17944. ஹதீஸ் எண்-17943 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
نَحْوَهُ
Musannaf-Abdur-Razzaq
Musannaf Abd al-Razzaq
17944. ஹதீஸ் எண்-17943 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
نَحْوَهُ
1377. இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“ஒருவர் ஒரே துணியை அணிந்தும் தொழலாம்; அது விசாலமான அளவுள்ளதாக இருந்தால் அதைத் தன் உடலில் போர்த்திக் கொள்ளலாம். இருப்பினும், கீழாடையுடன் மேலாடையையும் சேர்த்து அணிந்து தொழுவதே எனக்கு மிகவும் விருப்பமானது” என்று அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டார்.
பின்னர் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தொடர்பான ஒரு செய்தியை நமக்கு அறிவித்தார். – ஜாபிர் (ரலி) அவர்கள் தான் (அகபா உடன்படிக்கையில் கலந்துக் கொண்ட) நபித்தோழர்களில் இறுதியாக மரணித்தவர் ஆவார். –
அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்) அவர்களுக்கு முஹம்மத் பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் பனூஸலமா கிளையில் இருந்த ஜாபிர் (ரலி) அவர்களின் இல்லத்திற்குச் செல்வோம். ஒருமுறை நாங்கள் ஒரு குழுவாக இருந்தபோது, அவர்கள் தங்கள் இல்லத்திலேயே எங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவித்தார்கள். அப்போது அவர்களின் மேலாடை அங்கிருந்த ஆடைமாட்டும் குச்சியில் தொங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் ஒரேயொரு துணியை மட்டும் உடலில் போர்த்தியவாறு நின்றார்கள். அத்துணியோ அவர்களின் இரு தோள்களையும் முழுமையாக மறைக்கவில்லை. (அத்துணி நெசவு செய்யப்பட்ட ஒரு வகை ஆடை என்று முஹம்மத் பின் அலீ (ரஹ்) குறிப்பிடுகிறார்.) “ஒரே ஆடை அணிந்து தொழுவதில்
يُصَلِّي الْمَرْءُ فِي الثَّوْبِ، وَإِنْ كَانَ ذَا سَعَةٍ وَلَكِنْ لِيَتَوَشَّحْ بِهِ، وَأَحَبُ إِلَيَّ أَنْ يُصَلِّيَ فِي الرِّدَاءِ مَعَ الْإِزَارِ “.
ثُمَّ أَخْبَرَنَا خَبَرًا أَخْبَرَهُ إِيَّاهُ مُحَمَّدُ بْنُ عَلِيٍّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، وَكَانَ مِنْ آخِرِ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَوْتًا قَالَ: فَكُنَّا نَأْتِيهِ فِي بَيْتِهِ فَأَمَّنَا فِي بَيْتِهِ فِي بَنِي سَلَمَةَ وَنَحْنُ نَفَرٌ، فَقَامَ فَأَمَّنَا، وَإِنَّ مِشْجَبَهُ لَمَوْضُوعٌ عَلَيْهِ رِدَاؤُهُ قَالَ: فَتَوَشَّحَ ثَوْبًا قَالَ: مَا تَطْلُعُ عَلَى مَنْكِبَيْهِ، قَالَ مُحَمَّدٌ: حَسِبْتُ أَنَّهُ قَالَ: «نِسَاجَةً» قَالَ: فَمَا رَأَيْتُهُ إِلَّا يُرِينَا أَنَّ ذَلِكَ لَا بَأْسَ بِهِ.
قَالَ ابْنُ جُرَيْجٍ، قَالَ عَطَاءٌ: قَالَ جَابِرٌ: ” أَنَا وَأَبِي وَخَالِي مِنْ أَصْحَابِ الْعَقَبَةِ
10163. அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் ஒரு மனிதரைக் கடந்து சென்றார்கள். அவர் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் செவிமடுத்த உமர் (ரலி) அவர்கள், அதை நல்லதாகக் கருதினார்கள்.
உடனே, அந்த மனிதரிடம், “நீர் இந்தப் புத்தகத்திலிருந்து (பிரதி) எழுதித் தருவீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “ஆம்” என்று பதிலளித்தார்.
உமர் (ரலி) அவர்கள், தனக்காக எழுதுவதற்கு ஒரு தோல் துண்டை விலைக்கு வாங்கினார்கள். பின்னர் அதை அந்த மனிதரிடம் கொண்டு வர, அவர் அதன் முன்பக்கத்திலும், பின்பக்கத்திலும் அதை எழுதினார்.
அதன் பின்னர், உமர் (ரலி) அவர்கள் அதை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்து, அதைப் படித்துக் காட்ட ஆரம்பித்தார்கள். (அவர் படிக்கப் படிக்க) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறிக் கொண்டே இருந்தது.
அப்போது அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு நபித்தோழர் தம் கையால் அந்தப் புத்தகத்தைத் தட்டிவிட்டு, “கத்தாபின் மகனே! உன் தாயார் உன்னை இழக்கட்டும்! நீர் இந்தப் புத்தகத்தைப் படிக்கிறீர். இன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகமாற்றத்தை நீர் பார்க்கவில்லையா?” என்று கூறினார்.
அந்த நேரத்தில், நபி (ஸல்) அவர்கள், “நிச்சயமாக நான், (அறியாமையின் கதவுகளைத்) திறப்பவராகவும்,
أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ مَرَّ بِرَجُلٍ يَقْرَأُ كِتَابًا سَمِعَهُ سَاعَةً، فَاسْتَحْسَنَهُ فَقَالَ لِلرَّجُلِ: أَتَكْتُبُ مِنْ هَذَا الْكِتَابِ؟ قَالَ: نَعَمْ، فَاشْتَرَى أَدِيمًا لِنَفْسِهِ، ثُمَّ جَاءَ بِهِ إِلَيْهِ فَنَسَخَهُ فِي بَطْنِهِ وَظَهْرِهِ، ثُمَّ أَتَى بِهِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَعَلَ يَقْرَأُهُ عَلَيْهِ، وَجَعَلَ وَجْهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَلَوَّنُ، فَضَرَبَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ بِيَدِهِ الْكِتَابَ، وَقَالَ: ثَكِلَتْكَ أُمُّكَ يَا ابْنَ الْخَطَّابِ، أَلَا تَرَى إِلَى وَجْهِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْذُ الْيَوْمِ وَأَنْتَ تَقْرَأُ هَذَا الْكِتَابَ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ ذَلِكَ: «إِنَّمَا بُعِثْتُ فَاتِحًا وَخَاتَمًا، وَأُعْطِيتُ جَوَامِعَ الْكَلِمِ وَفَوَاتِحَهُ، وَاخْتُصِرَ لِي الْحَدِيثُ اخْتِصَارًا، فَلَا يُهْلِكَنَّكُمُ الْمُتَهَوِّكُونَ»
8603. ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் இரண்டு விஷயங்களை மனனமிட்டுள்ளேன்.
(அவற்றில் ஒன்று) அவர்கள் சொன்னார்கள்: “நிச்சயமாக அல்லாஹ் ‘முஹ்ஸின்’ நல்லமுறையில் நடந்துக் கொள்பவன்). அவன் ஒவ்வொரு விஷயத்திலும் நல்லமுறையில் நடந்துக் கொள்வதை விரும்புகிறான். எனவே, நீங்கள் (தண்டனைக்காக) கொலை செய்தால், அழகிய முறையில் கொலை செய்யுங்கள். நீங்கள் (பிராணிகளை) அறுத்தால், அழகிய முறையில் அறுங்கள்.
மற்றொன்று: உங்களில் ஒருவர் தமது கத்தியைக் கூர்மையாக்கிக் கொள்ளட்டும். மேலும், அவர் அறுக்கும் பிராணிக்கு நிம்மதியளிக்கட்டும்!
حَفِظْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اثْنَتَيْنِ قَالَ: «إِنَّ اللَّهَ مُحْسِنٌ يُحِبُّ الْإِحْسَانَ إِلَى كُلِّ شَيْءٍ، فَإِذَا قَتَلْتُمْ فَأَحْسِنُوا الْقِتْلَةَ، وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذَّبْحَ، وَلْيُحِدَّ أَحَدُكُمْ شَفْرَتَهُ، وَلْيُرِحْ ذَبِيحَتَهُ»
3748. தொழுகை மூன்று பாகங்களைக் கொண்டது. அதன் ஒரு பாகம் (தொழுவதற்கு முன் உளூ எனும்) தூய்மைச் செய்தல். மற்றொரு பாகம் ருகூஉ செய்தல், மற்றொரு பாகம் ஸஜ்தா செய்தல் ஆகியவை ஆகும்.
யார் அவற்றைப் பேணிப் பாதுகாத்து தொழுகிறாரோ, அவரது தொழுகை ஏற்றுக் கொள்ளப்படும். யார் அதில் குறை வைக்கிறாரோ, அவர் தனக்குத்தான் குறை வைத்துக் கொள்கிறார் என்று கஅபுல் அஹ்பார் (ரஹ்) அவர்கள் கூறினார்.
அறிவிப்பவர்: அபூஸாலிஹ்-தக்வான் (ரஹ்)
” إِنَّ الصَّلَاةَ ثَلَاثَةُ أَثْلَاثٍ: ثُلْثٌ طَهُورٌ، وَثُلْثٌ رُكُوعٌ، وَثُلْثٌ سُجُودٌ، فَمَنْ حَافَظَ عَلَيْهِنَّ قُبِلْنَ مِنْهُ، وَمَنْ نَقَصَ فَإِنَّمَا يَنْقُصُ مِنْ نَفْسِهِ “
21583. இப்னு ஸீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள், அபூஹுரைரா (ரலி) அவர்களை பஹ்ரைனுக்கு ஆளுநராக நியமித்தார்கள். (அங்கிருந்து திரும்பிய) அபூஹுரைரா (ரலி) அவர்கள் பத்தாயிரம் (திர்ஹம்களை) கொண்டு வந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “ஓ அல்லாஹ்வின் பகைவரே! அவனது வேதத்தின் பகைவரே! இந்த அல்லாஹ்வின் செல்வங்களை நீர் மோசடியாக எடுத்துக்கொண்டீரா?” என்று கேட்டார்கள்.
அதற்கு அபூஹுரைரா (ரலி), “நான் அல்லாஹ்வின் பகைவனும் அல்ல; அவனது வேதத்தின் பகைவனும் அல்ல. மாறாக, அவ்விருவருக்கும் பகைமை பாராட்டுபவர்களுக்கே நான் பகைவன்” என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி), “இந்த செல்வம் உமக்கு எங்கிருந்து கிடைத்தது?” என்று வினவினார்கள். அபூ ஹுரைரா (ரலி), “எனது குதிரைகள் குட்டிகள் போட்டன. எனது அடிமைகளின் வருமானம், எனக்குத் தொடர்ந்து கிடைத்த அன்பளிப்புகள் ஆகியவற்றிலிருந்துதான் கிடைத்தது” என்று கூறினார்கள். அதை உமர் (ரலி) விசாரித்துப் பார்த்தபோது, அபூ ஹுரைரா (ரலி) சொன்னது போலவே இருந்தது.
அதற்குப் பிறகு, உமர் (ரலி) அவர்கள் அபூ ஹுரைரா (ரலி) அவர்களை மீண்டும் ஒரு பதவிக்கு அழைக்க, அவர்கள் மறுத்துவிட்டார்கள். உமர் (ரலி), “வேலை செய்வதை நீர் வெறுக்கிறீரா? உம்மை விட சிறந்தவரான யூசுப் (அலை) அவர்கள் பதவியைக் கேட்டுப் பெற்றாரே!” என்று
أَنَّ عُمَرَ بن الْخَطَّابِ اسْتَعْمَلَ أَبَا هُرَيرَةَ عَلَى الْبَحْرَيْنِ، فَقَدِمَ بَعَشَرَةِ آلاَفٍ، فَقَالَ لَهُ عُمَرُ: اسْتَأْثَرْتَ بِهَذِهِ الأَمْوَالِ يَا عَدُوَّ اللهِ، وَعَدُوَّ كِتَابِهِ، قَالَ أَبو هُرَيرَةَ: لَسْتُ عَدُوَّ اللهِ، وَلاَ عَدُوَّ كِتَابِهِ، وَلَكِنِّي عَدُوُّ مَنْ عَادَاهُمَا، قَالَ: فَمِنْ أَيْنَ هِيَ لَكَ؟ قَالَ: خَيْلٌ لِي تَنَاتَجَتْ، وَغَلَّةُ رَقِيقٍ لِي، وَأُعْطِيَةٌ تَتَابَعَتْ عَلَيَّ، فَنَظَرُوهُ، فَوَجَدُوهُ كَمَا قَالَ، قَالَ: فَلَمَّا كَانَ بَعْدَ ذَلِكَ، دَعَاهُ عُمَرُ لِيَسْتَعْمِلَهُ، فَأَبَى أَنْ يَعْمَلَ لَهُ، فَقَالَ: أتَكْرَهُ الْعَمَلَ، وَقَدْ طَلَبَ الْعَمَلَ مَنْ كَانَ خَيْرًا مِنْكَ يُوسُفُ؟ قَالَ: إِنَّ يُوسُفَ نَبِيٌّ ابْنُ نَبِيٍّ ابْنِ نَبِيٍّ، وَأَنَا أَبو هُرَيرَةَ ابْنُ أُمَيَّةَ، أَخْشَى ثَلاَثًا وَاثْنَيْنِ، قَالَ لَهُ عُمَرُ: أَفَلاَ قُلْتَ: خَمْسًا؟ قَالَ: لاَ، أَخْشَى أَنْ أَقُولَ بِغَيْرِ عِلْمٍ، وَأَقْضِيَ بِغَيْرِ حُكْمٍ، وَيُضْرَبَ ظَهْرِي، وَيُنْتَزَعَ مَالِي، وَيُشْتَمَ عِرْضِي.
14941. முஹம்மத் பின் ஸீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் சிவப்புக் களிமண் சாயம் இடப்பட்ட இரண்டு சணல் ஆடைகளை அணிந்திருந்தார்கள்.
அவர்கள் அப்போது மூக்குச் சிந்திவிட்டு “அல்ஹம்து லில்லாஹ்-அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். இந்த அபூஹுரைரா! சணல் துணியிலேயே மூக்குச் சிந்துகிறார்! (ஒரு காலத்தில்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது சொற்பொழிவு மேடை(மிம்பரு)க்கும் ஆயிஷா (ரலி) அவர்களது அறைக்குமிடையே (பசியால்) மயக்கமடைந்து விழுந்துக் கிடப்பேன். அங்கு வருபவர் எவரேனும் வந்து என் மார்பின் மீது அமர்வார். (அவர் என்னை ஒரு வியாதி பிடித்தவர் என்று நினைத்து சிகிச்சையளிப்பார்). நான் அவரிடம், ‘அது வியாதியால் அல்ல, பசியால் ஏற்பட்டதுதான்’ என்று கூறுவேன். (அந்த அளவுக்கு வறுமையில் இருந்தேன்.)” என்று சொன்னார்கள்.
மேலும் அபூஹுரைரா (ரலி) கூறினார்கள்:
நான் ஒரு காலத்தில் இப்னு அஃப்ஃபான், கஸ்வானின் மகள் ஆகியோரிடம் கூலித் தொழிலாளியாக வேலை செய்தேன். என் வேலை, அவர்களின் பயணவாகனத்தை கால்நடையாக ஓட்டிச் செல்வதும், எனக்கு வயிறு நிறைய உணவு பெறுவதும் மட்டும்தான். அவர்கள் ஒரு இடத்தில் தங்கியிருக்கும்போது அவர்களுக்கு சேவை செய்வேன். அவர்கள் பயணத்தைத் தொடங்கும் போது, அவர்களின்
كُنَّا عِنْدَهُ وَعَلَيْهِ ثَوْبَانِ مُمَشَّقَانِ، فَتَمَخَّطَ ثُمَّ مَسَحَ أَنْفَهُ بِثَوبِهِ قَالَ: «الْحَمْدُ للَّهِ يَمْتَخِطُ أَبُو هُرَيْرَةَ فِي الْكِتَّانِ، لَقَدْ رَأَيْتُنِي وَإِنِّي لَأَخِرُّ فِيمَا بَيْنَ مِنْبَرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَحُجْرَةِ عَائِشَةَ مَغْشِيًّا عَلَيَّ مِنَ الْجُوعِ، فَيَجِيءُ الرَّجُلُ فَيَقْعُدُ عَلَى صَدْرِي، فَأَقُولُ لَيْسَ بِي ذَلِكَ إِنَّمَا هُوَ مِنَ الْجُوعِ» قَالَ: وَقَالَ: ” إِنِّي كُنْتُ أَجِيرًا لِابْنِ عَفَّانَ، وَابْنَةِ غَزْوَانَ عَلَى عُقْبَةِ رِجْلِي وَشَبَعِ بَطْنِي – أَوْ قَالَ: بِطَعَامِ بَطْنِي – أَخْدِمُهُمْ إِذَا نَزَلُوا، وَأَسُوقُ بِهِمْ إِذَا ارْتَحَلُوا ” قَالَ: ” فَقَالَتْ يَوْمًا: لَتَرْكَبَنَّهُ قَائِمًا، وَلَتَرِدَنَّهُ حَافِيًا قَالَ: فَزَوَّجَنِيهَا اللَّهُ تَعَالَى، فَقُلْتُ: لَتَرِدِنَّهُ حَافِيَةً، وَلَتَرْكَبِنَّهُ وَهُوَ قَائِمٌ ” قَالَ: وَكَانَتْ فِيهِ مُزَاحَةٌ، يَعْنِي أَبَا هُرَيْرَةَ
4696.
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوتِرُ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، فَإِذَا أَرَادَ أَنْ يَنْصَرِفَ مِنَ الْوِتْرِ قَالَ: سُبْحَانَ اللَّهِ الْمَلِكِ الْقُدُّوسِ، ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ يَرْفَعُ صَوْتَهُ فِي الثَّالِثَةِ
21050.
مِنَ السُّنَّةِ أَنْ يُوَقَّرَ أَرْبَعَةٌ: الْعَالِمُ، وَذُو الشَّيْبَةِ، وَالسُّلْطَانُ، وَالْوَالِدُ، قَالَ: وَيُقَالُ: إِنَّ مِنَ الْجَفَاءِ أَنْ يَدْعُوَ الرَّجُلُ وَالِدَهُ بِاسْمِهِ.
6363.
بَلَغَهُ عَنِ ابْنِ مَسْعُودٍ، مِثْلَ ذَلِكَ
சமீப விமர்சனங்கள்