْهُمَا فَلَا تَقْرَأْهُمَا»


Daraqutni-1520

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1520. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (குர்ஆனின்) 15 ஸஜ்தா வசனங்களை என்னிடம் ஓதிக்காட்ட சொன்னார்கள். அவற்றில் (காஃப் எனும் 50 வது அத்தியாயத்தி­லிருந்து குர்ஆனின் கடைசி அத்தியாயம் வரையிலான) முஃபஸ்ஸலான அத்தியாயங்களில் இடம்பெறும் மூன்று வசனங்களும், சூரத்துல் ஹஜ் (எனும்) 22 வது அத்தியாயத்தில் இடம் பெறும் இரண்டு வசனங்களும் (அல்குர்ஆன்: 22:18 , 22:77) அடங்கும்.

அறிவிப்பவர்: அம்ர் பின் ஆஸ் (ரலி­)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَقْرَأَهُ خَمْسَ عَشْرَةَ سَجْدَةً فِي الْقُرْآنِ , مِنْهَا ثَلَاثٌ فِي الْمُفَصَّلِ وَفِي سُورَةِ الْحَجِّ سَجْدَتَيْنِ»


Daraqutni-2279

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2279. மர்வான் பின் ஸாலிம் அல்முகஃப்பஉ கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் தனது தாடியை பிடித்து ஒரு பிடிக்கு அதிகமாக உள்ளதை வெட்டியதைப் பார்த்தேன். மேலும், நோன்பு துறக்கும் போது, தஹபல் ளமவு வப்தல்லத்தில் உரூக்கு வஸபத்தல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ். (பொருள்: தாகம் தணிந்தது, நரம்புகள் நனைந்தன, அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்துவிடும்) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.


رَأَيْتُ ابْنَ عُمَرَ يَقْبِضُ عَلَى لِحْيَتِهِ وَيَقْطَعُ مَا زَادَ عَلَى الْكَفِّ ” قَالَ: وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا أَفْطَرَ: «ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ»


Daraqutni-2213

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2213. சூரியன் உதிப்பதற்கு முன்பு இரவிலேயே யார் (கடமையான) நோன்பு நோற்க நாடவில்லையோ அவருக்கு நோன்பு கிடையாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


«مَنْ لَمْ يُبَيِّتِ الصِّيَامَ قَبْلَ طُلُوعِ الْفَجْرِ فَلَا صِيَامَ لَهُ»


Next Page » « Previous Page