Category: ஸுனன் குப்ரா-பைஹகீ

Sunan al-Kubra lil Behaqi
Al-Sunan al-Kabir

Kubra-Bayhaqi-21175

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

21175. ஹதீஸ் எண்-21174 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.


قَالَ أَبُو عُبَيْدٍ: قَوْلُهُ الدُّعَابَةُ يَعْنِي: الْمُزَاحَ


Kubra-Bayhaqi-21174

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

21174. நான் உண்மையைத் தவிர வேறெதையும் கூறமாட்டேன்! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதன் காரணம்) நபித்தோழர்களில் சிலர் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (எங்களிடத்தில் நகைச்சுவையாக பேசி) எங்களை சிரிக்கவைக்கிறீர்களே? என்று கேட்டனர். அப்போது தான் அவர்கள், “நான் உண்மையைத் தவிர வேறெதையும் கூறமாட்டேன்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


لَا أَقُولُ إِلَّا حَقًّا ” , قَالَ بَعْضُ أَصْحَابِهِ: إِنَّكَ تُلَاعِبُ يَا رَسُولَ اللهِ , قَالَ: ” لَا أَقُولُ إِلَّا حَقًّا ” ,

قَالَ بَعْضُ أَصْحَابِهِ: إِنَّكَ تُلَاعِبُ يَا رَسُولَ اللهِ , قَالَ: ” لَا أَقُولُ إِلَّا حَقًّا


Kubra-Bayhaqi-21173

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

21173. (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் நபித்தோழர்களில்) சிலர் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (எங்களிடத்தில் நகைச்சுவையாக பேசி) எங்களை சிரிக்கவைக்கிறீர்களே? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உண்மையைத் தவிர வேறெதையும் சொல்லவில்லையே!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


قِيلَ: يَا رَسُولَ اللهِ , إِنَّكَ تُدَاعِبُنَا , فَقَالَ: ” إِنِّي لَا أَقُولُ إِلَّا حَقًّا


Kubra-Bayhaqi-19244

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

19244. இறைநம்பிக்கையாளரைத் தவிர வேறு யாரும் சொர்க்கத்தில் நுழைய முடியாது. மினாவுடைய நாட்கள் (பிறை 11, 12, 13) உண்ணுவது மற்றும் பருகுவதற்குரிய நாட்களாகும். இதனை எழுந்து அறிவிப்பு செய்வீராக” என்று நபி (ஸல்) அவர்கள் கிபார் குலத்தைச் சார்ந்த மனிதரிடம் கூறினார்கள்.

சுலைமான் என்ற அறிவிப்பாளர் மினாவுடைய நாட்கள் அறுப்பதற்குரிய நாட்களுமாகும் என்ற வார்த்தையைக் கூடுதலாக அறிவித்துள்ளார். இதை இப்னு ஜுரைஜ் கூறியுள்ளார்.

 

(வேறு சில அறிவிப்புகளில் கிபார் குலத்தைச் சார்ந்த அந்த மனிதர் பிஷ்ர் பின் ஸுஹைம் (ரலி) என்று வந்துள்ளது)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِرَجُلٍ مِنْ غِفَارٍ: ” قُمْ فَأَذِّنْ أَنَّهُ لَا يَدْخُلُ الْجَنَّةَ إِلَّا مُؤْمِنٌ , وَأَنَّهَا أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ أَيَّامُ مِنًى “.

زَادَ سُلَيْمَانُ بْنُ مُوسَى: وَذَبْحٍ , يَقُولُ: أَيَّامُ ذَبْحٍ , ابْنُ جُرَيْجٍ يَقُولُهُ


Kubra-Bayhaqi-19242

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

19242. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

…அய்யாமுத் தஷ்ரீக்” (துல்ஹஜ் 11,12,13 ஆகிய) நாட்கள் அனைத்தும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)


أَيَّامُ التَّشْرِيقِ كُلُّهَا ذَبْحٌ


Kubra-Bayhaqi-10227

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

10227. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அய்யாமுத் தஷ்ரீக்” (துல்ஹஜ் 11,12,13 ஆகிய) நாட்கள் அனைத்தும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)


أَيَّامُ التَّشْرِيقِ كُلُّهَا ذَبْحٌ


Kubra-Bayhaqi-19243

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

19243. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அய்யாமுத் தஷ்ரீக்” (துல்ஹஜ் 11,12,13 ஆகிய) நாட்கள் அனைத்தும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)


كُلُّ أَيَّامِ التَّشْرِيقِ ذَبْحٌ


Kubra-Bayhaqi-19241

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

19241. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

…அய்யாமுத் தஷ்ரீக்” (துல்ஹஜ் 11,12,13 ஆகிய) நாட்கள் அனைத்தும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)


عَرَفَاتٌ مَوْقِفٌ , وَارْفَعُوا عَنْ عُرَنَةَ , وَكُلُّ مُزْدَلِفَةَ مَوْقِفٌ وَارْفَعُوا عَنْ مُحَسِّرٍ , وَكُلُّ فِجَاجِ مِنًى مَنْحَرٌ , وَفِي كُلِّ أَيَّامِ التَّشْرِيقِ ذَبْحٌ.


Kubra-Bayhaqi-19239

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

19239. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

…அய்யாமுத் தஷ்ரீக்” (துல்ஹஜ் 11,12,13 ஆகிய) நாட்கள் அனைத்தும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)


كُلُّ عَرَفَاتٍ مَوْقِفٌ , وَارْفَعُوا عَنْ عَرَفَاتٍ , وَكُلُّ مُزْدَلِفَةَ مَوْقِفٌ وَارْفَعُوا عَنْ مُحَسِّرٍ , وَكُلُّ فِجَاجِ مِنًى مَنْحَرٌ , وَكُلُّ أَيَّامِ التَّشْرِيقِ ذَبْحٌ.


Next Page » « Previous Page