Category: ஸுனன் தாரிமீ

Sunan ad-Darimi

Darimi-2552

ஹதீஸின் தரம்: More Info

2552. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தின் மீது “ஹஸ்வரா” என்ற இடத்தில் இருந்தநிலையில் மக்காவை நோக்கி, “நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! (என்னுடைய சமுதாயத்தினரால்) உன்னை விட்டும் நான் வெளியேற்றப்படாமலிருந்தால் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.) என்று கூறியதை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அதீ (ரலி)


رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ عَلَى رَاحِلَتِهِ وَاقِفًا بِالْحَزْوَرَةِ يَقُولُ: «وَاللَّهِ، إِنَّكِ لَخَيْرُ أَرْضِ اللَّهِ، وَأَحَبُّ أَرْضِ اللَّهِ إِلَى اللَّهِ، وَلَوْلَا أَنِّي أُخْرِجْتُ مِنْكِ مَا خَرَجْتُ»


Darimi-2274

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2274. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் தன் கணவருடன் படுக்கையை(ப் பகிர்ந்து கொள்வதை) வெறுத்து (தனியாக) இரவைக் கழித்தால், (கணவனின் படுக்கைக்கு) அவள் திரும்பும் வரை வானவர்கள் அவளைச் சபிக்கின்றனர்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


«إِذَا بَاتَتِ الْمَرْأَةُ هَاجِرَةً لِفِرَاشِ زَوْجِهَا لَعَنَتْهَا الْمَلَائِكَةُ حَتَّى تَرْجِعَ»


Darimi-212

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

212.


خَطَبَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ: «إِنَّ أَفْضَلَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَشَرَّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلَّ بِدْعَةٍ ضَلَالَةٌ»


Darimi-96

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

96.


صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْفَجْرِ، ثُمَّ وَعَظَنَا مَوْعِظَةً بَلِيغَةً ذَرَفَتْ مِنْهَا الْعُيُونُ، وَوَجِلَتْ مِنْهَا الْقُلُوبُ. فَقَالَ قَائِلٌ: يَا رَسُولَ اللَّهِ، كَأَنَّهَا مَوْعِظَةُ مُوَدِّعٍ؟ فَأَوْصِنَا. فَقَالَ: «أُوصِيكُمْ بِتَقْوَى اللَّهِ وَالسَّمْعِ وَالطَّاعَةِ وَإِنْ كَانَ عَبْدًا حَبَشِيًّا، فَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ بَعْدِي، فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا، فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسَنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ، عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ، وَإِيَّاكُمْ وَالْمُحْدَثَاتِ، فَإِنَّ كُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٌ» وقالَ أَبُو عَاصِمٍ مَرَّةً: «وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الْأُمُورِ فَإِنَّ كُلَّ بِدْعَةٍ ضَلَالَةٌ»


Darimi-2739

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2739. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆஸிம் அவர்களின் தாயாருக்கு “ஆஸியா” (பொருள்:பாவி) என்ற பெயர் வைக்கப்பட்டிருந்தது. அவருக்கு நபி (ஸல்) அவர்கள் ஜமீலா (பொருள் : அழகி) என (மாற்று)ப் பெயர் சூட்டினார்கள்.


«أَنَّ أُمَّ عَاصِمٍ كَانَ يُقَالُ لَهَا عَاصِيَةُ، فَسَمَّاهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَمِيلَةَ»


Darimi-2736

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம் :

நல்ல பெயரை சூட்டுதல்.

2736. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் உங்களுடைய தந்தையின் பெயருடன் உங்களது பெயரால்  நீங்கள் அழைக்கப்படுவீர்கள். ஆகையால் உங்களது பெயர்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள்.

அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)


«إِنَّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ وَأَسْمَاءِ آبَائِكُمْ، فَأَحْسِنُوا أَسْمَاءَكُمْ»


Darimi-2377

ஹதீஸின் தரம்: Pending

2377. ஒரு பெண் ஹஜ் செய்வதாக நேர்ந்துகொண்டு (அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவரின் சகோதரர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இது பற்றி (கூறி என்ன செய்வது என்று) கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உன் சகோதரிக்குக் கடன் இருந்தால் நீ தானே அதை நிறைவேற்றுவாய்?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம் (நானே நிறைவேற்றுவேன்)’ என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று! கடன்கள் நிறைவேற்றப்பட அவனே அதிக உரிமை படைத்தவன்’ என்றார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


أَنَّ امْرَأَةً نَذَرَتْ أَنْ تَحُجَّ، فَمَاتَتْ، فَجَاءَ أَخُوهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلَهُ عَنْ ذَلِكَ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ كَانَ عَلَيْهَا دَيْنٌ، أكُنْتَ قَاضِيَهُ» قَالَ: نَعَمْ، قَالَ: «فَاقْضُوا اللَّهَ، فَاللَّهُ أَحَقُّ بِالْوَفَاءِ»


Darimi-1809

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1809. ஒரு பெண் நோன்பு வைப்பதாக நேர்ந்துகொண்டு (அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவரின் சகோதரர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இது பற்றி (கூறி என்ன செய்வது என்று) கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உன் சகோதரிக்குக் கடன் இருந்தால் நீ தானே அதை நிறைவேற்றுவாய்?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம் (நானே நிறைவேற்றுவேன்)’ என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று! கடன்கள் நிறைவேற்றப்பட அவனே அதிக உரிமை படைத்தவன்’ என்றார்கள். எனவே அவர் தனது சகோதரியின் சார்பாக நோன்பு வைத்தார்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


أَنَّ امْرَأَةً نَذَرَتْ أَنْ تَصُومَ، فَمَاتَتْ فَجَاءَ أَخُوهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ عَنْ ذَلِكَ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ كَانَ عَلَيْهَا دَيْنٌ أَكُنْتَ قَاضِيَهُ؟» قَالَ: نَعَمْ. قَالَ: «فَاقْضُوا اللَّهَ، اللَّهُ أَحَقُّ بِالْوَفَاءِ». قَالَ: فَصَامَ عَنْهَا


Darimi-742

ஹதீஸின் தரம்: More Info

742. நான் அலீ (ரலி) அவர்களை உளூச் செய்யக் கண்டேன். அப்போது அவர்கள், தனது காலணிகள் மீது மஸஹ் செய்தார்கள்.

பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை, இப்போது நான் செய்ததை நீங்கள் பார்த்ததைப் போன்று நான் அவர்களை பார்க்கவில்லையெனில் பாதங்களின் அடிப்பாகந்தான் மேற்பாகத்தைவிட மஸஹ் செய்வதற்கு உரியது என்று கருதியிருப்பேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்து கைர் (ரஹ்)


رَأَيْتُ عَلِيًّا تَوَضَّأَ وَمَسَحَ عَلَى النَّعْلَيْنِ فَوَسَّعَ، ثُمَّ قَالَ: «لَوْلَا أَنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ كَمَا رَأَيْتُمُونِي فَعَلْتُ، لَرَأَيْتُ أَنَّ بَاطِنَ الْقَدَمَيْنِ أَحَقُّ بِالْمَسْحِ مِنْ ظَاهِرِهِمَا»


Darimi-81

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

81. ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் பக்கீ எனும் மய்யவாடியிலிருந்து என்னிடம் வந்தார்கள். நான் அப்போது என் தலையில் வேதனையோடு இருந்தேன். ” என் தலைவலியே! என்று வேதனையில் கூறினேன்” அதை கேட்ட நபி (ஸல்) அவர்கள் என் ஆயிஷாவே! உன் தலைவலியால் நீ சிரமப்பட வேண்டாம் எனக்கு முன் நீ மரணித்தால் உன்னை குளிப்பாட்டி, கஃபன் அணிவித்து, ஜனாஸா தொழுகை நடத்தி, பின்னர் நானே உன்னை நல்லடக்கம் செய்வேன் என்றார்கள்…

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


رَجَعَ إِلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ مِنْ جِنَازَةٍ مِنَ الْبَقِيعِ، فَوَجَدَنِي وَأَنَا أَجِدُ صُدَاعًا وَأَنَا أَقُولُ: وَا رَأْسَاهُ، قَالَ: «بَلْ أَنَا يَا عَائِشَةُ [ص:218] وَا رَأْسَاهُ»، قَالَ: «وَمَا ضَرَّكِ لَوْ مُتِّ قَبْلِي فَغَسَّلْتُكِ وَكَفَّنْتُكِ وَصَلَّيْتُ عَلَيْكِ وَدَفَنْتُكِ؟»، فَقُلْتُ: لَكَأَنِّي بِكَ وَاللَّهِ لَوْ فَعَلْتَ ذَلِكَ لَرَجَعْتَ إِلَى بَيْتِي فَأَعْرَسْتَ فِيهِ بِبَعْضِ نِسَائِكَ، قَالَتْ: فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ بُدِئَ فِي وَجَعِهِ الَّذِي مَاتَ فِيهِ


Next Page » « Previous Page