Category: இப்னுமாஜா

Ibn-Majah-1801

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

1801.


جَاءَنَا مُصَدِّقُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخَذْتُ بِيَدِهِ وَقَرَأْتُ فِي عَهْدِهِ: ” لَا يُجْمَعُ بَيْنَ مُتَفَرِّقٍ، وَلَا يُفَرَّقُ بَيْنَ مُجْتَمِعٍ، خَشْيَةَ الصَّدَقَةِ، فَأَتَاهُ رَجُلٌ بِنَاقَةٍ عَظِيمَةٍ مُلَمْلَمَةٍ، فَأَبَى أَنْ يَأْخُذَهَا، فَأَتَاهُ بِأُخْرَى دُونَهَا، فَأَخَذَهَا، وَقَالَ: أَيُّ أَرْضٍ تُقِلُّنِي، وَأَيُّ سَمَاءٍ تُظِلُّنِي، إِذَا أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ أَخَذْتُ خِيَارَ إِبِلِ رَجُلٍ مُسْلِمٍ


Ibn-Majah-1165

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

1165. ராஃபிஉ பின் கதீஜ்  (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (பனூ அப்துல்அஷ்ஹல் குலத்தாரான) எங்கள் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது எங்களுக்கு ‘மஃக்ரிப்’ தொழுகை தொழுவித்தார்கள். அவர்கள், ஸலாம் கூறி தொழுகையை நிறைவு செய்தபோது, “(மஃக்ரிப் தொழுகையின்) இந்த இரண்டு ரக்அத் (பின் சுன்னத்) தொழுகையை உங்கள் வீடுகளில் தொழுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆஸிம் பின் உமர் (ரஹ்)


أَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَنِي عَبْدِ الْأَشْهَلِ، فَصَلَّى بِنَا الْمَغْرِبَ فِي مَسْجِدِنَا، ثُمَّ قَالَ: «ارْكَعُوا هَاتَيْنِ الرَّكْعَتَيْنِ فِي بُيُوتِكُمْ»


Ibn-Majah-1377

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1377. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் இல்லங்களை (தொழுகை நடைபெறாத) அடக்கத் தலங்களாக ஆக்கிவிடாதீர்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«لَا تَتَّخِذُوا بُيُوتَكُمْ قُبُورًا»


Ibn-Majah-617

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

617.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى أَنْ يُصَلِّيَ الرَّجُلُ وَهُوَ حَاقِنٌ»


Ibn-Majah-923

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 31

(மக்களுக்கு) தலைமை தாங்கித் தொழுவிப்பவர் தமக்காக மட்டுமே பிரார்த்தனை செய்யக் கூடாது.

923. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கும் இறையடியார் ஒருவர், (பிரார்த்திக்கும் போது) அனைவருக்கும் சேர்த்துப் பிரார்த்திக்காமல் தமக்கு மட்டுமே பிரார்த்திக்கலாகாது. அவ்வாறு அவர் செய்தால் அவர் மக்களுக்கு துரோகமிழைத்தவர் ஆவார்.

அறிவிப்பவர்: ஸவ்வான் (ரலி)


«لَا يَؤُمُّ عَبْدٌ فَيَخُصَّ نَفْسَهُ بِدَعْوَةٍ دُونَهُمْ، فَإِنْ فَعَلَ فَقَدْ خَانَهُمْ»


Ibn-Majah-619

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

619 . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிம்களுள் யாரும் மலஜலம் கழித்து இயல்பு நிலையை அடையாமல் (அவற்றை) அடக்கி வைத்துக்கொண்டு தொழுகைக்காக நிற்கவேண்டாம்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)


«لَا يَقُومُ أَحَدٌ مِنَ الْمُسْلِمِينَ وَهُوَ حَاقِنٌ حَتَّى يَتَخَفَّفَ»


Ibn-Majah-4273

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

4273.


«إِنَّ صَاحِبَيِ الصُّورِ بِأَيْدِيهِمَا، أَوْ فِي أَيْدِيهِمَا قَرْنَانِ، يُلَاحِظَانِ النَّظَرَ مَتَى يُؤْمَرَانِ»


Ibn-Majah-3989

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3989. உமர் (ரலி) அவர்கள், ஒரு நாள் மஸ்ஜிதுன் நபவீ பள்ளிவாசலுக்கு சென்றார்கள். அப்போது முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் மண்ணறைக்கருகில் அமர்ந்து அழுதுக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள், “உம்மை இவ்வாறு அழ வைத்தது எது? (என்னக் காரணம்) என்று கேட்டார்கள். அதற்கு முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள், “குறைந்த அளவான முகஸ்துதியும் இணைவைத்தலாகும். அல்லாஹ்வின் நேசரை பகைத்துக் கொள்பவர் அல்லாஹ்விடம் போர்ப் பிரகடனம் செய்தவர் ஆவார். அல்லாஹ், நல்லோர்களான; இறையச்சமுடையோர்களான; (மக்களை விட்டு) விலகி வாழ்கின்றோர்களை நேசிக்கிறான். ஒரு இடத்தில் அவர்கள் இல்லாவிட்டால் அவர்களை யாரும் தேடமாட்டார்கள். ஒரு இடத்தில் அவர்கள் இருந்தாலும் அவர்கள் யாராலும் அழைக்கப்பட மாட்டார்கள். யாராலும் அறியப்பட மாட்டார்கள். அவர்களின் உள்ளம் நேர்வழியின் விளக்காகும். இருள்நிறைந்த (பாவம் என்னும்) தூசிகளிலிருந்து அவர்கள் நீங்கியவர்களாக இருப்பார்கள்” என்று நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியேற்ற இந்த செய்தி தான் என்னை அழவைத்துவிட்டது என்று கூறினார்கள்.


أَنَّهُ خَرَجَ يَوْمًا إِلَى مَسْجِدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَوَجَدَ مُعَاذَ بْنَ جَبَلٍ قَاعِدًا عِنْدَ قَبْرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبْكِي؟ فَقَالَ: مَا يُبْكِيكَ؟ قَالَ: يُبْكِينِي شَيْءٌ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّ يَسِيرَ الرِّيَاءِ شِرْكٌ، وَإِنَّ مَنْ عَادَى لِلَّهِ وَلِيًّا، فَقَدْ بَارَزَ اللَّهَ بِالْمُحَارَبَةِ، إِنَّ اللَّهَ يُحِبُّ الْأَبْرَارَ الْأَتْقِيَاءَ الْأَخْفِيَاءَ، الَّذِينَ إِذَا غَابُوا لَمْ يُفْتَقَدُوا، وَإِنْ حَضَرُوا لَمْ يُدْعَوْا، وَلَمْ يُعْرَفُوا قُلُوبُهُمْ مَصَابِيحُ الْهُدَى، يَخْرُجُونَ مِنْ كُلِّ غَبْرَاءَ مُظْلِمَةٍ»


Next Page » « Previous Page