Category: இப்னு ஹிப்பான்

Ibn-Hibban

Ibn-Hibban-2369

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2369. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

சுத்ராவை (தடுப்பை) நோக்கியே தவிர நீங்கள் தொழாதீர்கள்! உங்களுக்கு முன்னால் யாரையும் நடக்க விடாதீர்கள்! மீறினால் அவருடன் சண்டையிடுங்கள்! (தடுங்கள்). ஏனெனில் அவருடன் கூட்டாளி (ஷைத்தான்) இருக்கிறான்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


«لَا تُصَلُّوا إِلَّا إِلَى سُتْرَةٍ، وَلَا يَدَعْ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْهِ، فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ، فَإِنَّ مَعَهُ الْقَرِينَ».


Ibn-Hibban-2370

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2370. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் தொழும்போது, உங்களுக்கு முன்னால் யாரையும் நடக்க விடாதீர்கள்! மீறினால் அவருடன் சண்டையிடுங்கள்! (தடுங்கள்). ஏனெனில் அவருடன் கூட்டாளி (ஷைத்தான்) இருக்கிறான்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


«إِذَا كَانَ أَحَدُكُمْ يُصَلِّي، فَلَا يَدَعَنَّ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْهِ، فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ، فَإِنَّ مَعَهُ الْقَرِينَ»


Ibn-Hibban-2362

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2362. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சுத்ராவை (தடுப்பை) நோக்கியே தவிர நீங்கள் தொழாதீர்கள்! உங்களுக்கு முன்னால் யாரையும் நடக்க விடாதீர்கள்! மீறினால் அவருடன் சண்டையிடுங்கள்! (தடுங்கள்). ஏனெனில் அவர் ஷைத்தான் ஆவார்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


«لَا تُصَلِّ إِلَّا إِلَى سُتْرَةٍ، وَلَا تَدَعْ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْكَ، فَإِنْ أَبَى فَلْتُقَاتِلْهُ، فَإِنَّمَا هُوَ شَيْطَانٌ».


Ibn-Hibban-1898

ஹதீஸின் தரம்: Pending

1898. மகத்துவமிக்க உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக! (அல்குர்ஆன் 56 : 96 ஃபஸப்பிஹ் பிஸ்மி ரப்பிகல் அளீம்) என்ற வசனம் இறங்கிய போது இதை உங்கள் ருகூஃவில் ஆக்கிக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உயர்ந்த உனது இறைவனின் பெயரைத் துதிப்பீராக! (அல்குர்ஆன் 87 : 1 ஸப்பிஹிஸ்ம ரப்பிகல்அஃலா) என்ற வசனம் இறங்கியதும் இதை உங்களுடைய சுஜூதில் ஆக்கிக் கொள்ளுங்கள் என்று (நபி-ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)


لَمَّا نَزَلَتْ: {فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ}، [قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اجْعَلُوهَا فِي رُكُوعِكُمْ»، فَلَمَّا نَزَلَ {سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى}] قَالَ: «اجْعَلُوهَا فِي سُجُودِكُمْ». [1: 104]


Ibn-Hibban-4691

ஹதீஸின் தரம்: Pending

4691.

நானும் நபி (ஸல்) அவர்களும் ஓட்டப் பந்தயம் வைத்தோம். அதில் நான் முந்தி விட்டேன். பின்னர் நான் உடல் பருமனாக ஆன போது மற்றொரு முறை நடந்த ஓட்டப் பந்தயத்தில் அவர்கள் என்னை முந்தி விட்டார்கள். அப்போது ‘அதற்கு இது சரியாகி விட்டது’ என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


سَابَقَنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَبَقْتُهُ، فَلَبِثْنَا حَتَّى إِذَا أَرْهَقَنِي اللَّحْمُ سَابَقَنِي فَسَبَقَنِي، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذِهِ بِتِلْكَ»


Ibn-Hibban-7364

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7364.


«أَوَّلُ مَا يُقَالُ لِلْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ: أَلَمْ أُصَحِّحْ جِسْمَكَ، وَأَرْوِيَكَ مِنَ الْمَاءِ الْبَارِدِ»


Ibn-Hibban-5236

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5236. மனிதன் நிரப்புவதிலேயே அவனுடைய வயிற்றை விட மிகவும் மோசமான பாத்திரம் எதுவும் இல்லை. ஆதமுடைய மகனுக்கு, அவனுடைய முதுகை நிமிர்த்துவதற்கு (தேவையான) சில கவளங்களே போதும்.  (அதைவிட கூடுதல் உணவு) அவசியம் என்றால், மூன்றில் ஒரு பாகம் உணவுக்கும், மூன்றில் ஒரு பாகம் நீருக்கும், மூன்றில் ஒரு பாகம் அவன் மூச்சு விடுவதற்கும் இருக்கட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி)


«مَا مَلَأَ آدَمَيٌّ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ، حَسْبُكَ يَا ابْنَ آدَمَ لُقَيْمَاتٌ يُقِمْنَ صُلْبَكَ، فَإِنْ كَانَ لَا بُدَّ فَثُلُثٌ طَعَامٌ، وَثُلُثٌ شَرَابٌ، وَثُلُثٌ نَفَسٌ»


Ibn-Hibban-674

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

674. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதன் நிரப்புவதிலேயே அவனுடைய வயிற்றை விட மிகவும் மோசமான பாத்திரம் எதுவும் இல்லை. ஆதமுடைய மகனுக்கு, அவனுடைய முதுகை நிமிர்த்துவதற்கு (தேவையான) சில கவளங்களே போதும். அது முடியவில்லை என்றால், மூன்றில் ஒரு பாகம் உணவுக்கும், மூன்றில் ஒரு பாகம் நீருக்கும், மூன்றில் ஒரு பாகம் அவன் மூச்சு விடுவதற்கும் இருக்கட்டும்.

அறிவிப்பவர்: மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி)


«مَا مِنْ وِعَاءٍ مَلَأَ ابْنُ آدَمَ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ، حَسْبُ ابْنِ آدَمَ أَكَلَاتٌ يُقِمْنَ صُلْبَهُ، فَإِنْ كَانَ لَا بُدَّ، فَثُلُثٌ لِطَعَامِهِ، وَثُلُثٌ لِشَرَابِهِ، وَثُلُثٌ لِنَفَسِهِ».


Ibn-Hibban-2358

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2358.


«إِنَّ اللَّهَ يُحِبُّ الْعُطَاسَ، وَيَكْرَهُ التَّثَاؤُبَ، فَإِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فَلْيَكْظِمْ مَا اسْتَطَاعَ، أَوْ لِيَضَعَ يَدَهُ عَلَى فِيهِ، فَإِنَّهُ إِذَا تَثَاءَبَ فَقَالَ: آهْ، فَإِنَّمَا هُوَ الشَّيْطَانُ يَضْحَكُ مِنْ جَوْفِهِ».


Ibn-Hibban-598

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

598.


«إِنَّ اللَّهَ يُحِبُّ الْعُطَاسَ، وَيَكْرَهُ التَّثَاؤُبَ، فَإِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ، فَلْيَرُدَّ مَا اسْتَطَاعَ، وَلَا يَقُلْ: هَاوْ، فَإِنَّهُ إِذَا، قَالَ: هَاوْ، ضَحِكَ مِنْهُ الشَّيْطَانُ، فَإِذَا عَطَسَ أَحَدُكُمْ، فقَالَ: الْحَمْدُ لِلَّهِ فَحَقٌّ عَلَى مَنْ سَمِعَهُ أَنْ يَقُولَ: يَرْحَمُكَ اللَّهُ».


Next Page » « Previous Page