Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-8413

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8413. …பள்ளிவாசலின் மேல் புறத்தில் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் நானும் ஏறிச் சென்றேன். அபூஹுரைரா (ரலி) உளூச் செய்தார். (உளூச் செய்து முடித்ததும்) ‘நிச்சயமாக என்னுடைய சமுதாயத்தவர்கள் மறுமை நாளில் உளூவின் சுவடுகளால் முகம், கை கால்கள் ஒளிமயமானவர்களே! என்று அழைக்கப்படுவார்கள். எனவே, உங்களில் விரும்பியவர் தம் ஒளியை அதிகப்படுத்திக் கொள்ளட்டும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதைச் கேட்டிருக்கிறேன்’ என்றார்கள்…

அறிவிப்பவர்: நுஐம் அல்முஜ்மிர் (ரஹ்)

“எனவே, உங்களில் விரும்பியவர் தம் ஒளியை அதிகப்படுத்திக் கொள்ளட்டும்” என்ற வாக்கியம் நபி (ஸல்) அவர்களின் சொல்லா? அல்லது அபூஹுரைரா (ரலி) அவர்களின் சொல்லா? என்பதை நான் அறியவில்லை என்று நுஐம் அல்முஜ்மிர் அவர்கள் (சந்தேகமாகக்) கூறினார்.


أَنَّهُ رَقِيَ إِلَى أَبِي هُرَيْرَةَ عَلَى ظَهْرِ الْمَسْجِدِ وَهُوَ يَتَوَضَّأُ، فَرَفَعَ فِي عَضُدَيْهِ، ثُمَّ أَقْبَلَ عَلَيَّ، فَقَالَ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ أُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ هُمُ الْغُرُّ الْمُحَجَّلُونَ مِنْ آثَارِ الْوُضُوءِ، فَمَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يُطِيلَ غُرَّتَهُ، فَلْيَفْعَلْ»

فَقَالَ نُعَيْمٌ: لَا أَدْرِي قَوْلُهُ: «مَنِ اسْتَطَاعَ أَنْ يُطِيلَ غُرَّتَهُ فَلْيَفْعَلْ» مِنْ قَوْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَوْ مِنْ قَوْلِ أَبِي هُرَيْرَةَ


Musnad-Ahmad-19331

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

19331. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இந்த கழிப்பிடங்கள் (ஷைத்தான்கள்) வருகை தரும் இடமாக உள்ளது. ஆகவே உங்களில் ஒருவர் கழிப்பிடத்திற்குள் நுழைய முற்படும்போது, “அல்லாஹும்ம இன்னீ அஊதுபி(க்)க மினல் கபீஸி வல்கபாயிஸ்” (இறைவா! அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியவற்றைத் தூண்டும் ஆண், பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்)” என்று கூறிக்கொள்ளட்டும்.

அறிவிப்பவர்: ஸைத் பின் அர்கம் (ரலி)

ஸயீத் பின் அபூஅரூபாவிடமிருந்து அறிவிக்கும் அப்துல்வஹ்ஹாப் அவர்கள், “மினல் குபுஸி வல்கபாஇஸ்” என்று அறிவித்துள்ளார்.


إِنَّ هَذِهِ الْحُشُوشَ مُحْتَضَرَةٌ، فَإِذَا أَرَادَ أَحَدُكُمْ أَنْ يَدْخُلَ فَلْيَقُلْ: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخَبِيثِ وَالْخَبَائِثِ “

قَالَ عَبْدُ الْوَهَّابِ: «الْخُبُثُ وَالْخَبَائِثُ»


Musnad-Ahmad-19332

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

19332. இந்த கழிப்பிடங்கள் (ஷைத்தான்கள்) வருகை தரும் இடமாக உள்ளது. ஆகவே உங்களில் ஒருவர் கழிப்பிடத்திற்குள் நுழைய முற்படும்போது, “இறைவா! (அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியற்றைத் தூண்டும்) ஆண் பெண் ஷைத்தானி(ன் தீங்கிலி)ருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறிக்கொள்ளட்டும்.

அறிவிப்பவர்: ஸைத் பின் அர்கம் (ரலி)


إِنَّ هَذِهِ الْحُشُوشَ مُحْتَضَرَةٌ، فَإِذَا دَخَلَ أَحَدُكُمُ الْخَلَاءَ فَلْيَقُلْ: أَعُوذُ بِاللَّهِ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ


Musnad-Ahmad-19286

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

19286. இந்த கழிப்பிடங்கள் (ஷைத்தான்கள்) வருகை தரும் இடமாக உள்ளது. ஆகவே உங்களில் ஒருவர் கழிப்பிடத்திற்குள் நுழைய முற்படும்போது, “இறைவா! (அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியற்றைத் தூண்டும்) ஆண் பெண் ஷைத்தானி(ன் தீங்கிலி)ருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறிக்கொள்ளட்டும்.

அறிவிப்பவர்: ஸைத் பின் அர்கம் (ரலி)


إِنَّ هَذِهِ الْحُشُوشَ مُحْتَضَرَةٌ، فَإِذَا دَخَلَ أَحَدُكُمْ فَلْيَقُلْ: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ


Musnad-Ahmad-13999

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

13999. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழிப்பிடம் செல்லும் போது “அஊது பில்லாஹி மினல் குப்ஸி வல்கபீஸ் அல்லது “வல்கபாயிஸ்” (பொருள்: இறைவா! அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியவற்றைத் தூண்டும் ஆண், பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்) என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

அப்துல்அஸீஸ் அவர்கள் (இந்தப் பிராத்தனையை) இருவகையான வாசகத்திலும் அறிவித்தார் என ஷுஅபா அவர்கள் கூறினார்.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَتَى الْخَلَاءَ، قَالَ: «أَعُوذُ بِاللَّهِ مِنَ الْخُبْثِ، وَالْخَبِيثِ – أَوِ الْخَبَائِثِ -» ، قَالَ شُعْبَةُ: «وَقَدْ قَالَهُمَا جَمِيعًا»


Musnad-Ahmad-11983

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

11983. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழிவறைக்குள் நுழையும் போது “அல்லாஹும்ம இன்னீ அஊதுபி(க்)க மினல் குப்ஸி வல்கபாயிஸ்” (பொருள்: இறைவா! அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியவற்றைத் தூண்டும் ஆண், பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்) என்று கூறுவார்கள்.


كَانَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا دَخَلَ الْخَلَاءَ قَالَ: «أَعُوذُ بِاللَّهِ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ»


Musnad-Ahmad-11947

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

11947. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழிவறைக்குள் நுழையும் போது “அல்லாஹும்ம இன்னீ அஊதுபி(க்)க மினல் குப்ஸி வல்கபாயிஸ்” (பொருள்: இறைவா! அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியவற்றைத் தூண்டும் ஆண், பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்) என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا دَخَلَ الْخَلَاءَ قَالَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ»


Musnad-Ahmad-21282

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

21282. (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்தார். அப்போது அவரிடம், “உமக்கு எப்போதாவது காய்ச்சல் வந்ததுண்டா? காய்ச்சல் என்றால் தோலுக்கும் சதைக்கும் இடையில் ஏற்படும் சூடு” என்று நபி (ஸல்) கூறினார்கள். அதற்கவர், இது போன்ற வலி எனக்கு ஏற்பட்டதில்லை என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இறைநம்பிக்கையாளரின் நிலை, இளம் தளிர்ப் பயிருக்கு ஒப்பானதாகும். அது சில நேரம் சிவந்துவிடுகிறது. சில நேரம் மஞ்சனித்து (வெளுத்து) விடுகிறது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபைய்யு பின் கஅப் (ரலி)


أَنَّهُ دَخَلَ رَجُلٌ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَتَى عَهْدُكَ بِأُمِّ مِلْدَمٍ؟» وَهُوَ حَرٌّ بَيْنَ الْجِلْدِ وَاللَّحْمِ، قَالَ: إِنَّ ذَلِكَ لَوَجَعٌ مَا أَصَابَنِي قَطُّ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَثَلُ الْمُؤْمِنِ مَثَلُ الْخَامَةِ تَحْمَرُّ مَرَّةً، وَتَصْفَرُّ أُخْرَى»


Musnad-Ahmad-8395

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8395. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்தார். அப்போது அவரிடம், “உமக்கு காய்ச்சல் வந்ததுண்டா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர், காய்ச்சல் என்றால் என்ன? என்று (திருப்பிக்) கேட்டார். அதற்கவர்கள், “தோலுக்கும் சதைக்கும் இடையில் ஏற்படும் சூடு” என்று கூறினார்கள். அந்த கிராமவாசி இது போன்று எனக்கு ஏற்பட்டதில்லை என்று கூறினார். பிறகு நபி (ஸல்) அவர்கள், அவரிடம் “உமக்கு தலைவலி(யாவது) ஏற்பட்டதுண்டா? என்று கேட்டார்கள். அதற்கவர், தலைவலி என்றால் என்ன? என்று (திருப்பிக்) கேட்டார். அதற்கவர்கள், “மனிதனின் தலையில் இருக்கும் நரம்புகள் படபடப்பதால் ஏற்படும் வலி” என்று கூறினார்கள். அதற்கு அந்த கிராமவாசி, “இது போன்று எனக்கு ஏற்பட்டதில்லை” என்று கூறினார். பிறகு அவர் திரும்பிச் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நரகவாசிகளில் ஒரு மனிதரைக் காண விருப்பமுள்ளவர்கள் இவரைப் பார்த்துக் கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.


دَخَلَ أَعْرَابِيٌّ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَخَذَتْكَ أُمُّ مِلْدَمٍ قَطُّ؟» قَالَ: وَمَا أُمُّ مِلْدَمٍ؟ قَالَ: «حَرٌّ يَكُونُ بَيْنَ الْجِلْدِ وَاللَّحْمِ» ، قَالَ: مَا وَجَدْتُ هَذَا قَطُّ، قَالَ: «فَهَلْ أَخَذَكَ الصُّدَاعُ قَطُّ؟» قَالَ: وَمَا الصُّدَاعُ؟ قَالَ: «عُرُوقٌ تَضْرِبُ عَلَى الْإِنْسَانِ فِي رَأْسِهِ» ، قَالَ: مَا وَجَدْتُ هَذَا قَطُّ، قَالَ: فَلَمَّا وَلَّى، قَالَ: «مَنْ أَحَبَّ أَنْ يَنْظُرَ إِلَى رَجُلٍ مِنْ أَهْلِ النَّارِ فَلْيَنْظُرْ إِلَى هَذَا»


Musnad-Ahmad-8794

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8794. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு தடவை) ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களைக் கடந்து சென்றார். அவரின் (உடல்) ஆரோக்கியத்தையும், பலத்தையும் கண்டு நபி (ஸல்) அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

எனவே அவரை கூப்பிட்டு அவரிடம், “எப்போதாவது உமக்கு உம்மு மில்தம் ஏற்பட்டுள்ளதா? என்று கேட்டார்கள். அதற்கவர் உம்மு மில்தம் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் காய்ச்சல் என்று பதிலளித்தார்கள். அதற்கவர், காய்ச்சல் என்றால் என்ன? என்று (திருப்பிக்) கேட்டார். அதற்கவர்கள், “தோலுக்கும் எழும்புக்கும் இடையில் ஏற்படும் சூடு” என்று கூறினார்கள். அந்த கிராமவாசி இது போன்று எனக்கு ஏற்பட்டதில்லை என்று கூறினார். பிறகு நபி (ஸல்) அவர்கள், அவரிடம் “உமக்கு எப்போதாவது தலைவலி(யாவது) ஏற்பட்டதுண்டா? என்று கேட்டார்கள். அதற்கவர், தலைவலி என்றால் என்ன? என்று (திருப்பிக்) கேட்டார். அதற்கவர்கள், “மனிதனின் இரு நெற்றிப்பொட்டிலும், தலையிலும் ஏற்படும் வலி” என்று கூறினார்கள். அதற்கு அந்த கிராமவாசி, “இது போன்று எனக்கு ஏற்பட்டதில்லை” என்று கூறினார். பிறகு அவர் திரும்பிச் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நரகவாசிகளில் ஒரு மனிதரைக் காண விருப்பமுள்ளவர்கள் இவரைப் பார்த்துக் கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.


مَرَّ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْرَابِيٌّ أَعْجَبَهُ صِحَّتُهُ وَجَلَدُهُ، قَالَ: فَدَعَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَتَى حَسَسْتَ أُمَّ مِلْدَمٍ؟» قَالَ: وَأَيُّ شَيْءٍ أُمُّ مِلْدَمٍ؟ قَالَ: «الْحُمَّى» ، قَالَ: وَأَيُّ شَيْءٍ الْحُمَّى؟ قَالَ: «سَخَنَةٌ تَكُونُ بَيْنَ الْجِلْدِ وَالْعِظَامِ» ، قَالَ: مَا بِذَاكَ لِي عَهْدٌ، قَالَ: «فَمَتَى حَسَسْتَ بِالصُّدَاعِ؟» قَالَ: وَأَيُّ شَيْءٍ الصُّدَاعُ؟ قَالَ: «ضَرَبَانٌ يَكُونُ فِي الصُّدْغَيْنِ، وَالرَّأْسِ» ، قَالَ: مَا لِي بِذَاكَ عَهْدٌ، قَالَ: فَلَمَّا قَفَّى، أَوْ وَلَّى الْأَعْرَابِيُّ، قَالَ: «مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَى رَجُلٍ مِنْ أَهْلِ النَّارِ، فَلْيَنْظُرْ إِلَيْهِ»


Next Page » « Previous Page