Category: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்

Musannaf-Abdur-Razzaq
Musannaf Abd al-Razzaq

Musannaf-Abdur-Razzaq-9256

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9256. முஹாஜிர் பின் ஹபீப் கூறியதாவது:

அபூஸலமாவும், ஸயீத் பின் ஜுபைர் அவர்களும் சந்தித்துக்கொண்டனர். ஸயீத் பின் ஜுபைர் அவர்கள், அபூஸலமாவிடம் நபிமொழியை எங்களுக்கு கூறுங்கள். அறிவிப்பதில் உங்களை பின்பற்றுவோம் என்று கூறினார்கள்.

அதற்கு அபூஸலமா அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பயணத்தில் மூவர் இருந்தால் அவர்களில் குர்ஆனை நன்கு ஓத தெரிந்தவர் இமாமத் செய்யட்டும். அவர் மற்றவர்களை விட வயதில் குறைந்தவராக இருந்தாலும் இமாமத் செய்யும் அவரே அவர்களின் அமீராவார்…

அபூஸலமா அவர்கள் கூறினார்:

சிறிய வயதாக இருந்தாலும் குர்ஆனை நன்கு ஓத தெரிந்தவரையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமீராக்க கூறினார்கள்.


اجْتَمَعَ أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ وَسَعِيدُ بْنُ جُبَيْرٍ، فَقَالَ سَعِيدٌ لِأَبِي سَلَمَةَ: حَدِّثْ فَإِنَّا سَنَتْبَعُكَ، قَالَ أَبُو سَلَمَةَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا كَانَ ثَلَاثَةٌ فِي سَفَرٍ فَلْيَؤُمَّهُمْ أَقْرَؤُهُمْ، وَإِنْ كَانَ أَصْغَرَهُمْ، فَإِذَا أَمَّهُمْ فَهُوَ أَمِيرُهُمْ»

قَالَ أَبُو سَلَمَةَ: «فَذَاكُمْ أَمِيرٌ أَمَّرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Musannaf-Abdur-Razzaq-3812

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3812. முஹாஜிர் பின் ளம்ரா கூறியதாவது:

அபூஸலமாவும், ஸயீத் பின் ஜுபைர் அவர்களும் சந்தித்துக்கொண்டனர். ஸயீத் பின் ஜுபைர் அவர்கள், அபூஸலமாவிடம் நபிமொழியை எங்களுக்கு கூறுங்கள். அறிவிப்பதில் உங்களை பின்பற்றுவோம் என்று கூறினார்கள்.

அதற்கு அபூஸலமா அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பயணத்தில் மூவர் இருந்தால் அவர்களில் குர்ஆனை நன்கு ஓத தெரிந்தவர் இமாமத் செய்யட்டும். அவர் மற்றவர்களை விட வயதில் குறைந்தவராக இருந்தாலும் இமாமத் செய்யும் அவரே அவர்களின் அமீராவார்…

அபூஸலமா அவர்கள் கூறினார்:

சிறிய வயதாக இருந்தாலும் குர்ஆனை நன்கு ஓத தெரிந்தவரையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமீராக்க கூறினார்கள்.

 


«إِذَا كَانَ ثَلَاثَةٌ فِي سَفَرٍ فَلْيَؤُمَّهُمْ أَقْرَؤُهُمْ، فَإِنْ كَانَ أَصْغَرَهُمْ سِنًّا فَإِذَا أَمَّهُمْ فَهُوَ أَمِيرُهُمْ» قَالَ أَبُو سَلَمَةَ: فَذَاكُمْ أَمِيرٌ أَمَّرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Musannaf-Abdur-Razzaq-20682

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

20682. யார் கயிற்றில் முடிச்சிட்டு, அதில் ஊதுகிறாரோ அவர் சூனியம் செய்துவிட்டார். யார் சூனியம் செய்தாரோ அவர் அல்லாஹ்வை நிராகரித்து விட்டார்.

யார் தாயத் (போன்ற)தை தொங்க விடுகின்றாரோ அவர் அதன்பால் சாட்டப்படுவார். (அவருக்கு அல்லாஹ் பொருப்பாளனாக ஆக மாட்டான்).

அறிவிப்பவர் : ஹஸன் பஸரீ (ரஹ்)


مَنْ عَقَدَ عُقْدَةً فِيهَا رُقْيَةٌ، فَقَدْ سَحَرَ، وَمَنْ سَحَرَ، فَقَدْ كَفَرَ، وَمَنْ عَلَّقَ عُلْقَةً وُكِلَ إِلَيْهَا.


Musannaf-Abdur-Razzaq-2018

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2018. யார் நாற்பது நாட்கள் ஜந்துநேர தொழுகைகளை (தொடர்ந்து) ஜமாஅத்துடன் முதல் தக்பீரில் தொழுவாரோ அவருக்கு சுவர்க்கம் கட்டாயமாகிவிட்டது.

அறிவிப்பவர் : ரஃபீ பின் மிஹ்ரான் (ரஹ்)


«مَنْ شَهِدَ الصَّلَوَاتِ الْخَمْسَ أَرْبَعِينَ لَيْلَةً فِي جَمَاعَةٍ، يُدْرِكُ التَّكْبِيرَةَ الْأُولَى وَجَبَتْ لَهُ الْجَنَّةُ»


Musannaf-Abdur-Razzaq-2019

ஹதீஸின் தரம்: More Info

2019. அனஸ் (ரலி) கூறினார்கள்:

யார் நாற்பது நாட்கள் தொடர்ந்து முதல் ரக்அத் தவறிவிடாமல்  ஜமாஅத்துடன் தொழுவாரோ அவருக்கு இரண்டு விடுதலை பத்திரங்கள் கிடைக்கின்றன. ஒன்று நரகிலிருந்து விடுதலை, மற்றொன்று  நயவஞ்சகத்தனத்தில் இருந்து விடுதலை.


«مَنْ لَمْ تَفُتْهُ الرَّكْعَةُ الْأُولَى مِنَ الصَّلَاةِ أَرْبَعِينَ يَوْمًا، كُتِبَتْ لَهُ بَرَاءَتَانِ، بَرَاءَةٌ مِنَ النَّارِ، وَبَرَاءَةٌ مِنَ النِّفَاقِ»


Musannaf-Abdur-Razzaq-11891

ஹதீஸின் தரம்: More Info

11891. கணவனிடம் (தகுந்த காரணமின்றி) விவாகரத்து கோரி சண்டையிடும் பெண்கள் தான் நயவஞ்கபெண்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அஷ்அஸ் பின் ஸவ்வார் அறிவித்தார்.


«الْمُخْتَلِعَاتُ وَالْمُنْتَزِعَاتُ هُنَّ الْمُنَافِقَاتُ»


Musannaf-Abdur-Razzaq-11893

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

11893. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தகுந்த காரணமின்றி கணவனிடம் விவாகரத்து கோரிய பெண்ணுக்கு சுவர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது.

அறிவிப்பவர் : அபூ கிலாபா (ரஹ்)


«أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا الطَّلَاقَ مِنْ غَيْرِ مَا بَأْسٍ فَحَرَامٌ عَلَيْهَا رَائِحَةُ الْجَنَّةِ»


Musannaf-Abdur-Razzaq-11892

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

11892. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தகுந்த காரணமின்றி கணவனிடம் விவாகரத்து கோரிய பெண்ணுக்கு சுவர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது. அல்லது நபி (ஸல்) அவர்கள் , அந்த பெண்ணுக்கு அல்லாஹ் சுவர்க்கத்தின் வாடையை தடுத்துவிட்டான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூகிலாபா (ரஹ்)

 

அறிவிப்பாளர்களில் ஒருவர் வார்த்தையை சந்தேகமாக அறிவிக்கிறார்.


أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا الطَّلَاقَ مِنْ غَيْرِ مَا بَأْسٍ لَمْ تَجِدْ رَائِحَةَ الْجَنَّةِ – أَوْ قَالَ: – حَرَّمَ اللَّهُ عَلَيْهَا أَنْ تَجِدَ رَائِحَةَ الْجَنَّةِ


Musannaf-Abdur-Razzaq-17946

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

17946. அனஸ் பின் மாலிக்  (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பத்து ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். அல்லாஹ்வின் மீதாணையாக!  அவர்கள் ஒருபோதும் என்னை திட்டியதில்லை. ஒருபோதும் “சீ” என்று கூறியதில்லை.

நான் செய்த எதைப் பற்றியும் “இன்னின்னதை நீ ஏன் செய்தாய்?” என்றோ, நான் செய்யாமல் விட்டுவிட்ட எதைப் பற்றியும் “நீ இன்னின்னதைச் செய்திருக்கக் கூடாதா?” என்றோ அவர்கள் என்னிடம் கூறியதில்லை.


خَدَمْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَ سِنِينَ، لَا وَاللَّهُ مَا سَبَّنِي سَبَّةً قَطُّ، وَلَا قَالَ لِي: أُفٍّ قَطُّ، وَلَا قَالَ لِي: لِشَيْءٍ فَعَلْتُهُ لِمَ فَعَلْتَهُ؟ وَلَا لِشَيْءٍ لَمْ أَفْعَلْهُ أَلَّا فَعَلْتَهُ


Musannaf-Abdur-Razzaq-7960

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7960. நபி (ஸல்) அவர்கள், நபியான பிறகு தனக்காக அகீகா கொடுத்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


«عَقَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَفْسِهِ بَعْدَ مَا بُعِثَ بِالنُّبُوَّةِ»


Next Page » « Previous Page