Category: முஸ்லிம்

Muslim

Muslim-5750

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

5750. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“ஒரு பெண் தன் கணவனிடமிருந்து ஏற்படும் பிணக்கை, அல்லது புறக்கணிப்பைப் பற்றி அஞ்சினால்…” (அல்குர்ஆன்: 4:128) எனும் இறைவசனம், ஒரு பெண் விஷயத்தில் அருளப்பெற்றது. அவள் ஒரு கணவனின் உறவில் நீண்ட காலம் இருந்துவருவாள். பின்னர் (முதுமை போன்ற காரணத்தால்) அவளை அவர் விவாகரத்துச் செய்து(விட்டு மற்றொருத்தியை மணந்து) கொள்ள விரும்புவார்.

இந்நிலையில் அவள், “என்னை மணவிலக்குச் செய்யாதீர்கள். என்னை (உங்கள் மனைவியாகவே) இருக்க விடுங்கள். என் (தாம்பத்திய உரிமைகள்) விஷயத்தில் நான் விட்டுக் கொடுத்து விடுகிறேன்” என்று கூறுவாள். அப்போதுதான் இந்த வசனம் அருளப்பெற்றது.

அத்தியாயம்: 54


{وَإِنِ امْرَأَةٌ خَافَتْ مِنْ بَعْلِهَا نُشُوزًا أَوْ إِعْرَاضًا} [النساء: 128] الْآيَةَ، قَالَتْ: ” أُنْزِلَتْ فِي الْمَرْأَةِ تَكُونُ عِنْدَ الرَّجُلِ، فَتَطُولُ صُحْبَتُهَا، فَيُرِيدُ طَلَاقَهَا، فَتَقُولُ: لَا تُطَلِّقْنِي، وَأَمْسِكْنِي، وَأَنْتَ فِي حِلٍّ مِنِّي، فَنَزَلَتْ هَذِهِ الْآيَةَ


Muslim-5751

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

5751. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

“ஒரு பெண் தன் கணவனிடமிருந்து ஏற்படும் பிணக்கை, அல்லது புறக்கணிப்பைப் பற்றி அஞ்சினால்…” (அல்குர்ஆன்: 4:128) எனும் இறை வசனம், ஒரு பெண் தொடர்பாக அருளப்பெற்றது.

அவள் ஒருவரின் துணைவியாக இருந்துவருவாள். அவளிடம் உறவும் (தனது) குழந்தையும் இருந்துவரும். இந்நிலையில் (முதுமை நோய் போன்ற காரணங்களால்) அவளிடம் கணவர் (தாம்பத்திய உறவுக்காக) அதிகமாக வந்துபோகாமல் இருக்கலாம்.

இந்நிலையில், அவர் தன்னை மண விலக்குச் செய்துவிடுவதை விரும்பாமல் அவள், “என் (தாம்பத்திய உரிமைகள்) விஷயத்தில் உங்களுக்கு விட்டுக் கொடுத்துவிடுகிறேன்” என்று கூறிவிடுவாள். (இவ்வாறு விட்டுக் கொடுத்து சமரசம் செய்துகொள்வதில் தவறில்லை என இவ்வசனம் கூறுகின்றது.)

அத்தியாயம்: 54


{وَإِنِ امْرَأَةٌ خَافَتْ مِنْ بَعْلِهَا نُشُوزًا أَوْ إِعْرَاضًا} [النساء: 128] قَالَتْ: ” نَزَلَتْ فِي الْمَرْأَةِ تَكُونُ عِنْدَ الرَّجُلِ، فَلَعَلَّهُ أَنْ لَا يَسْتَكْثِرَ مِنْهَا، وَتَكُونُ لَهَا صُحْبَةٌ وَوَلَدٌ، فَتَكْرَهُ أَنْ يُفَارِقَهَا، فَتَقُولُ لَهُ: أَنْتَ فِي حِلٍّ مِنْ شَأْنِي


Muslim-5752

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

5752. உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், “என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! நபி (ஸல்) அவர்களின் தோழர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரும்படி (இறைவனால் அல்குர்ஆன்: 59:10) ஆவது வசனத்தில் கட்டளையிடப்பட்டது. ஆனால், மக்களோ அவர்களை ஏசிக் கொண்டிருக்கின்றனர்” என்று சொன்னார்கள்.


மேற்கண்ட ஹதீஸ் உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அத்தியாயம்: 54


قَالَتْ لِي عَائِشَةُ: يَا ابْنَ أُخْتِي «أُمِرُوا أَنْ يَسْتَغْفِرُوا لِأَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَبُّوهُمْ»

– وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا هِشَامٌ بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ


Muslim-5753

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி ✅

5753. ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“ஓர் இறைநம்பிக்கையாளரைத் திட்டமிட்டே கொலை செய்தவனுக்கு நரகம் தான் தண்டனை” (அல்குர்ஆன்: 4:93) எனும் இறைவசனம் தொடர்பாக (அதன் சட்டம் மாற்றப்பட்டுவிட்டதா, இல்லையா எனும் விஷயத்தில்) கூஃபாவாசிகள் கருத்து வேறுபாடு கொண்டனர்.

எனவே, நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் பயணம் சென்று அது குறித்துக் கேட்டேன். அவர்கள், “இதுதான் (இறைநம்பிக்கையாளரைக் கொலை செய்யும் குற்றம் தொடர்பாக) அருளப்பெற்ற இறுதி வசனமாகும். பிறகு இதை வேறு (வசனம்) எதுவும் மாற்றி விடவில்லை” என்று கூறினார்கள்.

அத்தியாயம்: 54


اخْتَلَفَ أَهْلُ الْكُوفَةِ فِي هَذِهِ الْآيَةِ: {وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ} [النساء: 93] فَرَحَلْتُ إِلَى ابْنِ عَبَّاسٍ فَسَأَلْتُهُ عَنْهَا، فَقَالَ: «لَقَدْ أُنْزِلَتْ آخِرَ مَا أُنْزِلَ، ثُمَّ مَا نَسَخَهَا شَيْءٌ»


Muslim-5754

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி ✅

5754. ஹதீஸ் எண்-5753 இல் வரும் செய்தி ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.


அவற்றில் முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (“இதுதான் அருளப்பெற்ற இறுதி வசனமாகும் என்பதைக் குறிக்க”) “நஸலத் ஃபீ ஆகிரி மா உன்ஸில” என்று இடம்பெற்றுள்ளது.

நள்ர் பின் ஷுமைல் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “இது இறுதியாக அருளப்பெற்ற வசனங்களில் உள்ளதாகும்” என்று இடம்பெற்றுள்ளது.


அத்தியாயம்: 54


نَزَلَتْ فِي آخِرِ مَا أُنْزِلَ.

وَفِي حَدِيثِ النَّضْرِ: إِنَّهَا لَمِنْ آخِرِ مَا أُنْزِلَتْ


Muslim-5755

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

5755. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்கள், “ஓர் இறைநம்பிக்கையாளரைத் திட்டமிட்டே கொலை செய்தவனுக்கு நரகம் தான் தண்டனை. அதில் அவன் நிரந்தரமாக இருப்பான்” (4:93) என்று தொடங்கும் இறைவசனம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (விளக்கம்) கேட்கும்படி எனக்கு உத்தரவிட்டார்கள். அவ்வாறே நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “இ(ந்த 4:93ஆவது வசனத்தின் சட்டத்)தை வேறெந்த வசனமும் மாற்றவில்லை” என்று பதிலளித்தார்கள்.

“அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு தெய்வங்களிடம் பிரார்த்திக்கமாட்டார்கள். அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் (சட்டரீதியான) தக்க காரணமின்றி கொல்லமாட்டார்கள்” (25:68) என்று தொடங்கும் இந்த வசனம் குறித்துக் கேட்கும்படியும் உத்தரவிட்டிருந்தார்கள். அது குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இது இணைவைப்போர் தொடர்பாக அருளப்பெற்றது” என்று பதிலளித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 54


أَمَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبْزَى أَنْ أَسْأَلَ ابْنَ عَبَّاسٍ ، عَنْ هَاتَيْنِ الْآيَتَيْنِ : { وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا } فَسَأَلْتُهُ فَقَالَ : لَمْ يَنْسَخْهَا شَيْءٌ . وَعَنْ هَذِهِ الْآيَةِ : { وَالَّذِينَ لا يَدْعُونَ مَعَ اللهِ إِلَهًا آخَرَ وَلا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللهُ إِلا بِالْحَقِّ } قَالَ : نَزَلَتْ فِي أَهْلِ الشِّرْكِ .


Muslim-5756

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி ✅

5756. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு தெய்வங்களிடம் பிரார்த்திக்கமாட்டார்கள்” என்று தொடங்கி,”அதில் இழிவுபடுத்தப்பட்டவனாக நிரந்தரமாகத் தங்குவான்” (அல்குர்ஆன்: 25:68, 69) என்பது வரையிலான இறைவசனங்கள் மக்காவில் அருளப் பெற்றன.

அப்போது இணைவைப்பாளர்கள், “இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதால் எங்களுக்கு என்ன பயன்? நாங்கள் அல்லாஹ்வை விட்டு (வேறு கடவுள்களை நோக்கி)த் திரும்பிவிட்டோம். அல்லாஹ் தடைவிதித்த உயிர்களை (சட்டரீதியான) தக்க காரணமின்றி கொலை செய்திருக்கிறோம். மானக்கேடான செயல்களையும் செய்தோம். (ஆகவே, இனி நாங்கள் இஸ்லாத்தைத் தழுவுவதால் எந்தப் பயனுமில்லை. நமக்கு பாவமன்னிப்புக் கிட்டாது)” என்று கூறினர்.

ஆகவேதான் அல்லாஹ், “மனம் திருந்தி, இறைநம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவரைத் தவிர” (அல்குர்ஆன்: 25:70) என்று தொடங்கும் வசனத்தை முழுமையாக அருளினான். ஆனால், யார் இஸ்லாத்தைத் தழுவி, அ(தன் சட்டதிட்டத்)தை அறிந்துகொண்ட பின்பும் கொலை செய்கிறாரோ அவருக்குப் பாவமன்னிப்புக் கிடையாது.

نَزَلَتْ هَذِهِ الْآيَةُ بِمَكَّةَ: {وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللهِ إِلَهًا آخَرَ} [الفرقان: 68] إِلَى قَوْلِهِ: {مُهَانًا} [الفرقان: 69] فَقَالَ الْمُشْرِكُونَ: وَمَا يُغْنِي عَنَّا الْإِسْلَامُ، وَقَدْ عَدَلْنَا بِاللهِ، وَقَدْ قَتَلْنَا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللهُ، وَأَتَيْنَا الْفَوَاحِشَ؟ فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ: {إِلَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا} [الفرقان: 70] إِلَى آخِرِ الْآيَةِ، قَالَ: «فَأَمَّا مَنْ دَخَلَ فِي الْإِسْلَامِ وَعَقَلَهُ، ثُمَّ قَتَلَ، فَلَا تَوْبَةَ لَهُ»


Muslim-5757

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி ✅

5757. ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “இறைநம்பிக்கையாளரைத் திட்டமிட்டே கொலை செய்தவனுக்குப் பாவமன்னிப்புக் கிடைக்குமா?” என்று கேட்டேன். அவர்கள், “பாவமன்னிப்புக் கிடையாது” என்று சொன்னார்கள். உடனே நான் அவர்களுக்கு “அல்ஃபுர்கான்” அத்தியாயத்திலுள்ள (அல்குர்ஆன்: 25:68, 69) ஆகிய வசனங்களை ஓதிக்காட்டினேன்.

அதற்கு அவர்கள், “இது மக்காவில் அருளப்பெற்ற வசனமாகும். இதை மதீனாவில் அருளப்பெற்ற மற்றொரு வசனம் மாற்றிவிட்டது என்று கூறிவிட்டு, “ஓர் இறை நம்பிக்கையாளரைத் திட்டமிட்டே கொலை செய்தவனுக்கு நரகம்தான் தண்டனை. அதில் அவன் நிரந்தரமாக இருப்பான்” (அல்குர்ஆன்: 4:93) எனும் இறைவசனமே அது என்று கூறினார்கள்.


இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம்: 54


قُلْتُ لِابْنِ عَبَّاسٍ: أَلِمَنْ قَتَلَ مُؤْمِنًا مُتَعَمِّدًا مِنْ تَوْبَةٍ؟ قَالَ: لَا، قَالَ: فَتَلَوْتُ عَلَيْهِ هَذِهِ الْآيَةَ الَّتِي فِي الْفُرْقَانِ: {وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللهِ إِلَهًا آخَرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللهُ إِلَّا بِالْحَقِّ} [الفرقان: 68] إِلَى آخِرِ الْآيَةِ،

قَالَ: «هَذِهِ آيَةٌ مَكِّيَّةٌ نَسَخَتْهَا آيَةٌ مَدَنِيَّةٌ»: {وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا} [النساء: 93]، وَفِي رِوَايَةِ ابْنِ هَاشِمٍ: فَتَلَوْتُ عَلَيْهِ هَذِهِ الْآيَةَ الَّتِي فِي الْفُرْقَانِ: {إِلَّا مَنْ تَابَ} [مريم: 60]


Muslim-5758

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி ✅

5758. உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “குர்ஆனில் இறுதியாக அருளப்பெற்ற முழு அத்தியாயம் எதுவென உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்; “அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்துவிட்டால்…”என்று தொடங்கும் (110) ஆவது அத்தியாயமே அது” என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், “உண்மைதான்” என்றார்கள்.


இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் அபூபக்ர் பின் அபூஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “எந்த அத்தியாயம் (குர்ஆனில் முழுமையாக) அருளப்பெற்றது என உங்களுக்குத் தெரியுமா?” என இடம் பெற்றுள்ளது. “இறுதியாக” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.


மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், “இறுதியாக அருளப்பெற்ற அத்தியாயம்” என இடம்பெற்றுள்ளது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப்

قَالَ لِي ابْنُ عَبَّاسٍ: تَعْلَمُ – وَقَالَ هَارُونُ: تَدْرِي – آخِرَ سُورَةٍ نَزَلَتْ مِنَ الْقُرْآنِ، نَزَلَتْ جَمِيعًا؟ قُلْتُ: «نَعَمْ، إِذَا جَاءَ نَصْرُ اللهِ وَالْفَتْحُ»، قَالَ: صَدَقْتَ،

وَفِي رِوَايَةِ ابْنِ أَبِي شَيْبَةَ: تَعْلَمُ أَيُّ سُورَةٍ، وَلَمْ يَقُلْ: آخِرَ

– وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا أَبُو عُمَيْسٍ، بِهَذَا الْإِسْنَادِ، مِثْلَهُ، وَقَالَ: آخِرَ سُورَةٍ، وَقَالَ عَبْدِ الْمَجِيدِ: وَلَمْ يَقُلْ: ابْنِ سُهَيْلٍ


Muslim-5759

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி ✅

5759. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் தமது சிறு ஆட்டு மந்தை(யை மேய்த்துக்கொண்டு அதன்) உடன் இருந்தார். அப்போது (ஒரு படைப்பிரிவில் வந்த) முஸ்லிம்கள் அவரை (வழியில்) சந்தித்தனர். அவர், “அஸ்ஸலாமு அலைக்கும்” (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று (இஸ்லாமிய முகமன்) கூறி, (தம்மை முஸ்லிம் என இனம் காட்டி)னார். ஆனால், அவரைப் பிடித்து அவர்கள் கொன்றுவிட்டனர்; அந்த ஆட்டு மந்தையையும் எடுத்துக் கொண்டனர்.

அப்போதுதான், “உங்களுக்கு முகமன் (ஸலாம்) கூறியவரிடம் “நீ இறைநம்பிக்கையாளன் அல்லன்” என்று இவ்வுலக வாழ்க்கையின் (அற்பப்) பொருளைப் பெறுவதற்காகக் கூறி (அவரைக் கொன்று)விடாதீர்கள்” (அல்குர்ஆன்: 4:94) எனும் இறைவசனம் அருளப்பெற்றது.


இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

இந்த (அல்குர்ஆன்: 4:94) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “அஸ்ஸலம்” எனும் சொல்லை, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் “அஸ்ஸலாம்” என்று ஓதினார்கள். (பொருள் ஒன்றே.)


لَقِيَ نَاسٌ مِنَ الْمُسْلِمِينَ رَجُلًا فِي غُنَيْمَةٍ لَهُ، فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ، فَأَخَذُوهُ فَقَتَلُوهُ وَأَخَذُوا تِلْكَ الْغُنَيْمَةَ، فَنَزَلَتْ: (وَلَا تَقُولُوا لِمَنْ أَلْقَى إِلَيْكُمُ السَّلَمَ لَسْتَ مُؤْمِنًا) ” وَقَرَأَهَا ابْنُ عَبَّاسٍ: {السَّلَامَ} [النساء: 94]