Category: ஸுனன் குப்ரா-பைஹகீ

Sunan al-Kubra lil Behaqi
Al-Sunan al-Kabir

Kubra-Bayhaqi-10226

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

10226. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மினாவின் இடங்கள் அனைத்தும் (குர்பானி பிராணிகளை) அறுப்பதற்கு ஏற்ற இடங்களாகும். அய்யாமுத் தஷ்ரீக்” (துல்ஹஜ் 11,12,13 ஆகிய) நாட்கள் அனைத்தும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)


كُلُّ مِنًى مَنْحَرٌ , وَكُلُّ أَيَّامِ التَّشْرِيقِ ذَبْحٌ


Kubra-Bayhaqi-4316

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4316. நபி (ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணாகிய மைமூனா பின்த் ஸஅத் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! பைத்துல் மக்திஸ் பள்ளிவாசல் பற்றி எங்களுக்கு மார்க்கத்தீர்ப்பு கூறுங்கள் என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அங்கு சென்று நீங்கள் தொழுதுக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். (அது சமயம் அந்த ஊர்களில் யுத்தம் நடைப்பெற்றுக்கொண்டிருந்தது). நீங்கள் அங்கு சென்று தொழமுடியவில்லையென்றால் அந்தப்பள்ளிவாசலில் விளக்கெரிப்பதற்காக ஆலிவ் எண்ணெயை அனுப்புங்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸியாத் பின் அபூ ஸவ்தா


أَنَّهَا قَالَتْ: يَا رَسُولَ اللهِ، أَفْتِنَا فِي بَيْتِ الْمَقْدِسِ قَالَ: ” إِيتُوهُ فَصَلُّوا فِيهِ ” وَكَانَتِ الْبِلَادُ إِذْ ذَاكَ حَرْبًا ” فَإِنْ لَمْ تَأْتُوهُ وَتُصَلُّوا فِيهِ فَابْعَثُوا بِزَيْتٍ يُسْرَجُ فِي قَنَادِيلِهِ


Kubra-Bayhaqi-21168

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

21168. ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (வாகனத்தில்) என்னை ஏற்றிவிடுங்கள்” என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒட்டகக் குட்டியின் மீது உம்மை நாம் ஏற்றிவிடுவோம் என்று கூறினார்கள். அம்மனிதர், அல்லாஹ்வின் தூதரே! நான் ஒட்டகக் குட்டியை வைத்து என்ன செய்வேன்? (அதில் பயணிக்க முடியாதே) என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எல்லா) ஒட்டகங்களும் தாய் ஒட்டகத்திற்கு குட்டிகளாகத்தானே இருக்கின்றன? என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


أَنَّ رَجُلًا اسْتَحْمَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّا حَامِلُوكَ عَلَى وَلَدِ نَاقَةٍ ” , فَقَالَ: يَا رَسُولَ اللهِ , مَا أَصْنَعُ بِوَلَدِ نَاقَةٍ؟ فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” وَهَلْ تَلِدُ الْإِبِلَ إِلَّا النُّوقُ


Kubra-Bayhaqi-19013

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

19013. யாருக்கு வசதி இருந்தும் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் நம்முடைய பள்ளிவாசல்களுக்கு வரவே வேண்டாம் என்று அபூஹுரைரா (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் முஸைய்யிப் (ரஹ்)


مَنْ وَجَدَ سَعَةً فَلَمْ يُضَحِّ فَلَا يَقْرَبْنَا فِي مَسْجِدِنَا

مَوْقُوفٌ

أَخْبَرَنَاهُ أَبُو بَكْرِ بْنُ الْحَارِثِ , أنبأ عَلِيُّ بْنُ عُمَرَ الْحَافِظُ , ثنا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ , ثنا أَحْمَدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ وَهْبٍ , حَدَّثَنِي عَمِّي، ثنا عَبْدُ اللهِ بْنُ عَيَّاشٍ , فَذَكَرَهُ


Kubra-Bayhaqi-19012

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

19012. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாருக்கு குர்பானி கொடுப்பதற்கு வசதி இருந்தும் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் நம்முடைய (ஈதுல் அழ்ஹா) தொழும் இடத்திற்கு வரவே வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


مَنْ وَجَدَ سَعَةً لِأَنْ يُضَحِّيَ فَلَمْ يُضَحِّ فَلَا يَحْضُرْ مُصَلَّانَا


Kubra-Bayhaqi-19246

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

19246. ஹதீஸ் எண்-19245 இல் வரும் செய்தி இந்தஅறிவிப்பாளர் தொடரில் அபூஹுரைரா (ரலி) வழியாக வந்துள்ளது.

 

பைஹகீ இமாம் கூறுகிறார்:

அபூஅஹ்மத்-இப்னு அதீ அவர்கள், முஆவியா பின் யஹ்யா வழியாக வரும் இந்த அறிவிப்பாளர்தொடர்களில் எதுவும் சரியானதல்ல. காரணம் இவர் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளமுடியாத, பலவீனமானவர் ஆவார்.

 


وَأَخْبَرَنَا أَبُو سَعْدٍ، أنبأ أَبُو أَحْمَدَ، ثنا جَعْفَرُ بْنُ أَحْمَدَ بْنِ عَاصِمٍ، ثنا دُحَيْمٌ، ثنا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ، عَنِ الصَّدَفِيِّ، فَذَكَرَهُ وَقَالَ: عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ.

قَالَ أَبُو أَحْمَدَ: وَهَذَا سَوَاءٌ قَالَ: عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ وَسَوَاءٌ قَالَ: عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي سَعِيدٍ، جَمِيعًا غَيْرُ مَحْفُوظَيْنِ لَا يَرْوِيهُمَا غَيْرُ الصَّدَفِيِّ. قَالَ الشَّيْخُ رَحِمَهُ اللهُ: وَالصَّدَفِيُّ ضَعِيفٌ لَا يُحْتَجُّ بِهِ


Kubra-Bayhaqi-19245

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

19245. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அய்யாமுத் தஷ்ரீக்” (துல்ஹஜ் 11,12,13 ஆகிய) நாட்கள் அனைத்தும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும்.

அறிவிப்பவர்கள்: அபூஸயீத் (ரலி), அபூஹுரைரா (ரலி)

….


أَيَّامُ التَّشْرِيقِ كُلُّهَا ذَبْحٌ

أَخْبَرَنَاهُ أَبُو سَعْدٍ الْمَالِينِيُّ , أنبأ أَبُو أَحْمَدَ بْنُ عَدِيٍّ الْحَافِظُ , أنبأ عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ مُسْلِمٍ , ثنا دُحَيْمٌ , ثنا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ , ثنا مُعَاوِيَةُ بْنُ يَحْيَى , فَذَكَرَهُ وَقَالَ: عَنْ أَبِي سَعِيدٍ.


Kubra-Bayhaqi-7557

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7557.


أَنَّ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ، فَذَكَرَهُ بِمَعْنَاهُ. فَهَذِهِ الْأَخْبَارُ وَمَا وَرَدَ فِي مَعْنَاهَا تَدُلُّ عَلَى تَحْرِيمِ التَّحَلِّي بِالذَّهَبِ


Kubra-Bayhaqi-10343

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10343.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

…இரவில் பயணம் மேற்கொள்ளுங்கள். ஏனெனில் இரவு நேரத்தில் தான் பூமி சுருட்டப்படுகிறது (சுருக்கப்படுகிறது).

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


إِذَا أَخْصَبَتِ الْأَرْضُ فَانْزِلُوا عَنْ ظَهْرِكُمْ وَأَعْطُوا حَقَّهُ الْكَلَأَ وَإِذَا أَجْدَبَتِ الْأَرْضُ فَامْضُوا عَلَيْهَا , وَعَلَيْكُمْ بِالدُّلْجَةِ فَإِنَّ الْأَرْضَ تُطْوَى بِاللَّيْلِ


Kubra-Bayhaqi-10342

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

10342. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவில் பயணம் மேற்கொள்ளுங்கள். ஏனெனில் இரவு நேரத்தில் தான் பூமி சுருட்டப்படுகிறது (சுருக்கப்படுகிறது).

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


عَلَيْكُمْ بِالدُّلْجَةِ فَإِنَّ الْأَرْضَ تُطْوَى بِاللَّيْلِ


Next Page » « Previous Page