Category: முஸ்லிம்

Muslim

Muslim-5760

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி ✅

5760. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அறியாமைக் காலத்தில்) அன்ஸாரிகள் “ஹஜ்” செய்(ய “இஹ்ராம்” கட்டி முடித்)துவிட்டு, மீண்டும் (வீட்டுக்கு) வருவதானால், வீடுகளில் அதன் (முன்பக்க வாசல் வழியாக நுழையாமல்) பின்பக்க வாசல் வழியேதான் நுழைவார்கள். இந்நிலையில் அன்ஸாரிகளில் ஒருவர் தமது (வீட்டின்) முன்வாசல் வழியாகவே நுழைந்துவிட்டார். இது குறித்து அவரிடம் (ஆட்சேபணை) கூறப்பட்டது.

அப்போதுதான், “நீங்கள் வீடுகளுக்குள் அவற்றின் பின்புற வழியாக வருவது புண்ணியமன்று” (அல்குர்ஆன்: 2:189) எனும் இறைவசனத்தொடர் அருளப்பெற்றது.


இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம்: 54


كَانَتِ الْأَنْصَارُ إِذَا حَجُّوا فَرَجَعُوا، لَمْ يَدْخُلُوا الْبُيُوتَ إِلَّا مِنْ ظُهُورِهَا، قَالَ: فَجَاءَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ فَدَخَلَ مِنْ بَابِهِ، فَقِيلَ لَهُ فِي ذَلِكَ “، فَنَزَلَتْ هَذِهِ الْآيَةَ: {وَلَيْسَ الْبِرُّ بِأَنْ تَأْتُوا الْبُيُوتَ مِنْ ظُهُورِهَا} [البقرة: 189]


Muslim-5761

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி ✅

பாடம்: 1

“இறைநம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் பணியும் நேரம் அவர்களுக்கு வரவில்லையா?” (அல்குர்ஆன்: 57:16) எனும் இறை வசனத் தொடர்.

5761. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்கும்,

“இறைநம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் பணியும் நேரம் அவர்களுக்கு வரவில்லையா?” (அல்குர்ஆன்: 57:16)

என்று இந்த வசனத்தின் மூலம் அல்லாஹ், எங்களைக் கண்டிப்பதற்கும் இடையே நான்கு ஆண்டுகள் மட்டுமே இடைவெளி இருந்தது.

அத்தியாயம்: 54


مَا كَانَ بَيْنَ إِسْلَامِنَا وَبَيْنَ أَنْ عَاتَبَنَا اللهُ بِهَذِهِ الْآيَةِ: {أَلَمْ يَأْنِ لِلَّذِينَ آمَنُوا أَنْ تَخْشَعَ قُلُوبُهُمْ لِذِكْرِ اللهِ} [الحديد: 16] إِلَّا أَرْبَعُ سِنِينَ


Muslim-5762

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி ✅

பாடம்: 2

“நீங்கள் தொழுமிடங்கள் ஒவ்வொன்றிலும் உங்களது அலங்காரத்தை மேற்கொள்ளுங்கள்” (அல்குர்ஆன்: 7:31) எனும் இறைவசனத் தொடர்.

5762. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அறியாமைக் காலப்) பெண்கள் இறையில்லம் கஅபாவை நிர்வாணமாகச் சுற்றி (தவாஃப்) வருவார்கள். அப்போது அவர்கள், “தவாஃப் ஆடையை இரவல் தருபவர் யார்?” என்று கூறி, (அதைப் பெற்று) தமது இன உறுப்பின் மீது வைத்துக்கொண்டு, பின்வருமாறு பாடுவார்கள்:

“இன உறுப்பில்

சிறிதளவோ முழுவதுமோ

வெளிப்படுகிறது

இந்நாள்.

இதை

எவரும் பார்க்க

அனுமதிக்க முடியாது

என்னால்”.

எனவேதான், “நீங்கள்

كَانَتِ الْمَرْأَةُ تَطُوفُ بِالْبَيْتِ وَهِيَ عُرْيَانَةٌ

فَتَقُولُ : مَنْ يُعِيرُنِي تِطْوَافًا؟ تَجْعَلُهُ عَلَى فَرْجِهَا وَتَقُولُ : الْيَوْمَ يَبْدُو بَعْضُهُ أَوْ كُلُّهُ فَمَا بَدَا مِنْهُ فَلَا أُحِلُّهُ

فَنَزَلَتْ هَذِهِ الْآيَةُ : { خُذُوا زِينَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ }


Muslim-5763

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி ✅

பாடம்: 3

“உங்கள் பெண்களை விபசாரத்திற்கு நிர்பந்திக்காதீர்கள்” (அல்குர்ஆன்: 24:33) எனும் இறைவசனத்தொடர்.

5763. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை பின் ஸலூல், தன் அடிமைப் பெண்ணிடம், “நீ சென்று விபசாரத்தில் ஈடுபட்டு எதையேனும் ஈட்டி வா” என்று சொன்னான். அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “கற்பொழுக்கம் நாடும் உங்கள் பெண்களை இவ்வுலக வாழ்க்கையின் சாதனங்களைப் பெறுவதற்காக விபசாரத்துக்கு நிர்பந்திக்காதீர்கள். யாரேனும் அவர்களை நிர்பந்தித்தால் நிர்பந்திக்கப்பட்ட அப்பெண்களை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” (அல்குர்ஆன்: 24:33) எனும் வசனத்தை அருளினான்.


இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம்: 54


كَانَ عَبْدُ اللهِ بْنُ أُبَيٍّ ابْنُ سَلُولَ يَقُولُ لِجَارِيَةٍ لَهُ: اذْهَبِي فَابْغِينَا شَيْئًا، فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ: {وَلَا تُكْرِهُوا فَتَيَاتِكُمْ عَلَى الْبِغَاءِ إِنْ أَرَدْنَ تَحَصُّنًا لِتَبْتَغُوا عَرَضَ الْحَيَاةِ الدُّنْيَا وَمَنْ يُكْرِهْهُنَّ فَإِنَّ اللهَ مِنْ بَعْدِ إِكْرَاهِهِنَّ} [النور: 33] لَهُنَّ {غَفُورٌ رَحِيمٌ} [البقرة: 173]


Muslim-5764

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி ✅

5764. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை பின் ஸலூலிடம் “முசைக்கா”, “உமைமா” எனப்படும் இரு அடிமைப் பெண்கள் இருந்தனர். அவன் அவ்விருவரையும் நிர்பந்தித்து விபசாரத்தில் ஈடுபடுத்திவந்தான். அவ்விரு (அடிமைப்) பெண்களும் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து) அதைப் பற்றி முறையிட்டனர்.

அப்போதுதான், “உங்கள் பெண்களை விபசாரத்திற்கு நிர்பந்திக்காதீர்கள்” என்று தொடங்கி, “மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” (அல்குர்ஆன்: 24:33) என்பது வரை அல்லாஹ் அருளினான்.

அத்தியாயம்: 54


أَنَّ جَارِيَةً لِعَبْدِ اللهِ بْنِ أُبَيٍّ ابْنِ سَلُولَ يُقَالُ لَهَا: مُسَيْكَةُ، وَأُخْرَى يُقَالُ لَهَا: أُمَيْمَةُ، فَكَانَ يُكْرِهُهُمَا عَلَى الزِّنَا، فَشَكَتَا ذَلِكَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَنْزَلَ اللهُ: {وَلَا تُكْرِهُوا فَتَيَاتِكُمْ عَلَى الْبِغَاءِ} [النور: 33] إِلَى قَوْلِهِ: {غَفُورٌ رَحِيمٌ} [البقرة: 173]


Muslim-5765

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி ✅

பாடம்: 4

“இந்த இணைவைப்பாளர்கள் யாரை(த் தெய்வங்களாக) அழைக்கிறார்களோ அவர்களே கூட தம்முடைய (உண்மையான) இறைவனின் நெருக்கத்தை அடைவதற்கான வழியைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்” (அல்குர்ஆன்: 17:57) எனும் இறைவசனத் தொடர்.

5765. அபூமஃமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “இந்த இணைவைப்பாளர்கள் யாரை(த் தெய்வங்களாக) அழைக்கிறார்களோ அவர்களேகூட தம்முடைய (உண்மையான) இறைவனின் நெருக்கத்தை அடைவதற்கான வழியைத் தேடிக்கொண்டிருக்கின்றனர்” (அல்குர்ஆன்: 17:57) எனும் இறைவசனம் தொடர்பாக(ப் பின்வருமாறு) விளக்கமளித்தார்கள்:

(அன்றைய இணைவைப்பாளர்களால்) வழிபாடு செய்யப்பட்டுவந்த “ஜின்” இனத்தாரில் சிலர், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுவிட்டனர். அவர்களை வழிபட்டுவந்த மக்கள் அவ்வழிபாட்டிலேயே நீடித்துக்கொண்டிருக்க, அந்த “ஜின்” இனத்தாரில் சிலர் இஸ்லாத்தை தழுவிவிட்டனர்.

அத்தியாயம்: 54


{أُولَئِكَ الَّذِينَ يَدْعُونَ يَبْتَغُونَ إِلَى رَبِّهِمُ الْوَسِيلَةَ أَيُّهُمْ أَقْرَبُ} [الإسراء: 57] قَالَ: «كَانَ نَفَرٌ مِنَ الْجِنِّ أَسْلَمُوا، وَكَانُوا يُعْبَدُونَ، فَبَقِيَ الَّذِينَ كَانُوا يَعْبُدُونَ عَلَى عِبَادَتِهِمْ، وَقَدْ أَسْلَمَ النَّفَرُ مِنَ الْجِنِّ»


Muslim-5766

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி ✅

5766. அபூமஃமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“இந்த இணைவைப்பாளர்கள் யாரை(த் தெய்வங்களாக) அழைக்கிறார்களோ அவர்களே கூட தம்முடைய (உண்மையான) இறைவனின் நெருக்கத்தை அடைவதற்கான வழியைத் தேடிக்கொண்டிருக்கின்றனர்” (அல்குர்ஆன்: 17:57) எனும் இறைவசனம் தொடர்பாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) விளக்கமளித்தார்கள்:

மக்களில் சிலர் “ஜின்” இனத்தாரில் சிலரை வழிபட்டுவந்தனர். அப்போது அந்த “ஜின்”கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். மனிதர்கள் தங்களது (ஜின்) வழிபாட்டையே பலமாகப் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் இந்த அல்குர்ஆன்: 17:57 ஆவது இறைவசனம் அருளப்பெற்றது.


மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.


அத்தியாயம்: 54


{أُولَئِكَ الَّذِينَ يَدْعُونَ يَبْتَغُونَ إِلَى رَبِّهِمُ الْوَسِيلَةَ} [الإسراء: 57] قَالَ: ” كَانَ نَفَرٌ مِنَ الْإِنْسِ يَعْبُدُونَ نَفَرًا مِنَ الْجِنِّ، فَأَسْلَمَ النَّفَرُ مِنَ الْجِنِّ وَاسْتَمْسَكَ الْإِنْسُ بِعِبَادَتِهِمْ، فَنَزَلَتْ: {أُولَئِكَ الَّذِينَ يَدْعُونَ يَبْتَغُونَ إِلَى رَبِّهِمُ الْوَسِيلَةَ} [الإسراء: 57]

– وحَدَّثَنِيهِ بِشْرُ بْنُ خَالِدٍ، أَخْبَرَنَا مُحَمَّدٌ يَعْنِي ابْنَ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ بِهَذَا الْإِسْنَادِ


Muslim-5767

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி ✅

5767. அப்துல்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“இந்த இணைவைப்பாளர்கள் யாரை(த் தெய்வங்களாக) அழைக்கிறார்களோ அவர்களேகூட தம்முடைய (உண்மையான) இறைவனின் நெருக்கத்தை அடைவதற்கான வழியைத் தேடிக்கொண்டிருக்கின்றனர்” (அல்குர்ஆன்: 17:57) எனும் இறைவசனம் தொடர்பாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்:

இந்த வசனம் அரபியரில் சிலர் தொடர்பாக அருளப்பெற்றது. அவர்கள் “ஜின்” இனத்தாரில் சிலரை வழிபட்டுக்கொண்டிருந்தனர். ஆனால், அந்த “ஜின்”கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டனர். இதை உணராமல் அந்த (அரபு) மக்கள் அந்த “ஜின்”களையே வழிபட்டுக்கொண்டிருந்தனர். அப்போதுதான் இந்த வசனம் அருளப்பெற்றது.

அத்தியாயம்: 54


{أُولَئِكَ الَّذِينَ يَدْعُونَ يَبْتَغُونَ إِلَى رَبِّهِمُ الْوَسِيلَةَ} [الإسراء: 57] قَالَ: ” نَزَلَتْ فِي نَفَرٍ مِنَ الْعَرَبِ كَانُوا يَعْبُدُونَ نَفَرًا مِنَ الْجِنِّ، فَأَسْلَمَ الْجِنِّيُّونَ وَالْإِنْسُ الَّذِينَ كَانُوا يَعْبُدُونَهُمْ لَا يَشْعُرُونَ، فَنَزَلَتْ: {أُولَئِكَ الَّذِينَ يَدْعُونَ يَبْتَغُونَ إِلَى رَبِّهِمُ الْوَسِيلَةَ} [الإسراء: 57]


Muslim-5768

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி ✅

பாடம்: 5

பராஅத் (அத்தவ்பா), அல்அன்ஃபால், அல்ஹஷ்ர் (9, 8, 59) ஆகிய அத்தியாயங்கள்.

5768. ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “அத்தவ்பா” எனும் (9 ஆவது) அத்தியாயம் தொடர்பாகக் கேட்டேன். அவர்கள் “தவ்பா அத்தியாயமா? அது (நயவஞ்சகர்களை) அம்பலப்படுத்தக்கூடிய அத்தியாயமாகும். அவர்களில் இத்தகையோர் உள்ளனர்; அவர்களில் இத்தகையோர் உள்ளனர் என (நயவஞ்சகர்களிலுள்ள எல்லாப் பிரிவினரையும் இனங்காட்டி) இவ்வத்தியாயம் இறங்கிக் கொண்டேயிருந்தது. எந்த அளவுக்கென்றால், தம்மில் ஒருவரைக்கூட விட்டுவைக்காமல் அனைவர் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுவிட்டது என நயவஞ்சகர்கள் எண்ணினார்கள்” என்று கூறினார்கள்.

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் “அல்அன்ஃபால்” எனும் (8 ஆவது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள் “அது பத்ருப்போர் (பற்றிப்பேசும்) அத்தியாயமாகும்” என்றார்கள்.

நான் “அல்ஹஷ்ர்” எனும் (59 ஆவது) அத்தியாயம்

قُلْتُ لِابْنِ عَبَّاسٍ: سُورَةُ التَّوْبَةِ، قَالَ: آلتَّوْبَةِ قَالَ: «بَلْ هِيَ الْفَاضِحَةُ مَا زَالَتْ تَنْزِلُ، وَمِنْهُمْ وَمِنْهُمْ حَتَّى ظَنُّوا أَنْ لَا يَبْقَى مِنَّا أَحَدٌ، إِلَّا ذُكِرَ فِيهَا»،

قَالَ: قُلْتُ: سُورَةُ الْأَنْفَالِ، قَالَ: «تِلْكَ سُورَةُ بَدْرٍ»

قَالَ: قُلْتُ: فَالْحَشْرُ قَالَ: «نَزَلَتْ فِي بَنِي النَّضِيرِ»


Muslim-5769

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி ✅

பாடம்: 6

மதுவிலக்குச் சட்டம் அருளப்பட்ட விவரம்.

5769. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை, கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி உரை நிகழ்த்தினார்கள். அப்போது அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:

இறைவாழ்த்துக்குப்பின்! கவனத்தில் கொள்ளுங்கள்! மது ஐந்து வகைப் பொருட்களால் தயாரிக்கப்பட்டுவந்த நிலையில் மதுபானத் தடை(ச் சட்டம் நடைமுறைக்கு) வந்தது. தொலி நீக்கப்பட்ட கோதுமை, தொலி நீக்கப்படாத கோதுமை,பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, தேன் ஆகியவையே அந்தப் பொருட்கள் ஆகும். (ஆயினும்,) அறிவுக்குத் திரையிடக்கூடிய அனைத்தும் மதுவாகும்.

மக்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று விஷயங்கள் குறித்துத் தெளிவானதொரு முடிவை நமக்கு எடுத்துரைத்துவிட்டு நம்மைப் பிரிந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என நான் விரும்பியதுண்டு:

خَطَبَ عُمَرُ عَلَى مِنْبَرِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَحَمِدَ اللهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: ” أَمَّا بَعْدُ، أَلَا وَإِنَّ الْخَمْرَ نَزَلَ تَحْرِيمُهَا يَوْمَ نَزَلَ وَهِيَ مِنْ خَمْسَةِ أَشْيَاءَ مِنَ الْحِنْطَةِ، وَالشَّعِيرِ، وَالتَّمْرِ، وَالزَّبِيبِ، وَالْعَسَلِ – وَالْخَمْرُ: مَا خَامَرَ الْعَقْلَ – وَثَلَاثَةُ أَشْيَاءَ، وَدِدْتُ أَيُّهَا النَّاسُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ عَهِدَ إِلَيْنَا فِيهَا الْجَدُّ، وَالْكَلَالَةُ، وَأَبْوَابٌ مِنْ أَبْوَابِ الرِّبَا