Category: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்

Musannaf-Abdur-Razzaq
Musannaf Abd al-Razzaq

Musannaf-Abdur-Razzaq-18675

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

18675. கதாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம், பனூ இஸ்ரவேலர்கள் எத்தனை கூட்டமாக பிரிந்தனர் என அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எழுபத்தி ஒன்று அல்லது எழுபத்தி இரண்டு கூட்டமாக பிரிந்தனர். எனது சமுதாயத்தினரும் அவ்வாறே, அல்லது அதைவிட ஒன்று அதிகமாக (எழுபத்தி மூன்று கூட்டத்தினராக) பிரிவார்கள். ஒரு கூட்டத்தை தவிர அனைவரும் நரகில் இருப்பர் என்று பதிலளித்தார்கள்.

 


سَأَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدَ اللَّهِ بْنَ سَلَامٍ: عَلَى كَمْ تَفَرَّقَتْ بَنُو إِسْرَائِيلَ؟ فَقَالَ: عَلَى وَاحِدَةٍ , أَوِ اثْنَتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً. قَالَ: «وَأُمَّتِي أَيْضًا سَتَفْتَرِقُ مِثْلَهُمْ , أَوْ يَزِيدُونَ وَاحِدَةً , كُلُّهَا فِي النَّارِ إِلَّا وَاحِدَةً»


Musannaf-Abdur-Razzaq-18674

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

18674. யஸீத் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களுடன் அமர்ந்திருந்தார்கள். அப்போது அங்கு வந்த ஒரு மனிதன் அவர்களை உற்றுப்பார்த்தான்…

பனூ இஸ்ரவேலர்கள் எழுபத்தி ஒன்று அல்லது எழுபத்திரண்டு கூட்டங்களாக பிரிந்தனர். நீங்களும் அவர்களைப்போன்றோ அல்லது அதைவிட அதிகமாகவோ பிரிவீர்கள். ஒரு கூட்டத்தைத் தவிர மற்றவை சரியானவை அல்ல என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரே! அந்த ஒரு கூட்டம் யார்? என அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் அதுதான் ஜமாஅத் ஆகும். மற்றவை நரகில் இருக்கும் என்று பதிலளித்தார்கள்.


بَيْنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسٌ مَعَ أَصْحَابِهِ فَأَشْرَفَ عَلَيْهِمْ رَجُلٌ , فَأَثْنَوْا عَلَيْهِ خَيْرًا , فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ فِي وَجْهِهِ سَفْعَةَ شَيْطَانٍ» فَجَاءَ فَسَلَّمَ , فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحَدَّثْتَ نَفْسَكَ آنِفًا أَنَّهُ لَيْسَ فِي الْقَوْمِ رَجُلٌ أَفْضَلَ مِنْكَ؟» قَالَ: نَعَمْ , ثُمَّ وَلَّى فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفِيكُمْ رَجُلٌ يَضْرِبُ عُنُقَهُ؟» فَقَالَ أَبُو بَكْرٍ: أَنَا فَقَامَ فَرَجَعَ فَقَالَ: انْتَهَيْتُ إِلَيْهِ فَوَجَدْتُهُ قَدْ خَطَّ عَلَيْهِ خَطًّا , وَهُوَ يُصَلِّي فِيهِ , فَلَمْ تُشَايِعْنِي نَفْسِي , عَلَى قَتْلِهِ , فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّكُمْ لَهُ؟» فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: أَنَا , فَقَامَ إِلَيْهِ ثُمَّ رَجَعَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ , وَجَدْتُهُ سَاجِدًا فَلَمْ تُشَايِعْنِي نَفْسِي عَلَى قَتْلِهِ , فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّكُمْ لَهُ؟» فَقَالَ عَلِيٌّ: أَنَا يَا رَسُولَ اللَّهِ , فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْتَ لَهُ إِنْ أَدْرَكْتَهُ , وَلَا أُرَاكَ أَنْ تُدْرِكَهُ» فَقَامَ , ثُمَّ رَجَعَ فَقَالَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ وَجَدْتُهُ لَجِئْتُكَ بِرَأْسِهِ , فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا أَوَّلُ قَرْنٍ مِنَ الشَّيْطَانِ طَلَعَ فِي أُمَّتِي , أَوْ أَوَّلُ قَرْنٍ طَلَعَ مِنْ أُمَّتِي , أَمَا إِنَّكُمْ لَوْ قَتَلْتُمُوهُ مَا اخْتَلَفَ مِنْكُمْ رَجُلَانِ , إِنَّ بَنِي إِسْرَائِيلَ اخْتَلَفُوا عَلَى إِحْدَى أَوِ اثْنَتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً , وَإِنَّكُمْ سَتَخْتَلِفُونَ مِثْلَهُمْ , أَوْ أَكْثَرَ , لَيْسَ مِنْهَا صَوَابٌ إِلَّا وَاحِدَةٌ» قِيلَ: يَا رَسُولَ اللَّهِ , وَمَا هَذِهِ الْوَاحِدَةُ؟ قَالَ: «الْجَمَاعَةُ وَآخِرُهَا فِي النَّارِ»


Musannaf-Abdur-Razzaq-2482

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2482. (தொழுகை) வரிசைக்குப் பின்னால் தனியாகத் தொழுது கொண்டிருந்த ஒருவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டு அத்தொழுகையை (மறுபடியும்) மீட்டுமாறு அவருக்கு கட்டளையிட அவர் மறுபடியும் அத்தொழுகையை தொழுதார்.

அறிவிப்பவர்: வாபிஸா பின் மஅபத் (ரலி)


«رَأَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يُصَلِّي خَلْفَ الصَّفِّ وَحْدَهُ، فَأَمَرَهُ فَأَعَادَ الصَّلَاةَ»


Musannaf-Abdur-Razzaq-2286

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2286.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தொழும் போது தனக்கு முன்னால் ஏதேனும் ஒன்றை (தடுப்பாக) வைத்துக்கொள்ளட்டும். அது இல்லாவிட்டால் ஒரு கைத்தடியை நாட்டிவைக்கட்டும். கைத்தடியும் இல்லாவிட்டால் ஒரு கோட்டை போட்டுக்கொள்ளட்டும். இதற்கு பின்பு அவருக்குமுன் எது நடந்துசென்றாலும் அது அவருக்கு எதுவும் தீங்கிழைக்காது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيُصَلِّ إِلَى شَيْءٍ، فَإِنْ لَمْ يَجِدْ شَيْئًا فَلْيَنْصُبْ عَصًا، فَإِنْ لَمْ يَجِدْ عَصًا فَلْيَخْطُطْ بَيْنَ يَدَيْهِ خَطًّا، وَلَا يَضُرُّهُ مَا مَرَّ بَيْنَ يَدَيْهِ»


Musannaf-Abdur-Razzaq-6772

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6772. இப்ராஹீம் அன்னகயீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்கமா (ரஹ்) அவர்களின் சகோதரர் மரணத்தருவாயில் இருக்கும் போது அவருக்கு நெற்றியில் வியர்வை அரும்பியது. உடனே அல்கமா (ரஹ்) சிரித்தார். அருகிலிருந்த யஸீத் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்கள், அபூஷிப்ல் (அல்கமா அவர்களே) ஏன் சிரிக்கின்றீர்? எனக் கேட்டார்.

அதற்கு அல்கமா (ரஹ்), “இறைநம்பிக்கையாளரின் உயிர், நெற்றியில் வியர்வை வர (இலேசான சிரமத்துடன்) வெளியேறும். இறைமறுப்பாளரின் உயிர், கழுதையின் உயிர் வெளியேறுவதைப் போன்று தாடை வழியாக வெளியேறும்.

இறைநம்பிக்கையாளருக்கு அவர்செய்த தீமைக்கு (மன்னிப்பாக) மரணத்தருவாயில் உயிர் பிரிவது கடினமாக்கப்படும். இறைமறுப்பாளருக்கு அவர் செய்த நன்மைக்கு (கூலியாக) மரணத்தருவாயில் உயிர் பிரிவது இலேசாக்கப்படும் என அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்.


كَانَ عِنْدَ أَخٍ لَهُ وَهُوَ يَسُوقُ فَجَعَلَ يَرْشَحُ جَبِينُهُ، فَضَحِكَ عَلْقَمَةُ، فَقَالَ لَهُ يَزِيدُ بْنُ أَوْسٍ: مَا يُضْحِكُكَ يَا أَبَا شِبْلٍ؟ قَالَ: إِنِّي سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ يَقُولُ: «إِنَّ نَفْسَ الْمُؤْمِنِ تَخْرُجُ رَشْحًا، وَإِنَّ نَفْسَ الْكَافِرِ تَخْرُجُ مِنْ شِدْقِهِ كَمَا تَخْرُجُ نَفْسُ الْحِمَارِ، إِنَّ الْمُؤْمِنَ لَيُشَدَّدُ عَلَيْهِ عِنْدَ مَوْتِهِ بِالسَّيِّئَةِ قَدْ عَمِلَهَا لِتَكُونَ بِهَا، وَإِنَّ الْكَافِرَ لَيُهَوَّنُ عَلَيْهِ عِنْدَ مَوْتِهِ بِالْحَسَنَةِ قَدْ عَمِلَهَا لِتَكُونَ بِهَا»


Musannaf-Abdur-Razzaq-6776

ஹதீஸின் தரம்: Pending

6776. திடீர் மரணம் இறைநம்பிக்கையாளருக்கு நிம்மதியாகும். பாவிக்கு (இறைகோபத்தின்) தண்டனையாகும் என இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுல் அஹ்வஸ் (ரஹ்)


«مَوْتُ الْفُجَاءَةِ تَخْفِيفٌ عَلَى الْمُؤْمِنِ، وَأَسَفٌ عَلَى الْكُفَّارِ»


Musannaf-Abdur-Razzaq-6779

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6779. திடீர் மரணம் இறைவனின் கோபப்பிடியாகும் என்று ஹுதைஃபா (ரலி) அவர்கள் எச்சரிப்பார்கள்.

அறிவிப்பவர்: யஹ்யா பின் அபூகஸீர்


أَنَّ حُذَيْفَةَ، «كَانَ يُشَدَّدُ فِي مَوْتِ الْفُجَاءَةِ، أَخْذَةٌ عَلَى سَخَطٍ»


Musannaf-Abdur-Razzaq-6781

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6781. திடீர் மரணம் இறைநம்பிக்கையாளருக்கு இலேசாகும்; இறைமறுப்பாளர்களுக்கு (இறை)கோபத்தின் தண்டனையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«مَوْتُ الْفُجَاءَةِ تَخْفِيفٌ عَلَى الْمُؤْمِنِ وَأَخْذَةُ أَسَفٍ عَلَى الْكُفَّارِ»


Musannaf-Abdur-Razzaq-2325

ஹதீஸின் தரம்: More Info

2325. நீ தொழும் போது உனக்கு முன்னால் யாரையும் நடக்க விடாதே!சண்டையிட்டுத்தான் தடுக்க முடியுமென்றால் அவருடன் சண்டையிட்டு தடுத்துவிடு! என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : நாஃபிஉ (ரஹ்)


«لَا تَدَعْ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْكَ وَأَنْتَ تُصَلِّي، فَإِنْ أَبَى إِلَّا أَنْ تُقَاتِلَهُ فَقَاتِلْهُ»


Musannaf-Abdur-Razzaq-16957

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

16957.


«إِنِّي كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ نَبِيذِ الْجَرِّ فَانْتَبَذُوا فِي كُلِّ وَعَاءٍ وَاجْتَنِبُوا كُلَّ مُسْكِرٍ»


Next Page » « Previous Page