Category: முஸ்லிம்

Muslim-5491

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5491. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“மக்கள் மறுமைநாளில் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்றுதிரட்டப்படுவார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன். உடனே நான், “அல்லாஹ்வின் தூதரே! (நிர்வாணமான) பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவரும் ஒருவரையொருவர் பார்ப்பார்களே?” என்று கேட்டேன்.

“ஆயிஷா! அவர்களில் சிலர் வேறு சிலரைப் பார்க்கும் எண்ணம் ஏற்படாத அளவுக்கு (அப்போதைய) நிலைமை மிகக் கடுமையானதாக இருக்கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.அவற்றில் ஹாத்திம் பின் அபீஸஃகீரா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக” எனும் குறிப்பு இல்லை.

Book : 51


«يُحْشَرُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ حُفَاةً عُرَاةً غُرْلًا» قُلْتُ: يَا رَسُولَ اللهِ النِّسَاءُ وَالرِّجَالُ جَمِيعًا يَنْظُرُ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ، قَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا عَائِشَةُ الْأَمْرُ أَشَدُّ مِنْ أَنْ يَنْظُرَ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ»

– وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَابْنُ نُمَيْرٍ، قَالَا: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ، عَنْ حَاتِمِ بْنِ أَبِي صَغِيرَةَ، بِهَذَا الْإِسْنَادِ، وَلَمْ يَذْكُرْ فِي حَدِيثِهِ: «غُرْلًا»


Muslim-5490

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 15

உலக அழிவும் மறுமை நாளில் (மக்கள் அனைவரும்) ஒன்றுதிரட்டப்படுவதும்.

5490. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் மீதாணையாக! மறுமையோடு ஒப்பிடும்போது இவ்வுலகின் நிலையானது, உங்களில் ஒருவர் தமது இந்த -அதாவது சுட்டு- விரலை (அறிவிப்பாளர் யஹ்யா சுட்டு விரலால் சைகை செய்கிறார்) கடலில் வைப்பதைப் போன்றுதான். அதில் எந்த அளவு தண்ணீர் ஒட்டிக்கொள்கிறது என்று அவர் பார்க்கட்டும். (அந்த அளவு குறைவானதேயாகும்.)

இதை பனூ ஃபிஹ்ர் குலத்தாரில் ஒருவரான முஸ்தவ்ரித் பின் ஷத்தாத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் அபூஉசாமா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அறிவிப்பாளர் இஸ்மாயீல் பின் அபீ காலித் (ரஹ்) அவர்கள் தமது பெருவிரலால் (கடலில் நுழைப்பதைப் போன்று) சைகை செய்தார்கள்” என்று காணப்படுகிறது.

«وَاللهِ مَا الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا مِثْلُ مَا يَجْعَلُ أَحَدُكُمْ إِصْبَعَهُ هَذِهِ – وَأَشَارَ يَحْيَى بِالسَّبَّابَةِ – فِي الْيَمِّ، فَلْيَنْظُرْ بِمَ تَرْجِعُ؟» وَفِي حَدِيثِهِمْ جَمِيعًا، غَيْرَ يَحْيَى: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ ذَلِكَ، وَفِي حَدِيثِ أَبِي أُسَامَةَ: عَنِ الْمُسْتَوْرِدِ بْنِ شَدَّادٍ، أَخِي بَنِي فِهْرٍ، وَفِي حَدِيثِهِ أَيْضًا قَالَ: وَأَشَارَ إِسْمَاعِيلُ بِالْإِبْهَامِ