Category: முஸ்லிம்

Muslim-2206

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3

தல்பியாவும், அதன் வழிமுறையும் நேரமும்.

2206. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“லப்பைக் அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லா ஷரீக்க லக்க லப்பைக், இன்னல் ஹம்த வந்நிஅமத்த லக்க, வல்முல்க்க, லா ஷரீக்க லக்” என்பது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன “தல்பியா” ஆகும்.

(பொருள்: இதோ, உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். இறைவா! உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். உனக்கே நான் கீழ்ப்படிகின்றேன். உனக்கு இணை துணை கிடையாது. உனக்கே எல்லாப் புகழும். அருட்கொடையும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணையானவர் எவருமிலர்.)

இதன் அறிவிப்பாளரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் “லப்பைக் லப்பைக் வ சஅதைக், வல்கைரு பி யதைக், லப்பைக் வர்ரஃக்பாஉ இலைக்க வல்அமல்” என்று கூடுதலாகக் கூறுவார்கள்.

(பொருள்: இதோ, உன் அழைப்பை

أَنَّ تَلْبِيَةَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَبَّيْكَ اللهُمَّ، لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَكَ» قَالَ: وَكَانَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا يَزِيدُ فِيهَا: ” لَبَّيْكَ لَبَّيْكَ، وَسَعْدَيْكَ، وَالْخَيْرُ بِيَدَيْكَ، لَبَّيْكَ وَالرَّغْبَاءُ إِلَيْكَ وَالْعَمَلُ


Muslim-2205

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2205. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதீனாவாசிகள் துல்ஹுலைஃபாவிலும், மற்றொரு வழியான அல்ஜுஹ்ஃபாவிலும் “இஹ்ராம்” கட்டுவார்கள். இராக்வாசிகள் தாத்து இர்க்கிலும், நஜ்த்வாசிகள் கர்னிலும், யமன் வாசிகள் யலம்லமிலும் “இஹ்ராம்” கட்டுவார்கள்.

இதன் அறிவிப்பாளரான அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இதை நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவே ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என நான் எண்ணுகிறேன்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 15


أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُمَا، يُسْأَلُ عَنِ الْمُهَلِّ فَقَالَ: سَمِعْتُ – أَحْسَبُهُ رَفَعَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – فَقَالَ: «مُهَلُّ أَهْلِ الْمَدِينَةِ مِنْ ذِي الْحُلَيْفَةِ، وَالطَّرِيقُ الْآخَرُ الْجُحْفَةُ، وَمُهَلُّ أَهْلِ الْعِرَاقِ مِنْ ذَاتِ عِرْقٍ، وَمُهَلُّ أَهْلِ نَجْدٍ مِنْ قَرْنٍ، وَمُهَلُّ أَهْلِ الْيَمَنِ مِنْ يَلَمْلَمَ»


Muslim-2204

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2204. அபுஸ்ஸுபைர் (முஹம்மத் பின் முஸ்லிம் – ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் “இஹ்ராம்” கட்டும் இடம் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறு கூறியதை நான் செவியுற்றேன். நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவே ஜாபிர் (ரலி) அவர்கள் அவ்வாறு சொன்னார்கள் என நான் எண்ணுகிறேன்.

Book : 15


أُرَاهُ يَعْنِي – النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Muslim-2203

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2203. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதீனாவாசிகள் துல்ஹுலைஃபாவிலும், ஷாம்(சிரியா)வாசிகள் அல்ஜுஹ்ஃபாவிலும், நஜ்த்வாசிகள் கர்னிலும் “இஹ்ராம்”கட்டுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

யமன்வாசிகள் யலம்லமில் “இஹ்ராம்” கட்டுவார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 152203. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதீனாவாசிகள் துல்ஹுலைஃபாவிலும், ஷாம்(சிரியா)வாசிகள் அல்ஜுஹ்ஃபாவிலும், நஜ்த்வாசிகள் கர்னிலும் “இஹ்ராம்”கட்டுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

யமன்வாசிகள் யலம்லமில் “இஹ்ராம்” கட்டுவார்கள் என்று அல்லாஹ்வின் தூதர்

أَمَرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَهْلَ الْمَدِينَةِ أَنْ يُهِلُّوا مِنْ ذِي الْحُلَيْفَةِ، وَأَهْلَ الشَّامِ مِنَ الْجُحْفَةِ، وَأَهْلَ نَجْدٍ، مِنْ قَرْنٍ. وَقَالَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا: وَأُخْبِرْتُ أَنَّهُ قَالَ: «وَيُهِلُّ أَهْلُ الْيَمَنِ مِنْ يَلَمْلَمَ»


Muslim-2202

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2202. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மதீனாவாசிகள் “இஹ்ராம்” கட்டும் இடம் துல்ஹுலைஃபா ஆகும். ஷாம்(சிரியா)வாசிகள் “இஹ்ராம்” கட்டும் இடம் “மஹ்யஆ” ஆகும். அதுவே அல்ஜுஹ்ஃபா எனும் இடமாகும். நஜ்த்வாசிகள் “இஹ்ராம்” கட்டும் இடம் “கர்ன்” ஆகும்.

இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

“யமன்வாசிகள் “இஹ்ராம்” கட்டும் இடம் யலம்லம் ஆகும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என நபித்தோழர்கள் (என்னிடம்) கூறினர்; (நேரடியாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் இதைச் செவியுறவில்லை.

Book : 15


«مُهَلُّ أَهْلِ الْمَدِينَةِ ذُو الْحُلَيْفَةِ، وَمُهَلُّ أَهْلِ الشَّامِ مَهْيَعَةُ، وَهِيَ الْجُحْفَةُ، وَمُهَلُّ أَهْلِ نَجْدٍ قَرْنٌ» قَالَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا: وَزَعَمُوا أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – وَلَمْ أَسْمَعْ ذَلِكَ مِنْهُ – قَالَ: «وَمُهَلُّ أَهْلِ الْيَمَنِ يَلَمْلَمُ»


Muslim-2201

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2201. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மதீனாவாசிகள் துல்ஹுலைஃபாவிலும், ஷாம்(சிரியா)வாசிகள் அல்ஜுஹ்ஃபாவிலும், நஜ்த் வாசிகள் கர்னிலும் “இஹ்ராம்” கட்டுவார்கள்.

இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

யமன்வாசிகள் யலம்லமில் “இஹ்ராம்” கட்டுவார்கள் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என (நபித் தோழர்களால்) எனக்குச் சொல்லப்பட்டது; (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாக) நான் அதைச் செவியுறவில்லை.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 15


«يُهِلُّ أَهْلُ الْمَدِينَةِ مِنْ ذِي الْحُلَيْفَةِ، وَيُهِلُّ أَهْلُ الشَّامِ مِنَ الْجُحْفَةِ، وَيُهِلُّ أَهْلُ نَجْدٍ مِنْ قَرْنٍ» قَالَ ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا: وَذُكِرَ لِي – وَلَمْ أَسْمَعْ – أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «وَيُهِلُّ أَهْلُ الْيَمَنِ مِنْ يَلَمْلَمَ»


Muslim-2200

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2200. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மதீனாவாசிகள் துல்ஹுலைஃபாவிலும், ஷாம்(சிரியா)வாசிகள் அல்ஜுஹ்ஃபாவிலும், நஜ்த் வாசிகள் கர்னிலும் “இஹ்ராம்” கட்டுவார்கள்.

இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(தொடர்ந்து) யமன்வாசிகள் யலம்லமில் “இஹ்ராம்” கட்டுவார்கள் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என எனக்குச் செய்தி எட்டியது.

Book : 15


«يُهِلُّ أَهْلُ الْمَدِينَةِ، مِنْ ذِي الْحُلَيْفَةِ، وَأَهْلُ الشَّامِ، مِنَ الْجُحْفَةِ، وَأَهْلُ نَجْدٍ، مِنْ قَرْنٍ» قَالَ عَبْدُ اللهِ: وَبَلَغَنِي أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «وَيُهِلُّ أَهْلُ الْيَمَنِ مِنْ يَلَمْلَمَ»


Muslim-2199

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2199. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும், ஷாம்(சிரியா)வாசிகளுக்கு அல்ஜுஹ்ஃபா வையும், நஜ்த்வாசிகளுக்குக் கர்னுல் மனாஸிலையும், யமன்வாசிகளுக்கு யலம்லமையும் “இஹ்ராம்” கட்டும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள்.

மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இந்த எல்லைகள், இவர்களுக்கும் ஹஜ் மற்றும் உம்ராவிற்காக இவ்வழியே வரக்கூடிய ஒவ்வொருவருக்கும் பொருந்தும்;அவர்கள் இவ்வூர்வாசிகளாக இல்லாவிட்டாலும் சரியே! இந்த எல்லைகளுக்குள் இருப்பவர், தாம் பயணம் புறப்படும் இடத்திலிருந்தே “இஹ்ராம்” கட்டிக்கொள்வார். எனவே, மக்காவாசிகள் மக்காவிலிருந்தே “இஹ்ராம்” கட்டிக்கொள்வர்.

Book : 15


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَّتَ لِأَهْلِ الْمَدِينَةِ ذَا الْحُلَيْفَةِ، وَلِأَهْلِ الشَّامِ الْجُحْفَةَ، وَلِأَهْلِ نَجْدٍ قَرْنَ الْمَنَازِلِ، وَلِأَهْلِ الْيَمَنِ يَلَمْلَمَ، وَقَالَ: «هُنَّ لَهُمْ، وَلِكُلِّ آتٍ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِهِنَّ، مِمَّنْ أَرَادَ الْحَجَّ وَالْعُمْرَةَ، وَمَنْ كَانَ دُونَ ذَلِكَ، فَمِنْ حَيْثُ أَنْشَأَ، حَتَّى أَهْلُ مَكَّةَ، مِنْ مَكَّةَ»


Muslim-2198

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2

ஹஜ் மற்றும் உம்ராவிற்காக “இஹ்ராம்” கட்டும் எல்லைகள்.

2198. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும், ஷாம்(சிரியா)வாசிகளுக்கு அல்ஜுஹ்ஃபாவையும், நஜ்த்வாசிகளுக்குக் கர்னுல் மனாஸிலையும், யமன்வாசிகளுக்கு யலம்லமையும் “இஹ்ராம்” கட்டும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள்.

மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இந்த எல்லைகள், இ(ங்கு குறிப்பிடப்பெற்றுள்ள)வர்களுக்கும் ஹஜ் மற்றும் உம்ராவிற்காக இவ்வழிகளில் வருகின்ற மற்றவர்களுக்கும் பொருந்தும். அவர்கள் இவ்வூர்வாசிகளாக இல்லாவிட்டாலும் சரியே! இந்த எல்லைகளுக்குள் இருப்பவர்கள்,தாம் வசிக்கும் இடத்திலிருந்தே (“இஹ்ராம்” கட்டிக்கொள்வர்); மக்காவாசிகள் மக்காவிலிருந்தே “இஹ்ராம்” கட்டிக்கொள்வர்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

وَقَّتَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَهْلِ الْمَدِينَةِ، ذَا الْحُلَيْفَةِ، وَلِأَهْلِ الشَّامِ الْجُحْفَةَ، وَلِأَهْلِ نَجْدٍ، قَرْنَ الْمَنَازِلِ، وَلِأَهْلِ الْيَمَنِ، يَلَمْلَمَ، قَالَ: «فَهُنَّ لَهُنَّ، وَلِمَنْ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِ أَهْلِهِنَّ، مِمَّنْ أَرَادَ الْحَجَّ وَالْعُمْرَةَ، فَمَنْ كَانَ دُونَهُنَّ فَمِنْ أَهْلِهِ، وَكَذَا فَكَذَلِكَ، حَتَّى أَهْلُ مَكَّةَ يُهِلُّونَ مِنْهَا»


Muslim-2197

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2197. யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்களிடம் மேலங்கி அணிந்த ஒரு மனிதர் வந்தார். அவரது அங்கியில் நறுமணத்தின் அடையாளம் இருந்தது. அவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் உம்ராவிற்காக “இஹ்ராம்” கட்டிவிட்டேன். எனவே, நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் பதிலேதும் கூறாமல் அமைதியாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பெறும்போது, (துணி போன்றவற்றால்) அவர்களது தலைக்கு மேல் நிழலிட்டு அவர்களை உமர் (ரலி) அவர்கள் மறைப்பார்கள். நான் உமர் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பெறும் போது அவர்கள்மீது இடப்படும் துணிக்குள் நான் எனது தலையை நுழை(த்துப் பார்)க்க வேண்டுமென ஆசைப்படுகிறேன்” என்று சொல்லியிருந்தேன்.

இந்நிலையில் நபி (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு அருளப்பெற்றபோது, உமர் (ரலி) அவர்கள் துணியால் அவர்களை மறைத்தார்கள். உடனே நான் அவர்களிடம் சென்று அந்தத் துணிக்குள் எனது தலையை நுழைத்து, அவர்களைக் கூர்ந்து

كُنَّا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَاهُ رَجُلٌ عَلَيْهِ جُبَّةٌ بِهَا أَثَرٌ مِنْ خَلُوقٍ، فَقَالَ يَا رَسُولَ اللهِ، إِنِّي أَحْرَمْتُ بِعُمْرَةٍ، فَكَيْفَ أَفْعَلُ؟ فَسَكَتَ عَنْهُ، فَلَمْ يَرْجِعْ إِلَيْهِ، وَكَانَ عُمَرُ يَسْتُرُهُ إِذَا أُنْزِلَ عَلَيْهِ الْوَحْيُ، يُظِلُّهُ، فَقُلْتُ لِعُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ: إِنِّي أُحِبُّ، إِذَا أُنْزِلَ عَلَيْهِ الْوَحْيُ، أَنْ أُدْخِلَ رَأْسِي مَعَهُ فِي الثَّوْبِ، فَلَمَّا أُنْزِلَ عَلَيْهِ، خَمَّرَهُ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ بِالثَّوْبِ، فَجِئْتُهُ فَأَدْخَلْتُ رَأْسِي مَعَهُ فِي الثَّوْبِ، فَنَظَرْتُ إِلَيْهِ، فَلَمَّا سُرِّيَ عَنْهُ، قَالَ: «أَيْنَ السَّائِلُ آنِفًا عَنِ الْعُمْرَةِ؟» فَقَامَ إِلَيْهِ الرَّجُلُ، فَقَالَ: «انْزِعْ عَنْكَ جُبَّتَكَ، وَاغْسِلْ أَثَرَ الْخَلُوقِ الَّذِي بِكَ، وَافْعَلْ فِي عُمْرَتِكَ، مَا كُنْتَ فَاعِلًا فِي حَجِّكَ»


Next Page » « Previous Page