5509. முஹம்மது பின் ஸீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(பனூ உமைய்யாக்களின் ஆட்சியாளர்கள் காலத்தில் ஜுமுஆ உரை நடைபெறும்போது ஒருவர் பள்ளிக்கு வெளியே செல்லவேண்டிய தேவை இருந்தால்) அவர் மூன்று விரலைக் காட்டி அனுமதி பெறுவார். பிறகு ஸியாத் (ஆட்சிக்கு) வந்தபோது மக்கள் இப்படி அதிகம் செய்ததால் அவர் இதை ஒரு தொல்லையாக கருதினார். எனவே அவர், (இனிமேல் யாரும் வெளியே செல்வதாக இருந்தால்) ஒருவர் தன் மூக்கைப் பிடித்துக் கொண்டு செல்வதே அவர் இமாமின் அனுமதி பெற்றவர் தான் என்று கூறினார்.
كَانَ النَّاسُ يَسْتَأْذِنُونَ فِي الْجُمُعَةِ، وَيَقُولُونَ: هَكَذَا، يُشِيرُ بِثَلَاثِ أَصَابِعَ، فَلَمَّا كَانَ زِيَادٌ كَثُرُوا عَلَيْهِ فَاغْتَمَّ، فَقَالَ: «مَنْ أَمْسَكَ عَلَى أَنْفِهِ فَهُوَ إِذْنُهُ»
சமீப விமர்சனங்கள்