Category: நஸயீ குப்ரா

As-Sunan al-Kubra

Kubra-Nasaayi-1289

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1289. நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ரமளானில் நோன்பு நோற்றோம். ரமளானில் ஏழு நாட்கள் மீதமிருக்கும் வரை எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. இருபத்தி மூன்றாம் நாள் இரவில், மூன்றில் ஒரு பகுதி நேரம் வரை எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். இருபத்தி நான்காம் நாள் எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை.

இருபத்தி ஐந்தாம் நாள் பாதி இரவை தாண்டும் வரை தொழுகை நடத்தினார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! மீதமுள்ள இந்த இரவு முழுதும் எங்களுக்கு தொழுகை நடத்துங்களேன்! என்று கூறினேன்.

அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஒரு மனிதர், இமாம் தொழுகை நடத்தி திரும்பி செல்லும் வரை அவருடன் தொழுதால் அவருக்கு அந்த இரவு முழுதும் நின்று வணங்கிய நன்மை எழுதப்படும்” என்று கூறினார்கள்.

இருபத்தி ஆறாம் நாள் எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. இருபத்தி ஏழாம் நாள் இரவில் தமது மனைவிகளையும், குடும்பத்தினைரையும், மற்ற மக்களையும் ஒன்று திரட்டி, சஹர் உணவு தவறிவிடும் என்று நாங்கள் நினைக்கும் அளவுக்குத் தொழுகை நடத்தினார்கள். அதற்கு பின் அவர்கள் மீதமுள்ள நாட்களில் தொழுகை நடத்தவில்லை…

அறிவிப்பவர் : அபூதர் (ரலி)

அபூதர் (ரலி) அவர்கள் ஃபலாஹ் தவறிவிடும் அளவிற்கு, என்று கூறும் போது அறிவிப்பாளர்களில் ஒருவரான ஜுபைர் பின் நுஃபைர், ஃபலாஹ்

صُمْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَمَضَانَ فَلَمْ يَقُمْ بِنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَقِيَ سَبْعٌ مِنَ الشَّهْرِ، فَقَامَ بِنَا حَتَّى ذَهَبَ نَحْوٌ مِنْ ثُلُثِ اللَّيْلِ، ثُمَّ كَانَتْ سَادِسَةٌ فَلَمْ يَقُمْ، فَلَمَّا كَانَتِ الْخَامِسَةُ، قَامَ بِنَا حَتَّى ذَهَبَ نَحْوٌ مِنْ شَطْرِ اللَّيْلِ. قُلْتُ: يَا رَسُولَ اللهِ، لَوْ نَفَّلْتَنَا قِيَامَ هَذِهِ اللَّيْلَةِ. قَالَ: «إِنَّ الرَّجُلَ إِذَا صَلَّى مَعَ الْإِمَامِ حَتَّى يَنْصَرِفَ حُسِبَ لَهُ قِيَامُ لَيْلَةٍ». قَالَ: ثُمَّ كَانَتِ الرَّابِعَةُ فَلَمْ يَقُمْ بِنَا، فَلَمَّا بَقِيَ ثَلَاثٌ مِنَ الشَّهْرِ أَرْسَلَ إِلَى بَنَاتِهِ وَنِسَائِهِ، وَحَشَدَ النَّاسَ فَقَامَ بِنَا حَتَّى خَشِينَا أَنْ يَفُوتَنَا الْفَلَاحُ، ثُمَّ لَمْ يَقُمْ بِنَا شَيْئًا مِنَ الشَّهْرِ قَالَ دَاوُدُ: قُلْتُ: مَا الْفَلَاحُ؟، قَالَ: السَّحُورُ


Kubra-Nasaayi-1301

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1301. நுஐம் பின் ஸியாத் (ரஹ்) கூறியதாவது:

நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் ஹிம்ஸ் பகுதியில் (ஒரு பள்ளிவாயிலின்) உரைமேடையில் நின்று கூறினார்கள்:

நாங்கள் ரமளான் மாதத்தின் இருபத்தி மூன்றாம் இரவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இரவின் மூன்றில் ஒரு பகுதி வரை தொழுதோம். பின்னர் இருபத்தி ஐந்தாம் இரவில் இரவில் பாதி வரை தொழுதோம். பின்னர் இருபத்தி ஏழாம் இரவில் சஹர் உணவு தவறிவிடும் என்று நினைக்கும் அளவுக்குத் தொழுதோம்.

நபித்தோழர்கள் சஹர் நேரத்தை ஃபலாஹ் என்றும் கூறுவார்கள்.


قَالَ: سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ، عَلَى مِنْبَرِ حِمْصٍ يَقُولُ: «قُمْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَهْرِ رَمَضَانَ لَيْلَةَ ثَلَاثٍ وَعِشْرِينَ إِلَى ثُلُثِ اللَّيْلِ الْأَوَّلِ، ثُمَّ قُمْنَا مَعَهُ لَيْلَةَ خَمْسٍ وَعِشْرِينَ إِلَى نِصْفِ اللَّيْلِ، ثُمَّ قُمْنَا معه لَيْلَةَ ِسبْعٍ وَعِشْرِينَ حَتَّى ظَنَنَّا أَنْ لَا نُدْرِكَ الْفَلَاحَ، وَكَانُوا يُسَمُّونَهُ السَّحُورَ»


Kubra-Nasaayi-916

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

916. மூவர் இருந்தால் அவர்களில் ஒருவர் தொழுகை நடத்தட்டும், அவர்களில் குர்ஆனை நன்கு ஓத தெரிந்தவரே இமாமத் செய்வதற்கு மிக தகுதியானவர் என்று நபி ஸல் அவர்கள்  கூறியதாக அபூ ஸயீத்  (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.


«إِذَا كَانُوا ثَلَاثَةً فَلْيَؤُمَّهُمْ أَحَدُهُمْ، وَأَحَقُّهُمْ بِالْإِمَامَةِ أَقْرَؤُهُمْ»


Kubra-Nasaayi-9109

ஹதீஸின் தரம்: More Info

9109. …அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரும், தமது மனைவியரிடம் மென்மையாக நடந்துக் கொள்பவருமே!”…

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


«ثُمَّ ذَكَرَ كَلِمَةً مَعْنَاهَا أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنَهُمْ خُلُقًا، وَأَلْطَفُهُمْ بِأَهْلِهِ»


Kubra-Nasaayi-9229

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

9229. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குறைந்த மஹரை பெறும் பெண்களே அதிகம் பரக்கத் உள்ள பெண்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


«أَعْظَمُ النِّسَاءِ بَرَكَةً أَيْسَرُهُنَّ مَئُونَةً»


Kubra-Nasaayi-3528

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

3528. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் கயிற்றில் முடிச்சிட்டு, அதில் ஊதுகிறாரோ அவர் சூனியம் செய்துவிட்டார். யார் சூனியம் செய்தாரோ அவர் அல்லாஹ்விற்கு இணைவைத்துவிட்டார்.

யார் தாயத் (போன்ற)தை தொங்க விடுகின்றாரோ அவர் அதன்பால் சாட்டப்படுவார். (அவருக்கு அல்லாஹ் பொருப்பாளனாக ஆக மாட்டான்).

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ عَقَدَ عُقْدَةً ثُمَّ نَفَثَ فِيهَا فَقَدْ سَحَرَ، وَمَنْ سَحَرَ فَقَدْ أَشْرَكَ، وَمَنْ تَعَلَّقَ شَيْئًا وُكِلَ إِلَيْهِ»


Kubra-Nasaayi-3932

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3932. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அப்து மனாஃபின் சந்ததிகளே! இந்த ஆலயத்தில் இரவு பகல் எந்நேரமும் தவாஃப் செய்பவரையும், தொழுபவரையும் நீங்கள் தடுக்காதீர்கள்.

அறிவிப்பவர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி)


«يَا بَنِي عَبْدِ مَنَافٍ لَا تَمْنَعُنَّ أَحَدًا طَافَ بِهَذَا الْبَيْتِ وَصَلَّى أَيَّ سَاعَةٍ شَاءَ مِنْ لَيْلٍ أَوْ نَهَارٍ»


Kubra-Nasaayi-1574

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1574. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அப்து மனாஃபின் சந்ததிகளே! இந்த ஆலயத்தில் இரவு பகல் எந்நேரமும் தவாஃப் செய்பவரையும், தொழுபவரையும் நீங்கள் தடுக்காதீர்கள்.

அறிவிப்பவர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி)


«يَا بَنِي عَبْدِ مَنَافٍ، لَا تَمْنَعُوا أَحَدًا طَافَ بِهَذَا الْبَيْتِ، وَصَلَّى أَيَّ سَاعَةٍ شَاءَ مِنْ لَيْلٍ أَوْ نَهَارٍ»


Kubra-Nasaayi-8952

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8952. யார் ஆணிடமோ, அல்லது பெண்ணிடமோ மலத் துவாரத்தில் உடலுறவு கொள்கின்றானோ அவனை அல்லாஹ் மறுமையில் பார்க்க மாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


«لَا يَنْظُرُ اللهُ إِلَى رَجُلٍ أَتَى رَجُلًا أَوِ امْرَأَةً فِي دُبُرٍ»


Kubra-Nasaayi-8966

ஹதீஸின் தரம்: Pending

8966. யார் தன்னுடைய மனைவியின் மலத்துவாரத்தில் உடலுறவு கொள்கின்றானோ அவன் சபிக்கப்பட்டவன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«مَلْعُونٌ مَنْ أَتَى امْرَأَةً فِي دُبُرِهَا»


Next Page » « Previous Page