Category: ஸுனன் குப்ரா-பைஹகீ

Sunan al-Kubra lil Behaqi
Al-Sunan al-Kabir

Kubra-Bayhaqi-6154

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6154. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நோன்புப் பெருநாளில் சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். மேலும் அவைகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள்.

அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் பின் அபூபக்ர் (ரஹ்)


كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَخْرُجُ يَوْمَ الْفِطْرِ حَتَّى يَأْكُلَ تَمَرَاتٍ، وَيَأْكُلُهُنَّ وِتْرًا

وَكَذَلِكَ رَوَاهُ عُتْبَةُ بْنُ حُمَيْدٍ الضَّبِّيُّ , عَنْ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي بَكْرٍ


Kubra-Bayhaqi-6152

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6152. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நோன்புப் பெருநாளில் சில பேரித்தம் பழங்களை உண்ணாமல் (பெருநாள் தொழுகைக்கு) புறப்படமாட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يَغْدُو يَوْمَ الْفِطْرِ حَتَّى يَأْكُلَ تَمَرَاتٍ


Kubra-Bayhaqi-6153

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6153.


كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُفْطِرُ يَوْمَ الْفِطْرِ عَلَى تَمَرَاتٍ قَبْلَ أَنْ يَغْدُوَ “.

أَخْبَرَنَاهُ أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ , ثنا أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ , أنبأ عَلِيُّ بْنُ عَبْدِ الْعَزِيزِ، ثنا عَمْرُو بْنُ عَوْنٍ , أنبأ هُشَيْمٌ فَذَكَرَهُ. وَكَذَلِكَ رَوَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَحْمَدُ بْنُ مَنِيعٍ , عَنْ هُشَيْمٍ، وَقَدْ أَكْثَرَ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْبُخَارِيُّ مَا أَخْرَجَهُ، بِرِوَايَةِ مُرَجَّى بْنِ رَجَاءٍ , عَنْ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي بَكْرٍ , عَنْ أَنَسٍ


Kubra-Bayhaqi-10265

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10265. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபாவில் கற்கள் நிறைந்த இடத்தில் தம் ஒட்டகத்தை அமர வைத்து, அங்கேயே (இரண்டு ரக்அத்கள்) தொழுதார்கள்.

அறிவிப்பவர்: நாஃபிஉ (ரஹ்)

இப்னு உமர் (ரலி) அவர்களும் இது போன்றே செய்வார் என நாஃபிஉ (ரஹ்)  கூறுகிறார்.


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَاخَ بِالْبَطْحَاءِ الَّتِي بِذِي الْحُلَيْفَةِ يُصَلِّي بِهَا “

قَالَ: وَكَانَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ يَفْعَلُ ذَلِكَ


Kubra-Bayhaqi-11425

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

11425. ஹதீஸ் எண்-11424 இல் வரும் செய்தி இந்தஅறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.


فَذَكَرَهُ


Kubra-Bayhaqi-11424

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

11424. அல்லாஹ் கூறுவதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு கூட்டாளிகளில் ஒருவர் தன்னுடைய தோழருக்கு மோசடி செய்யாதவரை நான் அவர்களுடன் மூன்றாவது (கூட்டாளி) ஆவேன். ஆனால் மோசடி செய்தால் அவ்விருவரிடமிருந்து நான் வெளியேறி விடுகிறேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


أَنَا ثَالِثُ الشَّرِيكَيْنِ مَا لَمْ يَخُنْ أَحَدُهُمَا صَاحِبَهُ، فَإِذَا خَانَ خَرَجْتُ مِنْ بَيْنِهِمَا


Kubra-Bayhaqi-6172

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6172. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நோன்பு பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களும் கூறவேண்டும். அவ்விரண்டிற்கு பின்பு (கிராஅத்) குர்ஆன் ஓதவேண்டும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


التَّكْبِيرُ فِي الْفِطْرِ سَبْعٌ فِي الْأُولَى، وَخَمْسٌ فِي الْآخِرَةِ، وَالْقِرَاءَةُ بَعْدَهُمَا كِلْتَيْهِمَا


Next Page » « Previous Page