Category: முஸ்லிம்

Muslim-5712

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5712. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடியார் பின்விளைவை யோசிக்காமல் ஒரு வார்த்தை பேசிவிடுகிறார். அதன் காரணமாக அவர் கிழக்குக்கும் மேற்குக்கும் இடையிலுள்ள தூரத்தைவிட அதிகமான தூரத்தில் நரகத்தில் போய் விழுகிறார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம்: 53


«إِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ، مَا يَتَبَيَّنُ مَا فِيهَا، يَهْوِي بِهَا فِي النَّارِ، أَبْعَدَ مَا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ»


Muslim-5711

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 7

ஒரே ஒரு வார்த்தைகூட நரகத்தில் தள்ளிவிடும்.

5711. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடியார் (பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) ஒரு வார்த்தை பேசிவிடுகிறார். அதன் காரணமாக அவர் கிழக்குக்கும் மேற்குக்கும் இடையிலான தொலைவைவிட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம்: 53


«إِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ، يَنْزِلُ بِهَا فِي النَّارِ أَبْعَدَ مَا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ»


Muslim-5710

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5710. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறாரோ அவர்(கொண்டிருந்த உள்நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமைநாளில்) விளம்பரப்படுத்துவான்.

யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறாரோ அவரை அல்லாஹ் (மறுமைநாளில்) அம்பலப்படுத்துவான்.

இதை ஜுன்துப் பின் அப்துல்லாஹ் அல்பஜலீ அல்அலக்கீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், “ஜுன்துப் (ரலி) அவர்கள் தவிர வேறு யாரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைக் கூறியதாகத் தெரிவிக்கவில்லை” என்று அறிவிப்பாளர் ஸலமா பின் குஹைல் (ரஹ்) அவர்கள் கூடுதலாக அறிவித்துள்ளார்கள்.

மேற்கண்ட ஹதீஸ் ஜுன்துப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதிலும் அந்தக் கூடுதல் தகவல் இடம்பெற்றுள்ளது.

«مَنْ يُسَمِّعْ يُسَمِّعِ اللهُ بِهِ، وَمَنْ يُرَائِي يُرَائِي اللهُ بِهِ»

– وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا الْمُلَائِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، بِهَذَا الْإِسْنَادِ، وَزَادَ وَلَمْ أَسْمَعْ أَحَدًا غَيْرَهُ يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

– حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَمْرٍو الْأَشْعَثِيُّ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الْوَلِيدِ بْنِ حَرْبٍ – قَالَ سَعِيدٌ: أَظُنُّهُ قَالَ: ابْنُ الْحَارِثِ بْنِ أَبِي مُوسَى – قَالَ: سَمِعْتُ سَلَمَةَ بْنَ كُهَيْلٍ، قَالَ: سَمِعْتُ جُنْدُبًا – وَلَمْ أَسْمَعْ أَحَدًا يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيْرَهُ – يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: بِمِثْلِ حَدِيثِ الثَّوْرِيِّ

وَحَدَّثَنَاهُ ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الصَّدُوقُ الْأَمِينُ الْوَلِيدُ بْنُ حَرْبٍ بِهَذَا الْإِسْنَادِ