ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
5608. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு ஸாயிதுடன் மக்காவரை பயணம் மேற்கொண்டேன். அப்போது அவன் என்னிடம், “நான் மக்களில் சிலரைச் சந்தித்தேன். அவர்கள் என்னை “தஜ்ஜால்” எனக் கருதுகின்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தஜ்ஜாலுக்குக் குழந்தை இருக்காது” என்று கூறியதை நீங்கள் கேட்கவில்லையா?” என்று கேட்டான். நான், “ஆம் (கேட்டுள்ளேன்)” என்றேன்.
அவன், “எனக்குக் குழந்தை உள்ளது” என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “தஜ்ஜால் மதீனாவுக்குள்ளும் மக்காவுக்குள்ளும் நுழையமாட்டான்” என்று கூறியதை நீங்கள் கேட்டதில்லையா?” என்றான். நான் “ஆம் (கேட்டுள்ளேன்)” என்றேன். அவன், “நான் மதீனாவில் பிறந்தேன். இதோ நான் மக்காவுக்குச் செல்லப் போகிறேன்” என்று கூறினான்.
பிறகு இறுதியாக அவன், “அறிந்துகொள்க: அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தஜ்ஜாலின் பிறப்பையும் அவனது வசிப்பிடத்தையும் இப்போது அவன் எங்கே இருக்கிறான் என்பதையும் நன்கறிவேன்” என்று கூறி, என்னைக் குழப்பிவிட்டான்.
صَحِبْتُ ابْنَ صَائِدٍ إِلَى مَكَّةَ، فَقَالَ لِي: أَمَا قَدْ لَقِيتُ مِنَ النَّاسِ، يَزْعُمُونَ أَنِّي الدَّجَّالُ، أَلَسْتَ سَمِعْتَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّهُ لَا يُولَدُ لَهُ» قَالَ: قُلْتُ: بَلَى، قَالَ: فَقَدْ وُلِدَ لِي، أَوَلَيْسَ سَمِعْتَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لَا يَدْخُلُ الْمَدِينَةَ وَلَا مَكَّةَ» قُلْتُ: بَلَى، قَالَ: فَقَدْ وُلِدْتُ بِالْمَدِينَةِ، وَهَذَا أَنَا أُرِيدُ مَكَّةَ، قَالَ: ثُمَّ قَالَ لِي فِي آخِرِ قَوْلِهِ: أَمَا، وَاللهِ إِنِّي لَأَعْلَمُ مَوْلِدَهُ وَمَكَانَهُ وَأَيْنَ هُوَ، قَالَ: فَلَبَسَنِي
சமீப விமர்சனங்கள்