Category: முஸ்லிம்

Muslim-1714

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1714. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடைய புதல்வியை நீராட்டிக் கொண்டிருந்தவர்களிடம் “அவரது வலப் புறத்திலிருந்தும் அங்கத்தூய்மை (உளூ) செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்தும் (நீராட்டலை) ஆரம்பியுங்கள்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 11


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُنَّ فِي غَسْلِ ابْنَتِهِ: «ابْدَأْنَ بِمَيَامِنِهَا، وَمَوَاضِعِ الْوُضُوءِ مِنْهَا»


Muslim-1713

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1713. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வியை நீராட்டும்போது, “அவரது வலப் புறத்திலிருந்தும் அங்கத்தூய்மை (உளூ) செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்தும் (நீராட்டலை) ஆரம்பியுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

Book : 11


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَيْثُ أَمَرَهَا أَنْ تَغْسِلَ ابْنَتَهُ قَالَ لَهَا: «ابْدَأْنَ بِمَيَامِنِهَا، وَمَوَاضِعِ الْوُضُوءِ مِنْهَا»


Muslim-1712

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1712. மேற்கண்ட ஹதீஸ் உம்மு அத்திய்யா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வியரில் ஒருவரை நாங்கள் நீராட்டிக் கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து “இவரை ஐந்து. அல்லது அதற்கும் அதிகமாக ஒற்றை எண்ணிக்கையில் நீராட்டுங்கள்” என்று கூறினார்கள் என உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

மேலும், “நாங்கள் அவரது தலைமுடியை பிடரிப் பகுதியில் இரண்டும், முன்நெற்றிப் பகுதியில் ஒன்றுமாக மூன்று பின்னல்களிட்டோம்” என்று இந்த அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.

Book : 11


أَتَانَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ نَغْسِلُ إِحْدَى بَنَاتِهِ، فَقَالَ: «اغْسِلْنَهَا وِتْرًا خَمْسًا، أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكِ» بِنَحْوِ حَدِيثِ أَيُّوبَ وَعَاصِمٍ، وَقَالَ فِي الْحَدِيثِ: قَالَتْ: فَضَفَرْنَا شَعْرَهَا ثَلَاثَةَ أَثْلَاثٍ، قَرْنَيْهَا وَنَاصِيَتَهَا


Muslim-1711

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1711. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய புதல்வியார் ஸைனப் (ரலி) அவர்கள் இறந்தபோது “இவரை மூன்று முறை,அல்லது ஐந்து முறை ஒற்றை எண்ணிக்கையில் நீராட்டுங்கள். ஐந்தாவது முறையில் “கற்பூரத்தை” அல்லது “சிறிது கற்பூரத்தை”ச் சேர்த்துக்கொள்ளுங்கள். நீராட்டி முடித்ததும் எனக்குத் தெரிவியுங்கள்” என்று எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் (அவ்வாறே செய்து முடித்ததும்) அவர்களுக்கு அதுபற்றி அறிவித்தோம். அவர்கள் தமது கீழாடையை எங்களிடம் தந்து “இதை அவருக்குப் போர்த்துங்கள்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 11


لَمَّا مَاتَتْ زَيْنَبُ بِنْتُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اغْسِلْنَهَا وِتْرًا ثَلَاثًا، أَوْ خَمْسًا، وَاجْعَلْنَ فِي الْخَامِسَةِ كَافُورًا، أَوْ شَيْئًا مِنْ كَافُورٍ، فَإِذَا غَسَلْتُنَّهَا، فَأَعْلِمْنَنِي» قَالَتْ: فَأَعْلَمْنَاهُ، فَأَعْطَانَا حَقْوَهُ وَقَالَ «أَشْعِرْنَهَا إِيَّاهُ»


Muslim-1710

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1710. மேற்கண்ட ஹதீஸ் உம்மு அத்திய்யா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் பின்வரும் (தகவல் அதிகப்)படியாக இடம்பெற்றுள்ளது:

“இலந்தை இலை கலந்த நீரால் மூன்று, அல்லது ஐந்து, அல்லது ஏழு, அல்லது தேவையெனக் கருதினால் அதற்கதிகமான தடவைகள் அவரை நீராட்டுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேலும், “அவர்களது தலையில் மூன்று பின்னல் இட்டோம்” என்றும் உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் உம்மு அத்திய்யா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் “ஒற்றைப்படையாக(த் தண்ணீர் ஊற்றி) நீராட்டுங்கள்; மூன்று, அல்லது ஐந்து, அல்லது ஏழு தடவைகள் (தண்ணீர் ஊற்றுங்கள்)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவும் “நாங்கள் அவருக்குத் தலைவாரி மூன்று பின்னல்கள் இட்டோம்” என உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.

«ثَلَاثًا أَوْ خَمْسًا أَوْ سَبْعًا، أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكِ، إِنْ رَأَيْتُنَّ ذَلِكِ» فَقَالَتْ حَفْصَةُ، عَنْ أُمِّ عَطِيَّةَ: وَجَعَلْنَا رَأْسَهَا ثَلَاثَةَ قُرُونٍ

-وحَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، وَأَخْبَرَنَا أَيُّوبُ، قَالَ: وَقَالَتْ حَفْصَةُ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ: «اغْسِلْنَهَا وِتْرًا ثَلَاثًا أَوْ خَمْسًا أَوْ سَبْعًا»، قَالَ: وَقَالَتْ أُمُّ عَطِيَّةَ: «مَشَطْنَاهَا ثَلَاثَةَ قُرُونٍ»


Muslim-1709

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1709. மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் “நபி (ஸல்) அவர்களுடைய புதல்வியரில் ஒருவர் இறந்தபோது” என்று ஹதீஸ் தொடங்குகிறது.

இப்னு உலைய்யா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது நாங்கள் அவர்களுடைய புதல்வியை நீராட்டிக் கொண்டிருந்தோம்” என்று உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறினார்கள் என ஹதீஸ் தொடங்குகிறது.

மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வி இறந்துவிட்டபோது அவர்கள் எங்களிடம் வந்தார்கள்” என்று ஹதீஸ் தொடங்குகிறது.

Book : 11


وحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، ح وحَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَا: حَدَّثَنَا حَمَّادٌ، ح وحَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، كُلُّهُمْ عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ: تُوُفِّيَتْ إِحْدَى بَنَاتِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،

وَفِي حَدِيثِ ابْنِ عُلَيَّةَ قَالَتْ: أَتَانَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ نَغْسِلُ ابْنَتَهُ،

وَفِي حَدِيثِ مَالِكٍ قَالَتْ: دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ تُوُفِّيَتِ ابْنَتُهُ، بِمِثْلِ حَدِيثِ يَزِيدَ بْنِ زُرَيْعٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ.


Muslim-1708

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1708. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அவருக்குத் தலைவாரி மூன்று பின்னல்கள் இட்டோம்.

இதை ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 11


مَشَطْنَاهَا ثَلَاثَةَ قُرُونٍ.


Muslim-1707

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12

பிரேதத்தைக் குளிப்பாட்டுதல்.

1707. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் புதல்வி இறந்துவிட்டபோது அவரது பிரேதத்தை நாங்கள் நீராட்டிக்கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, “இலந்தை இலை கலந்த நீரால் மூன்று, அல்லது ஐந்து, அல்லது தேவையெனக் கருதினால் அதற்கதிகமான தடவைகள் அவரை நீராட்டுங்கள்; இறுதியில் “கற்பூரத்தை” அல்லது “சிறிது கற்பூரத்தை”ச் சேர்த்துக்கொள்ளுங்கள். இவற்றை முடித்ததும் எனக்கு அறிவியுங்கள்” என்று கூறினார்கள். நாங்கள் நீராட்டி முடித்ததும் அவர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் தமது கீழாடையை எங்களிடம் போட்டு “இதை அவரது உடலில் போர்த்துங்கள்” என்று கூறினார்கள்.

இதை முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 11


دَخَلَ عَلَيْنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ نَغْسِلُ ابْنَتَهُ، فَقَالَ: «اغْسِلْنَهَا ثَلَاثًا، أَوْ خَمْسًا، أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ، إِنْ رَأَيْتُنَّ ذَلِكَ، بِمَاءٍ وَسِدْرٍ، وَاجْعَلْنَ فِي الْآخِرَةِ كَافُورًا أَوْ شَيْئًا مِنْ كَافُورٍ، فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي» فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ فَأَلْقَى إِلَيْنَا حَقْوَهُ، فَقَالَ: «أَشْعِرْنَهَا إِيَّاهُ»


Muslim-1706

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1706. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் “நாங்கள் (பெண்கள்) இறுதி ஊர்வலத்தைப் பின்தொடரக் கூடாது எனத் தடுக்கப் பட்டோம். ஆனால் வன்மையாகத் தடுக்கப்பட்டோமில்லை” என்று உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.

Book : 11


«نُهِينَا عَنِ اتِّبَاعِ الْجَنَائِزِ، وَلَمْ يُعْزَمْ عَلَيْنَا»


Muslim-1705

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 11

இறுதி ஊர்வலத்தை (ஜனாஸாவை)ப் பின்தொடர்ந்து செல்ல பெண்களுக்கு வந்துள்ள தடை

1705. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (பெண்கள்) இறுதி ஊர்வலத்தைப் பின்தொடர்ந்து செல்ல வேண்டாமெனத் தடை விதிக்கப்பட்டிருந்தோம். ஆனால்,வன்மையாகத் தடுக்கப்பட்டோமில்லை.

இதை முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 11


«كُنَّا» نُنْهَى عَنِ اتِّبَاعِ الْجَنَائِزِ، وَلَمْ يُعْزَمْ عَلَيْنَا


Next Page » « Previous Page