Category: நஸயீ குப்ரா

As-Sunan al-Kubra

Kubra-Nasaayi-9264

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9264.

அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருநாள் விட்டு ஒருநாள் தலைவாருவதைத் தவிர (அடிக்கடி வரம்புமீறி)  தலைவாருவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.


«نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ التَّرَجُّلِ إِلَّا غِبًّا»


Kubra-Nasaayi-9262

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9262. அபூகதாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்கு (தோல்பட்டை வரைக்கும்) அடர்த்தியான தலை முடி இருந்து. இது பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், முடியை அழகுப்படுத்துமாறும், ஒவ்வொரு நாளும் (தலை வாரி) சீவுமாறும் கட்டளையிட்டார்கள்.


كَانَتْ لَهُ جُمَّةٌ ضَخْمَةٌ فَسَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَهُ أَنْ يُحْسِنَ إِلَيْهَا، وَأَنْ يَتَرَجَّلَ كُلَّ يَوْمٍ


Kubra-Nasaayi-10100

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

10100. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யூதர்கள் மற்றும் கிறித்தவர்கள் ஸலாம் கூறுவதைப் போன்று நீங்கள் ஸலாம் கூறாதீர்கள். அவர்களுடைய ஸலாம் (வார்த்தைகள் இல்லாமல்) முன்கைகள் மூலமும், தலை (தாழ்த்துவதின்) சைக்கினையின் மூலமும் இருக்கும்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


«لَا تُسَلِّمُوا تَسْلِيمَ الْيَهُودِ وَالنَّصَارَى، فَإِنَّ تَسْلِيمَهُمْ بِالْأَكُفِّ وَالرُّؤوسِ وَالْإِشَارَةِ»


Kubra-Nasaayi-10637

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10637.


يَضْحَكُ اللهُ إِلَى رَجُلَيْنِ: رَجُلٍ لَقِيَ الْعَدُوَّ وَهُوَ عَلَى فَرَسٍ مِنْ أَمْثَلِ خَيْلِ أَصْحَابِهِ فَانْهَزَمُوا وَثَبَتَ، فَإِنَّ قُتِلَ اسْتُشْهِدَ، وَإِنْ بَقِيَ فَذَلِكَ الَّذِي يَضْحَكُ اللهُ إِلَيْهِ، وَرَجُلٍ قَامَ فِي جَوْفِ اللَّيْلِ لَا يَعْلَمُ بِهِ أَحَدٌ، فَتَوَضَّأَ فَأَسْبَغَ الْوُضُوءَ، ثُمَّ حَمِدَ اللهَ وَمَجَّدَهُ، وَصَلَّى عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَاسْتَفْتَحَ الْقُرْآنَ، فَذَلِكَ الَّذِي يَضْحَكُ اللهُ إِلَيْهِ يَقُولُ: انْظُرُوا إِلَى عَبْدِي قَائِمًا لَا يَرَاهُ أَحَدٌ غَيْرِي


Kubra-Nasaayi-2182

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

அடக்கத்தலத்தின் மீது உட்காருவது குறித்து வந்துள்ள கண்டனம்.

2182. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர், ஒரு நெருப்புக்கங்கின் மீது அமர்ந்து அது அவரது ஆடையைக் கரித்து விடுவதானது, ஓர் அடக்கத்தலத்தின் (கப்ரு) மீது அவர் உட்காருவதைவிட அவருக்குச் சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَأَنْ يَجْلِسَ أَحَدُكُمْ عَلَى جَمْرَةٍ حَتَّى تَحْرِقَ ثِيَابَهُ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَجْلِسَ عَلَى قَبْرٍ»


Kubra-Nasaayi-2167

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

கப்ரை, காரையால் பூசுவது.

2167. கப்ரை, காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


«نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ تَجْصِيصِ الْقُبُورِ»


Kubra-Nasaayi-2166

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

கப்ரின் மீது கட்டடம் எழுப்புவது (தடை)

2166. கப்ரை, காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவதையும்; அதன் மீது கட்டடம் எழுப்புவதையும்; மற்ற எவரும் அதன் மீது அமர்வதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


«نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ تَقْصِيصِ الْقُبُورِ أَوْ يُبْنَى عَلَيْهَا أَوْ يَجْلِسُ عَلَيْهَا أَحَدٌ»


Kubra-Nasaayi-2165

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

கப்ரின் மீது (தோண்டிய மண்ணை விட) அதிகப்படுத்துதல்.

2165. கப்ரின் மீது கட்டடம் எழுப்புவதையும் அல்லது அதில் அதிகப்படுத்துவதையும் அல்லது அதை (சுண்ணாம்புக் கலவையால்) பூசப்படுவதையும்; அதன் மீது எழுதுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸுலைமான் பின் மூஸா, “கப்ரின் மீது எழுதுவதையும்” அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்று கூடுதலாக அறிவித்துள்ளார்.


«نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُبْنَى عَلَى الْقَبْرِ أَوْ يُزَادَ عَلَيْهِ أَوْ يُجَصَّصَ»

زَادَ سُلَيْمَانُ بْنُ مُوسَى أَوْ يُكْتَبَ عَلَيْهِ


Kubra-Nasaayi-6248

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6248.


كَانَ رَجُلٌ يُدَايِنُ النَّاسَ، وَكَانَ إِذَا رَأَى إِعْسَارَ الْمُعْسِرِ قَالَ لِفَتَاهُ: تَجَاوَزْ عَنْهُ؛ لَعَلَّ اللهَ يَتَجَاوَزُ عَنَّا، فَلَقِيَ اللهَ فَتَجَاوَزَ عَنْهُ


Next Page » « Previous Page