Category: இப்னு ஹிப்பான்

Ibn-Hibban

Ibn-Hibban-469

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஒருவர் பணிவு, நாகரீகம், மென்மை கொண்டவராக, மக்களின் அன்பிற்குரியவராக இருந்தால் அவர் நரகத்தை விட்டு ஈடேற்றம் பெற வாய்ப்புள்ளது என்பது பற்றி வந்துள்ளவை.

469. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பணிவுள்ள; நாகரீகமிக்க; மக்களின் நெருக்கத்திற்குரிய; மென்மையான ஒவ்வொருவருக்கும் நரகம் தடைசெய்யப்பட்டுள்ளது.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


«إِنَّمَا يُحَرَّمُ عَلَى النَّارِ كُلُّ هَيِّنٍ لَيِّنٍ قَرِيبٍ سَهْلٍ»


Ibn-Hibban-5538

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5538.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ إِذَا تَبَوَّأَ مَضْجَعَهُ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَفَانِي وَآوَانِي وَسَقَانِي، الْحَمْدُ لِلَّهِ الَّذِي مَنَّ عَلَيَّ فَأَفْضَلَ، الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَعْطَانِي فَأَجْزَلَ، الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ، اللَّهُمَّ رَبَّ كُلِّ شَيْءٍ، وَمَالِكَ كُلِّ شَيْءٍ، وَإِلَهَ كُلِّ شَيْءٍ، لَكَ كُلُّ شَيْءٍ، أَعُوذُ بِكَ مِنَ النَّارِ»


Ibn-Hibban-4570

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

தனது சமுதாயம் வழிகெடுக்கும் தலைவர்களுக்கு கட்டுபட்டு நேரான பாதையை விட்டு தூரமாகிவிடுவார்கள் என்பது பற்றி நபி (ஸல்) அவர்களின் அச்சம்.

4570. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது சமுதாயத்தின் விசயத்தில் நான் பயப்படுவதெல்லாம் வழிகெடுக்கும் தலைவர்களை குறித்துதான். எனது சமுதாயத்தில் வாள் வீசப்பட்டால் மறுமைநாள் வரை அது அவர்களை விட்டு அகற்றப்படாது.

அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)


«إِنِّي لَا أَخَافُ عَلَى أُمَّتِي إِلَّا الْأَئِمَّةَ الْمُضِلِّينَ، وَإِذَا وُضِعَ السَّيْفُ فِي أُمَّتِي لَمْ يُرْفَعْ عَنْهُمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ»


Ibn-Hibban-6190

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஆதம் (அலை) அவர்களுக்கும், நூஹ் (அலை) அவர்களுக்கும் இடையில் உள்ள தலைமுறையினர் பற்றி வந்துள்ள செய்திகள்.

6190. ஒரு மனிதர் (நபி-ஸல் அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதரே! ஆதம் (அலை) அவர்கள் நபியா? என்று கேட்டார். அதற்கவர்கள், “ஆம், அவர் அல்லாஹ்விடம் பேசிய நபி” என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர், “ஆதம் நபிக்கும், நூஹ் நபிக்கும் இடைப்பட்ட காலம் எவ்வளவு? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 10 தலைமுறை என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)


أَنَّ رَجُلًا، قَالَ: يَا رَسُولَ اللَّهِ أَنَبِيٌّ كَانَ آدَمُ؟ قَالَ: «نَعَمْ، مُكَلَّمٌ»، قَالَ: فَكَمْ كَانَ بَيْنَهُ وَبَيْنَ نُوحٍ؟ قَالَ: «عَشَرَةُ قُرُونٍ»


Ibn-Hibban-2156

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

ّஒருவர் தொழுகையின் முதல்வரிசையை விட்டுவிட்டு பின்செல்வது கண்டனத்திற்குரியது.

2156. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்களில் சிலர் எப்போதும் (தொழுகை வரிசையில்) பின்தங்கிக்கொண்டே இருப்பார்கள். முடிவில் அவர்களை அல்லாஹ், நரகத்தில் (இருந்து வெளியேற்றப்படுவர்களை விட்டும்) பின்தங்கச் செய்துவிடுவான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«لَا يَزَالُ قَوْمٌ يَتَخَلَّفُونَ عَنِ الصَّفِّ الْأَوَّلِ حَتَّى يُخَلِّفَهُمُ اللَّهُ فِي النَّارِ»


Ibn-Hibban-962

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

962.


قَالَ أَبُو بَكْرٍ: يَا رَسُولَ اللَّهِ، أَخْبِرْنِي مَا أَقُولُ إِذَا أَصْبَحْتُ، وَإِذَا أَمْسَيْتُ، قَالَ: «قُلِ: اللَّهُمَّ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ، فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي، وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ»

[ص:243] قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قُلْهُ إِذَا أَصْبَحْتَ وَإِذَا أَمْسَيْتَ وَإِذَا أَخَذْتَ مَضْجَعَكَ» [1: 104]


Ibn-Hibban-4637

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4637.


أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ، رَجُلُ يُرِيدُ الْجِهَادَ فِي سَبِيلِ اللَّهِ، وَهُوَ يَبْتَغِي مِنْ عَرَضِ الدُّنْيَا؟، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا أَجْرَ لَهُ»، فَأَعْظَمَ ذَلِكَ النَّاسُ، وَقَالُوا لِلرَّجُلِ: عُدْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَعَلَّكَ لَمْ تُفَهِمْهُ، قَالَ: فَقَالَ الرَّجُلُ: يَا رَسُولَ اللَّهِ، رَجُلُ يُرِيدُ الْجِهَادَ فِي سَبِيلِ اللَّهِ، وَهُوَ يَبْتَغِي مِنْ عَرَضِ الدُّنْيَا؟، قَالَ: «لَا أَجْرَ لَهُ»، فَأَعْظَمَ ذَلِكَ النَّاسُ، وَقَالُوا لِلرَّجُلِ: عُدْ لِرَسُولِ اللَّهِ، فَقَالَ لَهُ الثَّالِثَةَ: رَجُلٌ يُرِيدُ الْجِهَادَ فِي سَبِيلِ اللَّهِ، وَهُوَ يَبْتَغِي مِنْ عَرَضِ الدُّنْيَا؟، قَالَ: «لَا أَجْرَ لَهُ»


Ibn-Hibban-4612

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

(இதற்கு முன்) நாம் கூறிய கருத்தை தெளிவுபடுத்தும் இரண்டாவது செய்தி.

4612. அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (என்னிடம்) “அபூஸயீத்! அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைத்தூதர் எனவும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவருக்குச் சொர்க்கம் உறுதியாகிவிட்டது” என்று கூறினார்கள்.

இதைக் கேட்டு வியப்படைந்த நான், “மீண்டும் ஒரு முறை சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டேன். (மீண்டும்) அவ்வாறே அவர்கள் சொல்லிவிட்டு, இன்னொன்றும் சொல்கிறேன். சொர்க்கத்தில் ஓர் அடியார் நூறு படித்தரங்களுக்கு உயர்த்தப்படுவார். ஒவ்வோர் இரு படித்தரங்களுக்கிடையே வானத்திற்கும் பூமிக்கும் இடையிலுள்ளதைப் போன்ற தொலைவு இருக்கும்” என்று கூறினார்கள்.

நான், “அது என்ன (நற்செயலுக்குக் கிடைக்கும் வெகுமதி), அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டேன். அதற்கு “அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிதல்” என்று விடையளித்தார்கள்.


«يَا أَبَا سَعِيدٍ، مَنْ رَضِيَ بِاللَّهِ رِبًا، وَبِالْإِسْلَامِ دَينًا، وَبِمُحَمَّدٍ نَبِيًّا، وَجَبَتْ لَهُ الْجَنَّةُ»، فَعَجِبَ لَهَا أَبُو سَعِيدٍ، وَقَالَ أَعِدْهَا عَلَيَّ يَا رَسُولَ اللَّهِ، فَفَعَلَ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَأُخْرَى يُرْفَعُ بِهَا الْعَبْدُ مِائَةَ دَرَجَةٍ مَا بَيْنَ كُلِّ دَرَجَتَيْنِ كَمَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ»، قَالَ: وَمَا هِيَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ»


Ibn-Hibban-863

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஒருவர் அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைத்தூதர் எனவும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டால் சொர்க்கம் உறுதி என்று வந்துள்ள செய்தி.

863. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் “ரளீத்து பில்லாஹி ரப்பா; வபில் இஸ்லாமி தீனா; வபி முஹம்மதின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நபிய்யா” என்றுக் கூறினால் அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது.

(பொருள்: அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைத்தூதர் எனவும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டேன்)

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)


مَنْ قَالَ: رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيًّا، وَجَبَتْ لَهُ الْجَنَّةُ»


Ibn-Hibban-5237

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

ஒருவர், எப்போதும்; குறிப்பாக மற்றவர் அவருடன் இருக்கும்போது உணவைக் குறைத்துக்கொள்வது அவசியம் என்பதை உணர்த்தும் ஹதீஸ்கள்.

5237. ஒருவருடைய உணவு இருவருக்குப் போதுமானதாகும். இருவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும். நால்வரின் உணவு எண்மருக்குப் போதுமானதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றேன்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)


«طَعَامُ الْوَاحِدِ يَكْفِي الِاثْنَيْنِ، وَطَعَامُ الِاثْنَيْنِ يَكْفِي الْأَرْبَعَةَ، وَطَعَامُ الْأَرْبَعَةِ يَكْفِي الثَّمَانِيَةَ»


Next Page » « Previous Page