Category: முஸ்லிம்

Muslim-5481

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5481. ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஒரு முறை பின்வருமாறு) கூறியதைக் கேட்டேன்: சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்குத் தெரிவிக்கட்டுமா? மக்கள், “ஆம் (தெரிவியுங்கள்)” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், “(மக்களின் பார்வையில்) அவர்கள் பலவீனமானவர்கள்; பணிவானவர்கள். (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான்” என்று சொன்னார்கள்.

பிறகு “நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம்” என்றார்கள்.”அவர்கள் இரக்கமற்றவர்கள்; உண்டு கொழுத்தவர்கள்; பெருமையடிப்பவர்கள் ஆவர்” என்று நபியவர்கள் கூறினார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், (“உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா” (அலா உக்பிருக்கும்) என்பதற்குப் பகரமாக) “உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?”

«أَلَا أُخْبِرُكُمْ بِأَهْلِ الْجَنَّةِ؟» قَالُوا: بَلَى، قَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ ضَعِيفٍ مُتَضَعِّفٍ، لَوْ أَقْسَمَ عَلَى اللهِ لَأَبَرَّهُ» ثُمَّ قَالَ: «أَلَا أُخْبِرُكُمْ بِأَهْلِ النَّارِ؟» قَالُوا: بَلَى، قَالَ: «كُلُّ عُتُلٍّ جَوَّاظٍ مُسْتَكْبِرٍ»

– وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، بِهَذَا الْإِسْنَادِ بِمِثْلِهِ، غَيْرَ أَنَّهُ قَالَ: «أَلَا أَدُلُّكُمْ»


Muslim-5480

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5480. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நரகத்தில் இறைமறுப்பாளனின் இரு தோள்களுக்கிடையே உள்ள தூரம், துரிதமாக வாகனத்தில் பயணிப்பவர் மூன்று நாட்கள் கடக்கும் தூரமாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் அஹ்மத் பின் உமர் அல்வகீஈ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “நரகத்தில்” எனும் குறிப்பு இல்லை.

Book : 51


«مَا بَيْنَ مَنْكِبَيِ الْكَافِرِ فِي النَّارِ، مَسِيرَةُ ثَلَاثَةِ أَيَّامٍ، لِلرَّاكِبِ الْمُسْرِعِ» وَلَمْ يَذْكُرِ الْوَكِيعِيُّ: فِي النَّارِ


Muslim-5479

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5479. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(நரகத்தில்) இறைமறுப்பாளனின் “கடைவாய்ப்பல்” அல்லது “கோரைப்பல்” உஹுத் மலையைப் போன்றிருக்கும். அவனது தோலின் பருமன் மூன்று நாள் பயணத் தொலைவுடையதாக இருக்கும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 51


«ضِرْسُ الْكَافِرِ، أَوْ نَابُ الْكَافِرِ، مِثْلُ أُحُدٍ وَغِلَظُ جِلْدِهِ مَسِيرَةُ ثَلَاثٍ»


Muslim-5478

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5478. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கும் நரகவாசிகள் நரகத்திற்கும் சென்று சேர்ந்த பிறகு “மரணம்” (ஓர் ஆட்டின் உருவத்தில்) கொண்டுவரப்பட்டு, சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே நிறுத்தப்படும். பின்னர் அது அறுக்கப்படும். பிறகு பொது அறிவிப்பாளர் ஒருவர், “சொர்க்கவாசிகளே! (இனி) மரணம் என்பதே கிடையாது; நரகவாசிகளே! (இனி) மரணம் என்பதே கிடையாது” என்று அறிவிப்பார். அப்போது சொர்க்கவாசிகளுக்கு மகிழ்ச்சிக்கு மேல் மகிழ்ச்சி அதிகமாகும். நரகவாசிகளுக்குக் கவலைக்கு மேல் கவலை அதிகமாகும்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

Book : 51


إِذَا صَارَ أَهْلُ الْجَنَّةِ إِلَى الْجَنَّةِ، وَصَارَ أَهْلُ النَّارِ إِلَى النَّارِ، أُتِيَ بِالْمَوْتِ حَتَّى يُجْعَلَ بَيْنَ الْجَنَّةِ وَالنَّارِ، ثُمَّ يُذْبَحُ، ثُمَّ يُنَادِي مُنَادٍ: يَا أَهْلَ الْجَنَّةِ لَا مَوْتَ، وَيَا أَهْلَ النَّارِ لَا مَوْتَ، فَيَزْدَادُ أَهْلُ الْجَنَّةِ فَرَحًا إِلَى فَرَحِهِمْ، وَيَزْدَادُ أَهْلُ النَّارِ حُزْنًا إِلَى حُزْنِهِمْ


Muslim-5477

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5477. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ், சொர்க்கவாசிகளை சொர்க்கத்திற்கும் நரகவாசிகளை நரகத்திற்கும் அனுப்பிய பிறகு ஓர் அறிவிப்பாளர் அவர்களிடையே நின்று, “சொர்க்கவாசிகளே! இனி மரணம் இல்லை. நரகவாசிகளே! இனி மரணம் இல்லை. (உங்களில்) ஒவ்வொருவரும் அவரவர் இருக்குமிடத்தில் நிரந்தரமாக இருப்பார்கள்” என்று அறிவிப்பார்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 51


يُدْخِلُ اللهُ أَهْلَ الْجَنَّةِ الْجَنَّةَ، وَيُدْخِلُ أَهْلَ النَّارِ النَّارَ، ثُمَّ يَقُومُ مُؤَذِّنٌ بَيْنَهُمْ فَيَقُولُ: يَا أَهْلَ الْجَنَّةِ لَا مَوْتَ، وَيَا أَهْلَ النَّارِ لَا مَوْتَ، كُلٌّ خَالِدٌ فِيمَا هُوَ فِيهِ


Muslim-5476

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5476. மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், “சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கும் நரகவாசிகள் நரகத்திற்கும் அனுப்பப்பட்ட பின் “சொர்க்கவாசிகளே!” என அழைக்கப்படும் என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

இந்த அறிவிப்பில், “இதையே வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (19:39 ஆவது வசனத்தில்) குறிப்பிடுகின்றான்”என இடம்பெற்றுள்ளது. “பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த வசனத்தை) ஓதிக்காட்டினார்கள்”என்பதும், “தமது கரத்தால் பூமியை நோக்கி சைகை செய்தார்கள்” என்பதும் இடம்பெறவில்லை.

Book : 51


إِذَا أُدْخِلَ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ، وَأَهْلُ النَّارِ النَّارَ قِيلَ: يَا أَهْلَ الْجَنَّةِ، ثُمَّ ذَكَرَ بِمَعْنَى حَدِيثِ أَبِي مُعَاوِيَةَ، غَيْرَ أَنَّهُ قَالَ: «فَذَلِكَ قَوْلُهُ عَزَّ وَجَلَّ» وَلَمْ يَقُلْ: ثُمَّ قَرَأَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يَذْكُرْ أَيْضًا: وَأَشَارَ بِيَدِهِ إِلَى الدُّنْيَا


Muslim-5475

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5475. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் கறுப்பு வெள்ளை ஆடு ஒன்றின் தோற்றத்தில் மரணம் கொண்டுவரப்படும். பிறகு அதைச் சொர்க்கத்திற்கும் நரகத்திற்குமிடையே நிறுத்தப்படும் (என அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் கூடுதலாக இடம்பெற்றுள்ளது). பிறகு “சொர்க்கவாசிகளே! இது (என்னவென்று) உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்கப்படும். அப்போது சொர்க்கவாசிகள் தலையைத் தூக்கிப் பார்ப்பார்கள். மேலும், “ஆம்; (தெரியும்) இதுதான் மரணம்” என்று பதிலளிப்பார்கள்.(அவர்கள் அனைவரும் அதை முன்பே பார்த்திருக்கிறார்கள்.)

பிறகு (நரகவாசிகளை நோக்கி), “நரகவாசிகளே! இது (என்னவென்று) உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்கப்படும். அவர்களும் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு, “ஆம் (தெரியும்). இதுதான் மரணம்” என்று பதில் சொல்வார்கள். (அவர்கள் அனைவரும் அதை முன்பே பார்த்துள்ளனர்.)

உடனே (இறைவனின்) கட்டளைக்கேற்ப அது (ஆட்டின் உருவத்திலுள்ள மரணம்) அறுக்கப் பட்டுவிடும். பிறகு “சொர்க்கவாசிகளே! நிரந்தரம்; இனி மரணமே இல்லை. நரகவாசிகளே!

يُجَاءُ بِالْمَوْتِ يَوْمَ الْقِيَامَةِ، كَأَنَّهُ كَبْشٌ أَمْلَحُ – زَادَ أَبُو كُرَيْبٍ: فَيُوقَفُ بَيْنَ الْجَنَّةِ وَالنَّارِ، وَاتَّفَقَا فِي بَاقِي الْحَدِيثِ – فَيُقَالُ: يَا أَهْلَ الْجَنَّةِ هَلْ تَعْرِفُونَ هَذَا؟ فَيَشْرَئِبُّونَ وَيَنْظُرُونَ وَيَقُولُونَ: نَعَمْ، هَذَا الْمَوْتُ، قَالَ: وَيُقَالُ: يَا أَهْلَ النَّارِ هَلْ تَعْرِفُونَ هَذَا؟ قَالَ فَيَشْرَئِبُّونَ وَيَنْظُرُونَ وَيَقُولُونَ: نَعَمْ، هَذَا الْمَوْتُ، قَالَ فَيُؤْمَرُ بِهِ فَيُذْبَحُ، قَالَ: ثُمَّ يُقَالُ: يَا أَهْلَ الْجَنَّةِ خُلُودٌ فَلَا مَوْتَ، وَيَا أَهْلَ النَّارِ خُلُودٌ فَلَا مَوْتَ ” قَالَ: ثُمَّ قَرَأَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: {وَأَنْذِرْهُمْ يَوْمَ الْحَسْرَةِ إِذْ قُضِيَ الْأَمْرُ وَهُمْ فِي غَفْلَةٍ وَهُمْ لَا يُؤْمِنُونَ} [مريم: 39] وَأَشَارَ بِيَدِهِ إِلَى الدُّنْيَا


Muslim-5474

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5474. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்குள் நுழைந்த பின்னர்) சொர்க்கத்தில் அல்லாஹ் நாடிய அளவு இடம் மீதியிருக்கும். பிறகு அல்லாஹ், தான் நாடியவற்றில் ஒரு படைப்பை சொர்க்கத்திற்கென உருவாக்குவான்.- இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 51


«يَبْقَى مِنَ الْجَنَّةِ مَا شَاءَ اللهُ أَنْ يَبْقَى ثُمَّ يُنْشِئُ اللهُ تَعَالَى لَهَا خَلْقًا مِمَّا يَشَاءُ»


Muslim-5473

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5473. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(நரகவாசிகள்) நரகத்தில் போடப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள். நரகம் (வயிறு நிரம்பாமல்) “இன்னும் அதிகம் இருக்கிறதா?” என்று கேட்கும்; இறுதியில் கண்ணியத்தின் அதிபதி (யான இறைவன்), நரகத்தில் தனது பாதத்தை வைப்பான். உடனே நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் ஒட்டிக்கொள்ளும். பிறகு, “போதும்; போதும். உன் கண்ணியத்தின் மீதும், உன் கொடையின் மீதும் சத்தியமாக!” என்று நரகம் கூறும்.

சொர்க்கத்தில் இடம் மீதி இருந்து கொண்டேயிருக்கும். இறுதியில், சொர்க்கத்திற்கென அல்லாஹ் புதியவர்களைப் படைத்து, சொர்க்கத்தில் மீதியுள்ள இடத்தில் அவர்களைக் குடியமர்த்துவான்.

இதை, “நாம் நரகத்திடம் “உனக்கு (வயிறு) நிரம்பிவிட்டதா?” என்று கேட்கும் நாளில் “இன்னும் அதிகம் இருக்கிறதா?”என்று அது கேட்கும்” (50:30) எனும் இறைவசனத்தி(ன் விளக்கவுரையி)ல் அப்துல் வஹ்ஹாப் பின் அதாஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

فِي قَوْلِهِ عَزَّ وَجَلَّ: {يَوْمَ نَقُولُ لِجَهَنَّمَ هَلِ امْتَلَأْتِ وَتَقُولُ هَلْ مِنْ مَزِيدٍ} [ق: 30] فَأَخْبَرَنَا عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: ” لَا تَزَالُ جَهَنَّمُ يُلْقَى فِيهَا وَتَقُولُ: هَلْ مِنْ مَزِيدٍ، حَتَّى يَضَعَ رَبُّ الْعِزَّةِ فِيهَا قَدَمَهُ، فَيَنْزَوِي بَعْضُهَا إِلَى بَعْضٍ وَتَقُولُ: قَطْ قَطْ، بِعِزَّتِكَ وَكَرَمِكَ، وَلَا يَزَالُ فِي الْجَنَّةِ فَضْلٌ حَتَّى يُنْشِئَ اللهُ لَهَا خَلْقًا، فَيُسْكِنَهُمْ فَضْلَ الْجَنَّةِ


Muslim-5472

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5472. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(நரகவாசிகள் அனைவரும் நரகத்தில் போடப்பட்ட பின்னரும் நரகம் (வயிறு) நிரம்பாத காரணத்தால்) “இன்னும் அதிகம் இருக்கிறதா?” என்று கேட்டுக்கொண்டேயிருக்கும். இறுதியில் கண்ணியத்தின் அதிபதி(யான இறைவன்) தனது பாதத்தை அதில் வைப்பான். அப்போது அது “போதும்; போதும், உன் கண்ணியத்தின் மீதாணையாக!” என்று கூறும். நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர் களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book : 51


لَا تَزَالُ جَهَنَّمُ تَقُولُ: هَلْ مِنْ مَزِيدٍ، حَتَّى يَضَعَ فِيهَا رَبُّ الْعِزَّةِ، تَبَارَكَ وَتَعَالَى، قَدَمَهُ فَتَقُولُ: قَطْ قَطْ، وَعِزَّتِكَ وَيُزْوَى بَعْضُهَا إِلَى بَعْضٍ

– وحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنَا أَبَانُ بْنُ يَزِيدَ الْعَطَّارِ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِمَعْنَى حَدِيثِ شَيْبَانَ


Next Page » « Previous Page