Category: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்

Musannaf-Abdur-Razzaq
Musannaf Abd al-Razzaq

Musannaf-Abdur-Razzaq-7906

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7906. யாரேனும் ஒரு நோன்பாளிக்கு உணவும், தண்ணீரும் கொடுத்து அவரை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலி போன்றே நோன்பு திறக்கச் செய்தவருக்கும் கூலி கிடைக்கும் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: ஸாலிஹ் (ரஹ்)


«مَنْ فَطَّرَ صَائِمًا أَطْعَمَهُ وَسَقَاهُ، كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ»


Musannaf-Abdur-Razzaq-7905

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7905. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரேனும் ஒரு நோன்பாளிக்கு உணவும், தண்ணீரும் கொடுத்து அவரை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலியில் எதுவும் குறையாமல் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் அது போன்ற கூலி கிடைக்கும்.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி)


«مَنْ فَطَّرَ صَائِمًا، أَطْعَمَهُ وَسَقَاهُ كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَجْرِهِ شَيْءٌ»


Musannaf-Abdur-Razzaq-8868

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8868. நபி (ஸல்) அவர்கள் “ஹஸ்வரா” என்ற இடத்தில் நின்றவர்களாக (மக்காவை நோக்கி) “நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! என்பதை நான் நன்கறிவேன். உன்னுடைய ஊரில்வசிப்பவர்கள் உன்னை விட்டும் என்னை வெளியேற்றாமலிருந்தால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.) என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்:  அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்)


وَقَفَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْحَزْوَرَةِ فَقَالَ: «قَدْ عَلِمْتُ أَنَّكِ خَيْرُ أَرْضِ اللَّهِ، وَأَحَبَّ الْأَرْضِ إِلَى اللَّهِ، وَلَوَلَا أَنَّ أَهْلَكِ أَخَرَجُونِي مَا خَرَجْتُ»


Musannaf-Abdur-Razzaq-8869

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8869. ஹதீஸ் எண்- 8868 இல் வரும் செய்தி இப்னு ஜுரைஜின் ஆசிரியர்கள் அறிவிக்கும் இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது…


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «قَدْ عَلِمْتُ أَنَّكِ خَيْرُ بَلَادِ اللَّهِ» ثُمَّ ذَكَرَ مِثْلَ حَدِيثِ مَعْمَرٍ


Musannaf-Abdur-Razzaq-7986

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7986. ஃபாத்திமா (ரலி) அவர்கள், ஹசன் (ரலி) அவர்களை பெற்றெடுத்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹசன் பின் அலீ (ரலி) அவர்களின் காதில் (தொழுகைக்கு கூறப்படும் பாங்கு போன்று) பாங்கு கூறியதை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: அபூ ராஃபிஃ (ரலி)


رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَذَّنَ فِي أُذُنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ بِالصَّلَاةِ حِينَ وَلَدَتْهُ فَاطِمَةُ»


Musannaf-Abdur-Razzaq-6666

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6666.


لَمَّا أُصِيبَ جَعْفَرٌ جَاءَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: «يَا أَسْمَاءُ لَا تَقُولِي هُجْرًا، وَلَا تَضْرِبِي صَدْرًا» قَالَتْ: وَأَقْبَلَتْ فَاطِمَةُ وَهُوَ يَقُولُ: «يَا ابْنَ عَمَّاهُ» فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَى مِثْلِ جَعْفَرٍ فَلْتَبْكِ الْبَاكِيَةُ» قَالَتْ: ثُمَّ عَاجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى أَهْلِهِ فَقَالَ: «اصْنَعُوا لِآلِ جَعْفَرٍ طَعَامًا، فَقَدْ شُغِلُوا الْيَوْمَ». قَالَ: وَأَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ سَوْدَةَ ابْنَةِ حَارِثَةَ امْرَأَةِ عَمْرِو بْنِ حَزْمٍ قَالَتْ: «قَدْ كَانَ يُؤْمَرُ أَنْ نَصْنَعَ لِأَهْلِ الْمَيِّتِ طَعَامًا»


Musannaf-Abdur-Razzaq-6665

ஹதீஸின் தரம்: Pending

6665. ஜஃபர் பின் அபூதாலிப் (ரலி) அவர்களின் மரணசெய்தி வந்தபோது, ஜஃபரின் வீட்டினருக்கு கவலை தரும் செய்தி வந்து விட்டதால் அவரது குடும்பத்தாருக்காக உணவு செய்து கொடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி)


لَمَّا جَاءَ نَعْيُ جَعْفَرٍ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اصْنَعُوا لِآلِ جَعْفَرٍ طَعَامًا، فَإِنَّهُ قَدْ جَاءَهُمْ مَا يَشْغَلُهُمْ»


Musannaf-Abdur-Razzaq-6448

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6448.


«يُسَلِّمُ الْإِمَامُ عَلَى الْجِنَازَةِ كَمَا يُسَلِّمُ فِي الصَّلَاةِ، وَيُسَلِّمُ مَنْ خَلْفَهُ»


Musannaf-Abdur-Razzaq-6427

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6427. நான், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் பின்னால் ஒரு ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் அல்ஹம்து அத்தியாயத்தை சப்தமாக ஓதினார்கள்.

நான் அவர்களிடம் இது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘இது முழுமையான நபிவழி என்றோ அல்லது நபிவழியில் உள்ளது என்றோ கூறினார்கள்.

அறிவிப்பவர் : தல்ஹா பின் அப்துல்லாஹ் (ரஹ்)


صَلَّيْتُ مَعَ ابْنِ عَبَّاسٍ عَلَى جِنَازَةٍ فَقَرَأَ فَاتِحَةَ الْكِتَابِ، فَقُلْتُ لَهُ فَقَالَ: «إِنَّهُ مِنْ تَمَامِ السُّنَّةِ أَوْ إِنَّهُ مِنَ السُّنَّةِ»


Musannaf-Abdur-Razzaq-6395

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6395. நபி (ஸல்) அவர்கள் காலத்தில், ஜனாஸாத் தொழுகையில் நபித்தோழர்கள் ஏழு, ஐந்து, நான்கு தக்பீர்கள் கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

உமர் (ரலி) அவர்கள் காலத்தில், அவர் நபித்தோழர்களை ஒன்று திரட்டி அவர்களின் கருத்துக்களை கேட்டார்கள். பிறகு அனைவரையும் லுஹர் தொழுகையைப் போன்று நான்கு தக்பீர் என்ற கருத்துக்குக் கொண்டு வந்தார்கள்…

அறிவிப்பவர் : அபூவாயில் (ரஹ்)


كَانُوا يُكَبِّرُونَ فِي زَمَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبْعًا وَخَمْسًا وَأَرْبَعًا حَتَّى كَانَ زَمَنُ عُمَرَ فَجَمَعَهُمْ فَسَأَلَهُمْ فَأَخْبَرَهُمْ كُلُّ رَجُلٍ مِنْهُمْ بِمَا رَأَى، فَجَمَعَهُمْ عَلَى أَرْبَعِ تَكْبِيرَاتٍ كَأَطْوَلِ الصَّلَاةِ، يَعْنِي الظُّهْرَ


Next Page » « Previous Page