Category: ஸுனன் தாரிமீ

Sunan ad-Darimi

Darimi-1244

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

அஸர் தொழுகையின் நேரம்.

1244. சூரியன் உயரத்தில் ஒளி வீசிக் கொண்டிருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் அஸர் தொழுபவர்களாக இருந்தனர். மேட்டுப் பாங்கான பகுதிக்குச் செல்பவர் அங்கே சென்றடையும்போது சூரியன் உயரத்திலேயே இருக்கும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يُصَلِّي الْعَصْرَ، ثُمَّ يَذْهَبُ الذَّاهِبُ إِلَى الْعَوَالِي فَيَأْتِيهَا وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ»


Darimi-2648

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

ஒரு சாண் நிலத்தைக் (அநியாயமாகக்) கைப்பற்றிக் கொள்பவர் (பெறும் தண்டனை).

2648. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் நியாயமின்றி (பிறருக்குச் சொந்தமான) ஒரு சாண் நிலத்தைக் கைப்பற்றிக் கொள்கிறாரோ, அவரது கழுத்தில் மறுமை நாளில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி) மாலையாக மாட்டப்படும்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)


«مَنْ ظَلَمَ مِنَ الْأَرْضِ شِبْرًا، فَإِنَّهُ يُطَوَّقُهُ مِنْ سَبْعِ أَرَضِينَ»


Darimi-1312

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

கூட்டாக தொழுவதின் சிறப்பு.

1312. தாவூத் பின் ஹிந்த் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் கடமையான தொழுகையை வீட்டில் தொழுதுவிட்டார். பின்பு இமாம் தொழுகை நடத்தும் போது பள்ளிக்கு வருகிறார். இப்போது அவர் இமாமுடன் சேர்ந்து தொழவேண்டுமா? என்று நான் ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், “ஆம்” என்று பதிலளித்தார். நான் அவ்விரண்டு தொழுகையில் எந்த தொழுகைக்கு நன்மையை எதிர்பார்க்க வேண்டும்? என்று கேட்டேன். அதற்கவர்கள், “இமாமுடன் தொழுத தொழுகைக்கு நன்மையை எதிர்பார்க்க வேண்டும். ஏனெனில் ஒருவர் கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது, தனியாகத் தொழுவதைவிட இருபதுக்கும் மேற்பட்ட பங்கு கூடுதல் நன்மையுடையதாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக எங்களுக்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்” என்று கூறினார்கள்.


قُلْتُ لِسَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، رَجُلٌ صَلَّى فِي بَيْتِهِ، ثُمَّ أَدْرَكَ الْإِمَامَ وَهُوَ يُصَلِّي، أَيُصَلِّي مَعَهُ؟ قَالَ: نَعَمْ. قُلْتُ: بِأَيَّتِهِمَا يَحْتَسِبُ؟ قَالَ: بِالَّتِي صَلَّى مَعَ الْإِمَامِ فَإِنَّ أَبَا هُرَيْرَةَ، حَدَّثَنَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صَلَاةُ الرَّجُلِ فِي الْجَمِيعِ تَزِيدُ عَلَى صَلَاتِهِ وَحْدَهُ بِضْعًا وَعِشْرِينَ جُزْءًا»


Darimi-500

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

பாடம்:

கல்விச் சார்ந்த விஷயங்களை எழுதிக்கொள்ள அனுமதி.

500. நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் எவரும் என்னை விட அதிகமான ஹதீஸ்களை அறிவிக்கவில்லை, அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களைத் தவிர. (அவர்களிடம் சில நபிமொழிகள் இருந்தன). காரணம் அவர்கள் (ஹதீஸ்களை) எழுதி வைத்துக் கொள்வார்கள். நான் (நினைவில் வைத்துள்ளேன்) எழுதி வைத்ததில்லை என அபூஹுரைரா (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்)


«لَيْسَ أَحَدٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَكْثَرَ حَدِيثًا عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنِّي، إِلَّا مَا كَانَ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو فَإِنَّهُ كَانَ يَكْتُبُ وَلَا أَكْتُبُ»


Darimi-465

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

465. அபூஸயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம், “அவர்கள் கூறுவதை எழுதிக்கொள்ள அனுமதி கேட்டோம்”. அதற்கவர்கள் அனுமதியளிக்கவில்லை.

அறிவிப்பவர்: அதாஉ பின் யஸார் (ரஹ்)


«أَنَّهُمْ اسْتَأْذَنُوا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَنْ يَكْتُبُوا عنْهُ، فَلَمْ يَأْذَنْ لَهُمْ»


Darimi-464

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

ஹதீஸ்களை எழுதிவைக்கக் கூடாது என்போரின் கருத்து.

464. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் கூறுவதில் குர்ஆன் தவிர மற்றதை எழுதி வைக்காதீர்கள். குர்ஆன் தவிர மற்றதை என்னிடமிருந்து எவரேனும் எழுதி வைத்திருந்தால் அதை அவர் அழித்துவிடட்டும்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)


«لَا تَكْتُبُوا عَنِّي شَيْئًا إِلَّا الْقُرْآنَ، فَمَنْ كَتَبَ عَنِّي شَيْئًا غَيْرَ الْقُرْآنِ، فَلْيَمْحُهُ»


Darimi-194

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

194. இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“உங்களிடம் ஒரு காலம் வந்தால், அது அதற்கு முன்னுள்ள காலத்தைவிட மோசமானதாகவே இருக்கும். இதன் மூலம் இந்த வருடம் அந்த (பின்வரும்) வருடத்தை விட செழிப்பாக இருக்கும் என்று நான் கூறவில்லை. இந்த ஆட்சியாளர் அந்த ஆட்சியாளரை விட சிறந்தவராக இருப்பார் என்று நான் கூறவில்லை.

மாறாக, உங்களில் உள்ள அறிஞர்களும், சிறந்தோரும், மார்க்க மேதைகளும் (இறந்து) போய்விடுவர். பின்பு (அவர்களின் இடத்தில்) அவர்களைப் போன்றவர்களை நீங்கள் காணமாட்டீர்கள். ஆனால் (பின்வரும்) கூட்டம் அவர்களின் ஆய்வுகளை அளவுகோலாக கொண்டே சட்டமெடுப்பார்கள் (என்பதே இதன் பொருளாகும்)

அறிவிப்பவர்: மஸ்ரூக் (ரஹ்)


«لَا يَأْتِي عَلَيْكُمْ عَامٌ إِلَّا وَهُوَ شَرٌّ مِنَ الَّذِي كَانَ قَبْلَهُ. أَمَا إِنِّي لَسْتُ أَعْنِي عَامًا أَخْصَبَ مِنْ عَامٍ، وَلَا أَمِيرًا خَيْرًا مِنْ أَمِيرٍ، وَلَكِنْ عُلَمَاؤُكُمْ وَخِيَارُكُمْ وَفُقَهَاؤُكُمْ يَذْهَبُونَ، ثُمَّ لَا تَجِدُونَ مِنْهُمْ خَلَفًا، وَيَجِيءُ قَوْمٌ يَقِيسُونَ الْأُمُورَ بِرَأْيِهِمْ»


Darimi-1862

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1862.


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ احْتَجَمَ وَهُوَ مُحْرِمٌ»


Darimi-1772

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1772.


بَيْنَمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْشِي بِالْبَقِيعِ فَإِذَا رَجُلٌ يَحْتَجِمُ فَقَالَ: «أَفْطَرَ الْحَاجِمُ وَالْمَحْجُومُ»، قَالَ أَبُو مُحَمَّد: «أَنَا أَتَّقِي الْحِجَامَةَ فِي الصَّوْمِ فِي رَمَضَانَ»


Next Page » « Previous Page