Category: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா

Musannaf-Ibn-Abi-Shaybah

Musannaf-Ibn-Abi-Shaybah-5887

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

தொழுகை வரிசையின் பின்னால் தனியாக தொழுதவர்.

5887. ஹிலால் பின் யஸாஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஸியாத் பின் அபுல் ஜஃத் (ரஹ்) அவர்கள் என் கையைப் பிடித்து ரக்கா என்ற நகரத்தில் உள்ள ஒரு பெரியவரிடம் அழைத்துச் சென்று நிற்கவைத்தார். அவரின் பெயர் வாபிஸா பின் மஅபத் ஆகும்.

அப்போது அவர், (தொழுகை) வரிசையின் பின்னால் தனியாகத் தொழுது கொண்டிருந்த ஒருவரை நபி (ஸல்) அவர்கள் கண்டு அத்தொழுகையை (மறுபடியும்) மீட்டுமாறு அவருக்கு உத்தரவிட்டார்கள் என்று கூறினார்.


أَخَذَ بِيَدِي زِيَادُ بْنُ أَبِي الْجَعْدِ وَأَوْقَفَنِي عَلَى شَيْخٍ بِالرَّقَّةِ يُقَالُ لَهُ: وَابِصَةُ بْنُ مَعْبَدٍ، فَقَالَ: «صَلَّى رَجُلٌ خَلْفَ الصَّفِّ وَحْدَهُ فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُعِيدَ»


Musannaf-Ibn-Abi-Shaybah-8844

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8844. உங்களில் ஒருவர் வெட்டவெளியில் தொழும் போது தனக்கு முன்னால் ஒரு கைத்தடியை நாட்டிவைக்கட்டும். கைத்தடியும் இல்லாவிட்டால் ஒரு கோட்டை போட்டுக்கொள்ளட்டும். இதற்கு பின்பு அவருக்குமுன் எது நடந்துசென்றாலும் அது அவருக்கு எதுவும் தீங்கிழைக்காது.


«إِذَا صَلَّى أَحَدُكُمْ فِي أَرْضِ فَلَاةٍ فَلْيَنْصِبْ عَصًا، فَإِنْ لَمْ يَكُنْ مَعَهُ عَصًا فَلْيَخُطَّ خَطًّا بِالْأَرْضِ، وَلَا يَضُرُّهُ مَا مَرَّ بَيْنَ يَدَيْهِ»،

قَالَ أَبُو الْقَاسِمِ: «يَعْنِي دَوَابَّهُ»


Musannaf-Ibn-Abi-Shaybah-12012

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

12012. இப்ராஹீம் அன்னகயீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்கமா (ரஹ்) அவர்கள் நகயீ கிளையைச் சேர்ந்த தன் நண்பர் ஒருவரை நலம் விசாரிக்க சென்றார். அவரின் நெற்றியில் (கைவத்து)  தடவிப்பார்க்கும் போது வியர்வை அரும்பியிருப்பதைக் கண்டு சிரித்தார். அருகிலிருந்த ஒருவர், அபூஷிப்ல் (அல்கமா அவர்களே) ஏன் சிரிக்கின்றீர்? எனக் கேட்டார்.

அதற்கு அல்கமா (ரஹ்), “இறைநம்பிக்கையாளரின் உயிர், நெற்றியில் வியர்வை வர (இலேசான சிரமத்துடன்) வெளியேறும். அவர் சில நேரம் செய்த தீமைக்கு (மன்னிப்பாக) மரணத்தருவாயில் உயிர் பிரிவது அவருக்கு கடினமாக்கப்படும்.

இறைமறுப்பாளரின் உயிர், கழுதையின் உயிர் வெளியேறுவதைப் போன்று தாடை வழியாக வெளியேறும். அவர் சில நேரம் செய்த நன்மைக்கு (கூலியாக) மரணத்தருவாயில் உயிர் பிரிவது அவருக்கு இலேசாக்கப்படும் என அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறியதை நினைவுகூர்ந்து சிரித்தேன் என்று கூறினார்.


أَنَّهُ دَخَلَ عَلَى صَدِيقٍ لَهُ مِنَ النَّخَعِ يَعُودُهُ، فَمَسَحَ جَبِينَهُ، فَوَجَدَهُ يَرْشَحُ فَضَحِكَ، فَقَالَ لَهُ بَعْضُ الْقَوْمِ: مَا يَضْحَكُكَ يَا أَبَا شِبْلٍ؟ قَالَ: ضَحِكْتُ مِنْ قَوْلِ عَبْدِ اللَّهِ «إِنَّ نَفْسَ الْمُؤْمِنِ تَخْرُجُ رَشْحًا، وَإِنَّهُ قَدْ يَكُونُ عَمِلَ السَّيِّئَةَ فَيُشَدَّدُ عَلَيْهِ عِنْدَ الْمَوْتِ لِيَكُونَ بِهَا، وَإِنَّ نَفْسَ الْكَافِرِ وَالْفَاجِرِ لِيَخْرُجَ مِنْ شِدْقِهِ كَمَا يَخْرُجُ نَفْسُ الْحِمَارِ، وَإِنَّهُ قَدْ يَكُونُ عَمِلَ الْحَسَنَةَ، فَهُوِّنَ عَلَيْهِ عِنْدَ الْمَوْتِ لِيَكُونَ بِهَا»


Musannaf-Ibn-Abi-Shaybah-37552

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

37552. பிறை பெரிதாக தெரிவது மறுமைநாள் நெருங்கிவிட்டதின் அடையாளமாகும் என்று அபுல் வத்தாக் கூறினார்.

அறிவிப்பவர்: உஸ்மான் பின் ஹாரிஸ்


«مِنَ اقْتِرَابِ السَّاعَةِ انْتِفَاخُ الْأَهِلَّةُ»


Musannaf-Ibn-Abi-Shaybah-12008

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

12008. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

திடீர் மரணம் மறுமைநாளின் அடையாளங்களில் ஒன்றாகும்.


«مِنْ أَشْرَاطِ السَّاعَةِ مَوْتُ الْبِدَارِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-12005

ஹதீஸின் தரம்: Pending

12005. திடீர் மரணம் இறைநம்பிக்கையாளர்களுக்கு நிம்மதியாகும். இறைமறுப்பாளர்களுக்கு கைசேதமாகும் என இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் மாணவர்களில் சிலர் கூறினர்.

அறிவிப்பவர்: ஸுபைர் பின் அதீ (ரஹ்)


«مَوْتُ الْفُجَاءَةِ رَاحَةٌ عَلَى الْمُؤْمِنِينَ، وَأَسَفٌ عَلَى الْكُفَّارِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-12004

ஹதீஸின் தரம்: Pending

12004. .அஷ்ஷபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

திடீர் மரணங்கள் நிகழ்வது மறுமைநாள் நெருங்கிவிட்டதின் அடையாளமாகும் என (எங்கள் காலத்தில்) கூறப்பட்டது.


«كَانَ يُقَالُ اقْتِرَابُ السَّاعَةِ مَوْتُ الْفُجَاءَةِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-12006

ஹதீஸின் தரம்: Pending

12006. தமீம் பின் ஸலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எங்களில் ஒரு மனிதர் திடீரென இறந்துவிட்டார். உடனே நபித்தோழர்களில் சிலர் இது அல்லாஹ்வின் கோபப்பிடியாகும் என்று கூறினர். நான் இதுப்பற்றி இப்ராஹீம் அன்னகயீ அவர்களிடம் கூறினேன். (இப்ராஹீம் அவர்களிடம் நாங்கள் எந்த ஹதீஸைப் பற்றி கூறி விளக்கம் கேட்டாலும் அதைப்பற்றி அவர் தெரிந்திருப்பார்)

அதற்கு அவர்கள், ஆம், திடீர் மரணம் இறைகோபத்தின் தண்டனை போன்றது தான் என்று நபித்தோழர்கள் வெறுப்பார்கள் என்று கூறினார்.


مَاتَ مِنَّا رَجُلٌ بَغْتَةً، فَقَالَ أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَخْذَةَ غَضَبٍ فَذَكَرْتُهُ لِإِبْرَاهِيمَ وَقَلَّ مَا كُنَّا نَذْكُرُ لِإِبْرَاهِيمَ حَدِيثًا، إِلَّا وَجَدْنَا عِنْدَهُ فِيهِ فَقَالَ: «كَانُوا يَكْرَهُونَ أَخْذَةً كَأَخْذَةِ الْأَسَفِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-12009

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

12009. இப்ராஹீம் அன்னகயீ அவர்கள் திடீர் மரணத்தை வெறுத்தார்கள்.


«أَنَّهُ كَرِهَ مَوْتُ الْفُجَاءَةِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-12010

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12010. திடீர் மரணம், இறைகோபத்தினால் பிடிக்கப்படுவதாகும் என்று நபித்தோழர்களில் ஒருவர் கூறினார்.

அறிவிப்பவர்: உபைத் பின் காலித் (ரலி)


فِي مَوْتِ الْفُجَاءَةِ قَالَ: «أَخْذَةُ أَسَفٍ»


Next Page » « Previous Page