4866. ஸுலைமான் பின் அபான் என்பவர் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்ர் போருக்குப் புறப்பட்டபோது, ஸஃத் பின் கைஸமா (ரலி) அவர்களும், அவரது தந்தை கைஸமா (ரலி) அவர்களும் (போரில்) கலந்துகொள்ள விரும்பினர். இதை நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது, அவர்கள் இருவரில் ஒருவர் மட்டும் போரில் கலந்துகொள்ளலாம்; எனவே இருவரும் சீட்டுக் குலுக்கி பாருங்கள் என்று கட்டளையிட்டார்கள்.
அப்போது கைஸமா பின் ஹாரிஸ் (ரலி) தம் மகன் ஸஃத் (ரலி) அவர்களிடம், “நம்மில் ஒருவர் தங்கியிருக்க வேண்டியது அவசியம். எனவே, நீர் உம் குடும்பத்தாருடன் தங்கிவிடும்” என்று கூறினார். அதற்கு ஸஃத் (ரலி) அவர்கள், “இது சொர்க்கம் (ஜன்னத்) அல்லாத வேறு ஏதேனும் ஒன்றாக இருந்தால், அதைத் தங்களுக்கு விட்டுக்கொடுத்திருப்பேன். ஆனால், இந்தப் போரில் நான் ஷஹீதாவதை எதிர்பார்க்கிறேன்” என்று பதிலளித்தார்.
பின்னர் அவர்கள் சீட்டுக் குலுக்கி பார்த்தனர். அதில் ஸஃத் (ரலி) அவர்களின் பெயர் வந்தது. எனவே, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ர் போருக்குச் சென்றார். அங்கு, அம்ர் பின் அப்து வத் என்பவனால் ஸஃத் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டார்.
«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا خَرَجَ إِلَى بَدْرٍ أَرَادَ سَعْدَ بْنَ خَيْثَمَةَ وَأَبُوهُ جَمِيعًا الْخُرُوجَ مَعَهُ، فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَ أَنْ يَخْرُجَ أَحَدُهُمَا فَاسْتَهَمَا» ، فَقَالَ خَيْثَمَةُ بْنُ الْحَارِثِ لِابْنِهِ سَعْدٍ: إِنَّهُ لَا بُدَّ لِأَحَدِنَا مِنْ أَنْ يُقِيمَ فَأَقِمْ مَعَ نِسَائِكَ، فَقَالَ سَعْدٌ: لَوْ كَانَ غَيْرُ الْجَنَّةِ لَآثَرْتُكَ بِهِ أَنِّي أَرْجُو الشَّهَادَةَ فِي وَجْهِي هَذَا، فَاسْتَهَمَا فَخَرَجَ سَهْمُ سَعْدٍ فَخَرَجَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى بَدْرٍ، فَقَتَلَهُ عَمْرُو بْنُ عَبْدِ وَدٍّ
சமீப விமர்சனங்கள்