ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
10575. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் முறையாக உளூ (அங்கத் தூய்மை) செய்யும்போது (அவர் செய்திருந்த அவருடைய சிறு பாவங்கள்) அவருடைய செவி, பார்வை , கைகள், கால்கள் போன்றவற்றிலிருந்து வெளியேறிவிடுகின்றன.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
அபூளப்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மேற்கண்ட செய்தியை, அம்ர் பின் அபஸா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்ததையும் நான் செவியேற்றுள்ளேன்.
மேலும், “யார் இரவில் உளூ செய்து அல்லாஹ்வின் நினைவுடன் தூங்குகிறாரோ அவர் இரவில் (படுக்கையில்) புரளும் நேரமெல்லாம், அவர் அல்லாஹ்விடத்தில் கேட்கும் இம்மை மறுமையின் தேவைகளை அல்லாஹ் கொடுத்துவிடுகிறான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என அம்ர் பின் அபஸா (ரலி) அவர்கள் அறிவித்ததையும் நான் செவியேற்றுள்ளேன்.
«مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ذَهَبَ الْإِثْمُ مِنْ سَمْعِهِ، وَبَصَرِهِ، وَيَدَيْهِ، وَرِجْلَيْهِ»
قَالَ أَبُو ظَبْيَةَ الْحِمْصِيُّ: وَأَنَا سَمِعْتُ عَمْرَو بْنَ عَبَسَةَ يُحَدِّثُ بِهَذَا، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: وَسَمِعْتُهُ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ بَاتَ طَاهِرًا عَلَى ذِكْرِ اللهِ لَمْ يَتَعَارَّ سَاعَةً مِنَ اللَّيْلِ يَسْأَلُ اللهَ فِيهَا شَيْئًا مِنْ أَمْرِ الدُّنْيَا وَالْآخِرَةِ إِلَّا آتَاهُ إِيَّاهُ»
خَالَفَهُمَا شَمِرُ بْنُ عَطِيَّةَ
சமீப விமர்சனங்கள்