Category: இலல்-இப்னு அபீ ஹாத்திம்

Al-ilal-li ibn abi hatim

Alilal-Ibn-Abi-Hatim-1029

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1029.

புஸ்ர் பின் உபைதுல்லாஹ் அவர்கள் அதிகமாக அபூஇத்ரீஸ் அல்கவ்லானீ —>வாஸிலா பின் அஸ்கஃ  என்ற அறிவிப்பாளர்தொடரில் ஹதீஸ்களை அறிவித்துள்ளார். எனவே இந்த செய்தியும் அப்படி இருக்கலாம் என இப்னு முபாரக் அவர்கள் தவறாக எண்ணிவிட்டார். ஆனால் இந்த செய்தியை புஸ்ர் பின் உபைதுல்லாஹ் அவர்கள், வாஸிலா பின் அஸ்கஃ அவர்களிடம் நேரடியாக கேட்டுள்ளார் என அபூஹாதிம் அவர்கள் கூறியுள்ளார்.


لاَ تُصلُّوا إِلى القُبُورِ ، ولا تجلِسُوا عليها.

قال أبِي : يرون أنَّ ابن المُباركِ وهِم فِي هذا الحدِيثِ ، أدخل أبا إِدرِيس الخولانِيّ بين بُسرِ بنِ عُبيدِ اللهِ ، وبين واثِلة.
ورواهُ عِيسى بنُ يُونُس ، وصدقةُ بنُ خالِدٍ ، والولِيدُ بنُ مُسلِمٍ ، فقالُوا كُلُّهُم : عنِ ابنِ جابِرٍ ، عن بُسرِ بنِ عُبيدِ اللهِ ، قال : سمِعتُ واثِلة بن الأسقعِ يُحدِّثُ ، عن أبِي مرثدٍ الغنوِيِّ ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم.
قال أبِي : بُسرٌ قد سمِع مِن واثِلة ، كثِيرًا ما يُحدِّثُ بُسرٌ عن أبِي إِدرِيس ، فغلِط ابنُ المُباركِ ، وظنّ أنَّ هذا مِمّا روى عن أبِي إِدرِيس ، عن واثِلة ، وقد سمِع هذا الحدِيث بُسرٌ مِن واثِلة نفسِهِ ، لأنّ أهل الشّامِ أعرفُ بِحدِيثِهِم.


Alilal-Ibn-Abi-Hatim-124

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

124.

இப்னு அபூஹாதிம் அவர்கள் இந்த செய்தி பற்றி அபூஸுர்ஆ அவர்களிடம் விளக்கம் கேட்டார். அதற்கவர் இந்த செய்தி அந்தளவிற்கு (பலமானதாக) இல்லை. இது ஒரு அறிவிப்பாளர்தொடரில் தான் வந்துள்ளது என்று பதிலளித்துள்ளார். இந்த கருத்தை தனது தந்தை அபூஹாதிம் அவர்களிடம் கூறி விளக்கம் கேட்டபோது, அவர் “என்னுடைய கருத்து இந்த ஹதீஸின் படி எல்லா நிலையிலும்-அதாவது கழிவறை செல்லும் போதும், மற்ற நேரங்களிலும் அல்லாஹ்வை நினைவு கூற வேண்டும் என்பதே என்று பதில் கூறியுள்ளார்.


كان النّبِيُّ صلى الله عليه وسلم يذكر الله تعالى على كل أحيانه.

فقال : ليس بذاك ، هُو حدِيث لاَ يُروى إِلاَّ من ذي الوجه.
فذكرتُ قول أبِي زُرعة لأبِي رحِمهُ اللَّهُ فقال : الّذِي أرى أن يذكر الله على كل حال ، على الكنيف وغيره ، على هذا الحديث.


« Previous Page