Category: இப்னு ஹிப்பான்

Ibn-Hibban

Ibn-Hibban-3596

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3596. ஸிலது பின் ஸுஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ரமலானின் (ஆரம்பமாக இருக்குமோ என்ற) சந்தேகத்திற்குரிய நாளில் (ஷஃபானின் முப்பதாம் நாளில்) நாங்கள் அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களிடம் இருந்தபோது ஆட்டுக்கறி கொண்டு வந்து வைக்கப்பட்டது. நோன்பு வைத்திருந்த சிலர் விலகிச் சென்றனர். அதற்கு அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள், சந்தேகத்திற்குரிய இந்த நாளில் (ஷஃபானின் முப்பதாம் நாளில்) யார் நோன்பு நோற்கிறாரோ அவர் அபுல்காஸிம்-நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார் என்றுக் கூறினார்கள்.


كُنَّا عِنْدَ عَمَّارِ بْنِ يَاسِرٍ فِي الْيَوْمِ الَّذِي يُشَكُّ فِيهِ مِنْ رَمَضَانَ، فَأُتِيَ بِشَاةٍ، فَتَنَحَّى بَعْضُ الْقَوْمِ، فَقَالَ عَمَّارُ بْنُ يَاسِرٍ: «مَنْ صَامَ هَذَا الْيَوْمَ فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ»


Ibn-Hibban-3585

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3585. ஸிலது பின் ஸுஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களிடம் இருந்தபோது பொறித்த ஆட்டுக்கறி கொண்டு வந்து வைக்கப்பட்டது. அவர்கள், உண்ணுங்கள் என்று கூறினார்கள். சிலர் விலகிச் சென்று நாங்கள் நோன்பு வைத்துள்ளோம் என்று கூறினர். அதற்கு அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள், சந்தேகத்திற்குரிய நாளில் (ஷஃபானின் முப்பதாம் நாளில்) யார் நோன்பு நோற்கிறாரோ அவர் அபுல்காஸிம்-நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார் என்றுக் கூறினார்கள்.


كُنَّا عِنْدَ عَمَّارِ بْنِ يَاسِرٍ فَأُتِيَ بِشَاةٍ مَصْلِيَّةٍ، فَقَالَ: كُلُوا، فَتَنَحَّى بَعْضُ الْقَوْمِ، وَقَالَ: إِنِّي صَائِمٌ، فَقَالَ عَمَّارُ بْنُ يَاسِرٍ: «مَنْ صَامَ الْيَوْمَ الَّذِي يُشَكُّ فِيهِ فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Ibn-Hibban-3518

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3518. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நோன்பாளிக்கு கட்டுப்படுத்த முடியாமல் (தானாக) வாந்தி வந்தால் அவர் நோன்பை (களாவாக) மீண்டும் நிறைவேற்றுவது கடமை இல்லை. வேண்டுமென்றே வாந்தி எடுத்தால் அவர் நோன்பை (களாவாக) மீண்டும் நிறைவேற்ற வேண்டும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)


«مَنْ ذَرَعَهُ الْقَيْءُ وَهُوَ صَائِمٌ فَلَيْسَ عَلَيْهِ قَضَاءٌ، وَمَنِ اسْتَقَاءَ، فَلْيَقْضِ»


Ibn-Hibban-3429

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3429. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலியில் எதுவும் குறையாமல் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் அது போன்ற கூலி உண்டு.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி)


«مَنْ فَطَّرَ صَائِمًا كُتِبَ لَهُ مِثْلَ أَجْرِهِ، لَا يَنْقُصُ مِنْ أَجْرِهِ شَيْءٌ»


Ibn-Hibban-5656

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5656.

நாய்களும் உங்களைப் போன்ற (உயிருள்ள) சமுதாயங்களில் ஒரு சமுதாயமாக இல்லாவிட்டால் அவைகளை கொல்ல உங்களுக்கு கட்டளையிட்டிருப்பேன்.


كُنَّا فِي جَنَازَةِ أَبِي سُفْيَانَ بْنِ الْعَلَاءِ، وَمَعَنَا شُعْبَةُ، فَلَمَّا دُفِنَ، قَالَ شُعْبَةُ: حَدَّثَنِي هَذَا وَأَشَارَ إِلَى قَبْرِ أَبِي سُفْيَانَ بْنِ الْعَلَاءِ، قَالَ: قُلْتُ لِلْحَسَنِ: مَنْ حَدَّثَكَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَوْلَا أَنَّ الْكِلَابَ أُمَّةٌ مِنَ الْأُمَمِ لَأَمَرْتُ بِقَتْلِهَا» فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ الْمُغَفَّلِ، وَاللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا اللَّهُ حَدَّثَنِي فِي هَذَا الْمَسْجِدِ، وَأَوْمَأَ إِلَى مَسْجِدِ الْجَامِعِ.


Ibn-Hibban-908

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

908. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவரிடம் என்னுடைய பெயர் கூறப்பட்டும் அவர் என் மீது ஸலவாத் சொல்லவில்லை யென்றால் அவரின் மூக்கு மண்ணை கவ்வட்டும்.

தம் பெற்றோரை அவர்களின் முதுமைப் பருவத்தில் அடைந்தும் (அவர்களுக்கு உடலாலும் பொருளாலும் ஊழியம் செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்.

ஒருவர் ரமளான் மாதத்தை அடைந்தும் அவரது பாவங்கள் மன்னிக்கப்படாமல் அம்மாதம் கழிந்தால் அவருடைய மூக்கு மண்ணை கவ்வட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி­)


«رَغِمَ أَنْفُ رَجُلٍ ذُكِرْتُ عِنْدَهُ، فَلَمْ يُصَلِّ عَلَيَّ، وَرَغِمَ أَنْفُ رَجُلٍ أَدْرَكَ أَبَوَيْهِ عِنْدَ الْكِبَرِ، فَلَمْ يُدْخِلَاهُ الْجَنَّةَ، وَرَغِمَ أَنْفُ رَجُلٍ دَخَلَ عَلَيْهِ شَهْرُ رَمَضَانَ، ثُمَّ انْسَلَخَ قَبْلَ أَنْ يُغْفَرَ لَهُ»


Ibn-Hibban-907

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

907.

அபூஹுரைரா (ரலிஅவர்கள் அறிவித்தார்கள்:

ஒரு முறை நபி {ஸல்} அவர்கள் சொற்பொழிவு மேடை மீது ஏறும் போது மூன்று முறை “ஆமீன்” கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! (நீங்கள் மிம்பரின் மீது ஏறும் போது “ஆமீன்” என மூன்று முறை கூறினீர்களே! இது போன்று) இதற்கு முன் செய்ததில்லையே என வினவப்பட்டது.

என்னிடம் வானவர் ஜிப்ரயீல் (அலை) வருகை தந்து தம் பெற்றோரில் ஒருவரையோ அல்லது அவர்கள் இருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்தும் (அவர்களுக்கு உடலாலும் பொருளாலும் ஊழியம் செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும் என்று கூறினார். நான் ஆமீன் என்றேன்.

யார் ரமலான் மாதத்தை அடைந்தும் அவன் பாவங்கள் மன்னிக்கப்படவில்லையோ அவன் மூக்கு மண்ணைக் கவ்வட்டும் என்று கூறினார். நான் ஆமீன் என்றேன்.

யாரிடத்தில் (முஹம்மதாகிய) நீங்கள் நினைவுகூறப்பட்டும் அவன் உங்கள் மீது ஸலவாத் கூறவில்லையோ அவன் மூக்கு மண்ணைக் கவ்வட்டும் என்று கூறினார். நான் ஆமீன் என்றேன்” என்று (பதில்) கூறினார்கள்.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَعِدَ الْمِنْبَرَ، فَقَالَ: «آمِينَ آمِينَ آمِينَ» قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّكَ حِينَ صَعِدْتَ الْمِنْبَرَ قُلْتَ: آمِينَ آمِينَ آمِينَ، قَالَ: «إِنَّ جِبْرِيلَ أَتَانِي، فَقَالَ: مَنْ أَدْرَكَ شَهْرَ رَمَضَانَ وَلَمْ يُغْفَرْ لَهُ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللَّهُ، قُلْ: آمِينَ، فَقُلْتُ: آمِينَ، وَمَنْ أَدْرَكَ أَبَوَيْهِ أَوْ أَحَدَهُمَا فَلَمْ يَبَرَّهُمَا، فَمَاتَ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللَّهُ، قُلْ: آمِينَ، فَقُلْتُ: آمِينَ، وَمَنْ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْكَ فَمَاتَ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللَّهُ، قُلْ: آمِينَ، فَقُلْتُ: آمِينَ»


Ibn-Hibban-3708

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3708. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனம் மக்காவின் “ஹஸ்வரா” என்ற இடத்தில் நின்றிருக்கும் போது அதன்மீதமர்ந்தவர்களாக, மக்காவை நோக்கி, “நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! (என்னுடைய சமுதாயத்தினரால்) உன்னை விட்டும் நான் வெளியேற்றப்படாமலிருந்தால் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.) என்று கூறியதை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அதீ (ரலி)


رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَاحِلَتِهِ وَاقِفًا بِالْحَزْوَرَةِ يَقُولُ: «وَاللَّهِ إِنَّكِ لَخَيْرُ أَرْضِ اللَّهِ، وَأَحَبُّ أَرْضِ اللَّهِ إِلَى اللَّهِ، وَلَوْلَا أَنِّي أُخْرِجْتُ مِنْكِ مَا خَرَجْتُ»


Ibn-Hibban-949

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

949. புஸ்ர் பின் அர்தாத் அல்குரஷிய்யி அவர்கள் கூறியதாவது:

யா அல்லாஹ்! எங்களின் எல்லாக் காரியங்களின் முடிவையும் நன்மையாக ஆக்கி வைப்பாயாக! இவ்வுலகின் இழிவை விட்டும் மறுவுலகின் வேதனையை விட்டும் எங்களைப் பாதுகாத்தருள்வாயாக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்து கூறியதை நான் செவியேற்றேன்.


«اللَّهُمَّ أَحْسِنْ عَافِيَتَنَا فِي الْأُمُورِ كُلِّهَا، وَأَجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا وَعَذَابِ الْآخِرَةِ»


Ibn-Hibban-4174

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4174. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் தன் கணவருடன் படுக்கையை(ப் பகிர்ந்து கொள்வதை) வெறுத்து (தனியாக) இருந்தால், (கணவனின் படுக்கைக்கு) அவள் திரும்பும் வரை வானவர்கள் அவளைச் சபிக்கின்றனர்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


«إِذَا كَانَتِ الْمَرْأَةُ هَاجِرَةً لِفِرَاشِ زَوْجِهَا لَعَنَتْهَا الْمَلَائِكَةُ حَتَّى تَرْجِعَ»


Next Page » « Previous Page