ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
2478. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ரோஷம் இருவகை. அவற்றில்) அல்லாஹ் விரும்புகின்ற ரோஷமும் உண்டு. அல்லாஹ் வெறுக்கின்ற ரோஷமும் உண்டு. குழப்பம் விளைவதற்குரிய அறிகுறிகள் தோன்றுமிடத்தில் ரோஷம் கொள்வது அல்லாஹ் விரும்பும் ரோஷமாகும். குழப்பம் விளைவதற்குரிய அறிகுறிகளே இல்லாத இடத்தில் ரோஷம் கொள்வது அவன் வெறுக்கின்ற ரோஷமாகும்.
(பெருமையடித்தல் இருவகை. அவற்றில்) அல்லாஹ் வெறுக்கின்ற பெருமையும் உண்டு. அல்லாஹ் விரும்புகின்ற பெருமையும் உண்டு. அல்லாஹ் விரும்புகின்ற பெருமை யாதெனில் ஒரு மனிதன் போரிலும், தான தர்மம் செய்வதிலும் பெருமை கொள்வதாகும். அல்லாஹ் வெறுக்கின்ற பெருமை யாதெனில் ஒரு மனிதன் தீய செயலில் (அநியாயம் செய்வதில், பொருளாதாரத்தில், வமிசத்தில், அந்தஸ்தில்) பெருமை கொள்வதாகும்….
மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று பேரின் பிரார்த்தனை (துஆ எவ்விதச் சந்தேகமுமின்றி) ஏற்றுக்கொள்ளப்படும்.
1 . ஒரு தந்தை தன் பிள்ளைக்காகச் செய்யும் பிரார்த்தனை.
2 . பயணியின் பிரார்த்தனை.
3 . அநியாயம் செய்யப்பட்டவனின் பிரார்த்தனை.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
غَيْرَتَانِ إِحْدَاهُمَا يُحِبُّهَا اللَّهُ، وَالْأُخْرَى يَبْغَضُهَا اللَّهُ: الْغَيْرَةُ فِي الرَّمْيَةِ يُحِبُّهَا اللَّهُ وَالْغَيْرَةُ فِي غَيْرِ رَمْيَةٍ يَبْغَضُهَا اللَّهُ، وَالْمَخِيلَةُ إِذَا تَصَدَّقَ الرَّجُلُ يُحِبُّهَا اللَّهُ، وَالْمَخِيلَةُ فِي الْكِبَرِ يَبْغَضُهَا اللَّهُ
وَقَالَ: «ثَلَاثَةٌ تُسْتَجَابُ دَعْوَتُهُمُ، الْوَالِدُ وَالْمُسَافِرُ وَالْمَظْلُومُ»
சமீப விமர்சனங்கள்