ஹதீஸின் தரம்: விபரம் கீழே
599. நாங்கள் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களுடன் இருக்கும் போது அவர்களுக்கு உணவு கொண்டு வரப்பட்டது. அப்போது (அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்களின் பேரன்) காஸிம் அவர்கள் தொழ எழுந்தார். அப்போது (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்கள், “உணவு தயாராக இருக்கும் போதும், மலஜல உபாதைகளை அடக்கிக் கொண்டும் தொழக் கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்” எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: காஸிம் பின் முஹம்மத் பின் அபூபக்ர் (ரஹ்)
كُنَّا عِنْدَ عَائِشَةَ فَجِيءَ بِطَعَامِهَا فَقَامَ الْقَاسِمُ بْنُ مُحَمَّدٍ يُصَلِّي فَقَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يُصَلَّى بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا هُوَ يُدَافِعُ الْأَخْبَثَانِ»
சமீப விமர்சனங்கள்