13270. விவாகரத்தைப்போன்று அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பான வேறு எதையும் அல்லாஹ் அனுமதிக்கவில்லை.
மேலும் உயர்ந்தோன் அல்லாஹ், ஆண்கள் மீது அறப்போர் செய்வதையும், பெண்கள் மீது ரோஷம் கொள்வதையும் எழுதிவிட்டான். எனவே பொறுமைகொள்ளும் பெண்களுக்கு அறப்போர் செய்தவரின் கூலி போன்றது கிடைக்கும் என்று அபூஉபைதா பின் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரஹ்) கூறினார்.
அறிவிப்பவர்: லைஸ் பின் அபூஸுலைம்
அபூஉபைதா அவர்கள், இதை நபியின் கூற்றாக கூறினாரா? அல்லது இல்லையா? என்று எனக்குத் தெரியாது என்று லைஸ் பின் அபூஸுலைம் கூறினார்.
«مَا أَحَلَّ اللَّهُ حَلَالًا أَكَرْهَ إِلَيْهِ مِنَ الطَّلَاقِ، وَإِنَّ اللَّهَ تَعَالَى كَتَبَ الْجِهَادَ عَلَى الرِّجَالِ، وَالْغَيْرَةَ عَلَى النِّسَاءِ، فَمَنْ صَبَرَ مِنْهُنَّ كَانَ لَهَا مِثْلُ أَجْرِ الْمُجَاهِدِ»
சமீப விமர்சனங்கள்