Category: ஸுனன் குப்ரா-பைஹகீ

Sunan al-Kubra lil Behaqi
Al-Sunan al-Kabir

Kubra-Bayhaqi-5208

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5208.

(தொழுகை) வரிசைக்குப் பின்னால் தனியாகத் தொழுது கொண்டிருந்த ஒருவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டு (அத்தொழுகையை மறுபடியும்) மீட்டுமாறு அவருக்கு உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பவர்: வாபிஸா பின் மஅபத் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يُصَلِّي خَلْفَ الصُّفُوفِ وَحْدَهُ، فَأَمَرَهُ فَأَعَادَ الصَّلَاةَ


Kubra-Bayhaqi-5207

ஹதீஸின் தரம்: Pending

5207.

(தொழுகை) வரிசைக்குப் பின்னால் தனியாகத் தொழுது கொண்டிருந்த ஒருவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டு (அத்தொழுகையை மறுபடியும்) மீட்டுமாறு அவருக்கு உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பவர்: வாபிஸா பின் மஅபத் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبْصَرَ رَجُلًا يُصَلِّي خَلْفَ الصَّفِّ وَحْدَهُ، فَأَمَرَهُ أَنْ يُعِيدَ الصَّلَاةَ “.


Kubra-Bayhaqi-6572

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6572. அப்துல்லாஹ் பின் உபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

திடீர் மரணம் ஏற்படுவதை வெறுக்க வேண்டுமா? என நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், என்ன காரணத்திற்காக அதை வெறுக்க வேண்டும்?.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் இதைப்பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள், அது இறைநம்பிக்கையாளருக்கு நிம்மதியாகும். பாவிக்கு (இறைகோபத்தின்) தண்டனையாகும் என்று கூறினார்கள் என பதிலளித்தார்கள்.


سَأَلْتُ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا عَنْ مَوْتِ الْفُجَاءَةِ، أَيُكْرَهُ؟. قَالَتْ: لِأِيِّ شَيْءٍ يُكْرَهُ؟ سَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ، فَقَالَ: ” رَاحَةٌ لِلْمُؤْمِنِ، وَأَخْذُ أَسَفٍ لِلْفَاجِرِ


Kubra-Bayhaqi-6570

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6570. திடீர் மரணம் இறைகோபத்தின் வெளிப்பாடாகும் என்று உபைத் பின் காலித் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: தமீம் பின் ஸலமா (ரஹ்) அல்லது ஸஃது பின் உபைதா (ரஹ்)

இந்த செய்தியை தமீம் பின் ஸலமா ஒரு தடவை உபைத் பின் காலித் (ரலி) அவர்களின் சொல்லாகவும், ஒரு தடவை நபி (ஸல்) அவர்களின் சொல்லாகவும் அறிவித்துள்ளார்.


قَالَ مَرَّةً عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ مَرَّةً أُخْرَى عَنْ عُبَيْدِ بْنِ خَالِدٍ قَالَ: ” مَوْتُ الْفُجَاءَةِ أَخْذَةُ أَسَفٍ


Kubra-Bayhaqi-3449

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3449. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

சுத்ராவை (தடுப்பை) நோக்கியே தவிர நீங்கள் தொழாதீர்கள்! உங்களுக்கு முன்னால் யாரையும் நடக்க விடாதீர்கள்! மீறினால் அவருடன் சண்டையிடுங்கள்! (தடுங்கள்). ஏனெனில் அவருடன் கூட்டாளி (ஷைத்தான்) இருக்கிறான்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


لَا تُصَلُّوا إِلَّا إِلَى سُتْرَةٍ وَلَا تَدَعْ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْكَ فَإِنْ أَبَى فَقَاتِلْهُ فَإِنَّ مَعَهُ الْقَرِينُ


Kubra-Bayhaqi-2556

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2556. ஹதீஸ் எண்-2555 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது. என்றாலும் இதில்

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஃவு செய்தால் ஸுப்ஹான ரப்பியல் அளீமி வபிஹம்திஹீ என்று மூன்று தடவையும், ஸஜ்தா செய்தால் ஸுப்ஹான ரப்பியல் அஃலா வபிஹம்திஹீ என்று மூன்று தடவையும் கூறுவார்கள் என இடம்பெற்றுள்ளது…


فَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَكَعَ قَالَ: ” سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ وَبِحَمْدِهِ ” ثَلَاثًا، وَإِذَا سَجَدَ قَالَ: ” سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى وَبِحَمْدِهِ ” ثَلَاثًا


Kubra-Bayhaqi-2555

ஹதீஸின் தரம்: Pending

2555. மகத்துவமிக்க உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக! (அல்குர்ஆன் 56 : 96 ஃபஸப்பிஹ் பிஸ்மி ரப்பிகல் அளீம்) என்ற வசனம் இறங்கிய போது இதை உங்கள் ருகூஃவில் ஆக்கிக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு கூறினார்கள்.

உயர்ந்த உனது இறைவனின் பெயரைத் துதிப்பீராக! (அல்குர்ஆன் 87 : 1 ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா) என்ற வசனம் இறங்கியதும் இதை உங்களுடைய சுஜூதில் ஆக்கிக் கொள்ளுங்கள் என்று (நபி-ஸல்) அவர்கள் எங்களுக்கு கூறினார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)


لَمَّا نَزَلَتْ {فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ} [الواقعة: 74] قَالَ لَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” اجْعَلُوهَا فِي رُكُوعِكُمْ ” فَلَمَّا نَزَلَتْ {سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى} [الأعلى: 1] قَالَ لَنَا: ” اجْعَلُوهَا فِي سُجُودِكُمْ


Kubra-Bayhaqi-19759

ஹதீஸின் தரம்: Pending

19759.

ஒரு பயணத்தில் சென்ற போது நானும் நபி (ஸல்) அவர்களும் ஓட்டப் பந்தயம் வைத்தோம். அதில் நான் முந்தி விட்டேன். பின்னர் நான் உடல் பருமனாக ஆன போது மற்றொரு முறை நடந்த ஓட்டப் பந்தயத்தில் அவர்கள் என்னை முந்தி விட்டார்கள். அப்போது ‘அதற்கு இது சரியாகி விட்டது’ என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ , فَسَابَقْتُهُ , فَسَبَقْتُهُ عَلَى رِجْلِيَّ، فَلَمَّا حَمَلْتُ اللَّحْمَ , سَابَقْتُهُ فَسَبَقَنِي، فَقَالَ: ” هَذِهِ بِتِلْكَ السَّبْقَةِ “.


Next Page » « Previous Page