ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
8794. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் இந்த சமுதாயம் மூன்று பிரிவினராக எழுப்பப்படுவார்கள். ஒரு பிரிவினர் எந்தக் கேள்வியுமின்றி சொர்க்கத்தில் நுழைவார்கள். மற்றொரு பிரிவினர் எளிதான கேள்வி கேட்கப்படுவார்கள். மற்றொரு பிரிவினர் தங்கள் முதுகுகளில் உறுதியான மலைகளைப் போன்று பாவங்களை சுமந்து வருவார்கள்.
அவர்களைப் பற்றி அல்லாஹ் நன்கு அறிந்திருந்தும், “இவர்கள் யார்? என்று கேட்பான். பின்பு அவனே, “இவர்கள் என்னுடைய அடியார்களில் எனக்கு இணைவைக்காதவர்கள். ஆனால் இவர்கள் மற்ற பாவங்களை செய்திருப்பதால் அவைகளை முதுகில் சுமந்து வந்துள்ளனர்” என்று பதில் கூறுவான். பின்பு (வானவர்களிடம்) “அவர்களை விட்டு அவர்களின் பாவங்களை இறக்கி அதை யூதர்களின் மீதும் கிருத்தவர்களின் மீதும் வையுங்கள்; என்னுடயை அருளால் அவர்களை சொர்க்கத்தில் நுழையச் செய்யுங்கள்” என்று கூறுவான்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)
تُحْشَرُ هَذِهِ الْأُمَّةُ عَلَى ثَلَاثَةِ أَصْنَافٍ: صِنْفٍ يَدْخُلُونَ الْجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ، وَصِنْفٍ يُحَاسَبُونَ حِسَابًا يَسِيرًا، وَآخَرُ يَجُوزُونَ عَلَى ظُهُورِهِمْ أَمْثَالُ الْجِبَالِ الرَّاسِيَةِ فَسَأَلَ اللَّهُ عَنْهُمْ وَهُوَ أَعْلَمُ، فَيَقُولُ: هَؤُلَاءِ عُبَيْدٌ مِنْ عَبِيدِي لَمْ يُشْرِكُوا بِي شَيْئًا وَعَلَى ظُهُورِهِمُ الذُّنُوبُ وَالْخَطَايَا حُطُّوهَا وَاجْعَلُوهَا عَلَى الْيَهُودِ وَالنَّصَارَى، وَادْخُلُوا الْجَنَّةَ بِرَحْمَتِي
சமீப விமர்சனங்கள்