Category: ஸுனன் தாரிமீ

Sunan ad-Darimi

Darimi-1724

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1724. ஸிலது பின் ஸுஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களிடம் இருந்தபோது பொறித்த ஆட்டுக்கறி கொண்டு வந்து வைக்கப்பட்டது. அவர்கள், உண்ணுங்கள் என்று கூறினார்கள். சிலர் விலகிச் சென்று நாங்கள் நோன்பு வைத்துள்ளோம் என்று கூறினர். அதற்கு அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள், சந்தேகத்திற்குரிய நாளில் (ஷஃபானின் முப்பதாம் நாளில்) யார் நோன்பு நோற்கிறாரோ அவர் அபுல்காஸிம்-நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார் என்றுக் கூறினார்கள்.


كُنَّا عِنْدَ عَمَّارِ بْنِ يَاسِرٍ فَأُتِيَ بِشَاةٍ مَصْلِيَّةٍ فَقَالَ: كُلُوا، فَتَنَحَّى بَعْضُ الْقَوْمِ، فَقَالَ: إِنِّي صَائِمٌ. فَقَالَ عَمَّارُ بْنُ يَاسِرٍ: «مَنْ صَامَ الْيَوْمَ الَّذِي يُشَكُّ فِيهِ، فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Darimi-1769

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1769. நபி (ஸல்) அவர்கள் வாந்தி எடுத்தார்கள். உடனே நோன்பை முறித்தார்கள்.” என்று அபுத்தர்தா (ரலி) கூறினார். நான் டமாஸ்கஸ் நகரின் பள்ளிவாசலில் ஸவ்பான் (ரலி) அவர்களைச் சந்தித்து இதுபற்றிக் கூறினேன். அதற்கவர்கள், “அபுத்தர்தா உண்மையே கூறினார். நான் தான் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்வதற்காக தண்ணீரை ஊற்றியவன்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: மஃதான் பின் அபீதல்ஹா (ரஹ்)


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاءَ فَأَفْطَرَ». قَالَ: فَلَقِيتُ ثَوْبَانَ بِمَسْجِدِ دِمَشْقَ فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ: صَدَقَ، أَنَا صَبَبْتُ لَهُ الْوَضُوءَ “

قَالَ عَبْد اللَّهِ: «إِذَا اسْتَقَاءَ»


Darimi-1770

ஹதீஸின் தரம்: Pending

1770. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நோன்பாளிக்கு கட்டுப்படுத்த முடியாமல் (தானாக) வாந்தி வந்தால் அவர் நோன்பை (களாவாக) மீண்டும் நிறைவேற்றுவது கடமை இல்லை. வேண்டுமென்றே வாந்தி எடுத்தால் அவர் நோன்பை (களாவாக) மீண்டும் நிறைவேற்ற வேண்டும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

 


«إِذَا ذَرَعَ الصَّائِمَ الْقَيْءُ وَهُوَ لَا يُرِيدُهُ، فَلَا قَضَاءَ عَلَيْهِ، وَإِذَا اسْتَقَاءَ، فَعَلَيْهِ الْقَضَاءُ»،

قَالَ عِيسَى: «زَعَمَ أَهْلُ الْبَصْرَةِ أَنَّ هِشَامًا أَوْهَمَ فِيهِ، فَمَوْضِعُ الْخِلَافِ هَا هُنَا»


Darimi-1744

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1744. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலியில் எதுவும் குறையாமல் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் அது போன்ற கூலி எழுதப்படும்.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி)


«مَنْ فَطَّرَ صَائِمًا كُتِبَ لَهُ مِثْلُ أَجْرِهِ، إِلَّا أَنَّهُ لَا يَنْقُصُ مِنْ أَجْرِ الصَّائِمِ»


Darimi-2762

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2762.


«كَمْ مِنْ صَائِمٍ لَيْسَ لَهُ مِنْ صِيَامِهِ إِلَّا الظَّمَأُ، وَكَمْ مِنْ قَائِمٍ لَيْسَ لَهُ مِنْ قِيَامِهِ إِلَّا السَّهَرُ»


Darimi-1813

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

1813. நபி (ஸல்) அவர்கள் மற்றவர்களிடம் நோன்பு துறந்தால் “உங்களிடத்தில் நோன்பாளிகள் நோன்பு துறந்துள்ளனர். உங்களின் உணவை நல்லோர்கள் சாப்பிட்டனர். உங்களிடம் வானவர்கள் இறங்குகின்றனர்” என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَفْطَرَ عِنْدَ النَّاسِ، قَالَ: «أَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُونَ، وَأَكَلَ طَعَامَكُمُ الْأَبْرَارُ، وَتَنَزَّلَتْ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ»


Darimi-2051

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2051. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நாய்களும் உங்களைப் போன்ற (உயிருள்ள) சமுதாயங்களில் ஒரு சமுதாயமாக இல்லாவிட்டால் அவைகளை கொல்ல உங்களுக்கு கட்டளையிட்டிருப்பேன். என்றாலும் (மனிதர்களுக்கு தொல்லைதரும்) கன்னங்கரிய நாயை (மட்டும்) கொல்லுங்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)


«لَوْلَا أَنَّ الْكِلَابَ أُمَّةٌ مِنَ الْأُمَمِ لَأَمَرْتُ بِقَتْلِهَا كُلِّهَا، وَلَكِنِ اقْتُلُوا مِنْهَا كُلَّ أَسْوَدَ بَهِيمٍ»،

قَالَ سَعِيدُ بْنُ عَامِرٍ: «الْبَهِيمُ الْأَسْوَدُ كُلُّهُ»


Darimi-1460

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1460. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் ஒரு தொழுகை தொழுவதானது, மற்றப் பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்; (மக்காவிலுள்ள) “மஸ்ஜிதுல் ஹராம்” பள்ளிவாசலைத் தவிர.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)


«صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ، إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ»


Darimi-1458

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1458. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் ஒரு தொழுகை தொழுவதானது, மற்றப் பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளை போன்றதாகும்; (மக்காவிலுள்ள) “மஸ்ஜிதுல் ஹராம்” பள்ளிவாசலைத் தவிர.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)


«صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا، كَأَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ مِنَ الْمَسَاجِدِ، إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ»


Darimi-1459

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1459. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் தொழுவதானது, மற்றப் பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளைவிடச் சிறந்ததாகும்; (மக்காவிலுள்ள) “மஸ்ஜிதுல் ஹராம்” பள்ளிவாசலைத் தவிர.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا، أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ، إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ»


Next Page » « Previous Page