Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-1893

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1893. என்னுடைய தாயார் தன் மீது கடமையாக இருந்த ஒரு நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கு முன் இறந்துவிட்டார். அது பற்றிய மார்க்கத்தீர்ப்பு என்ன? என்று ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், அதை அவரின் சார்பாக நீர் நிறைவேற்றுவீராக! என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنْ نَذْرٍ كَانَ عَلَى أُمِّهِ تُوُفِّيَتْ قَبْلَ أَنْ تَقْضِيَهُ؟ فَقَالَ: «اقْضِهِ عَنْهَا»


Musnad-Ahmad-23846

ஹதீஸின் தரம்: Pending

23846. ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து “என்னுடைய தாயார் அவர் மீது ஒரு நேர்ச்சை கடமையாக இருந்த நிலையில் (அதை நிறைவேற்றாமல்) இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் அடிமையை உரிமைவிட்டால் அது செல்லுபடியாகுமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (ஆம்) அவர் சார்பாக நீ அடிமையை உரிமை விடு! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا نَذْرٌ أَفَيُجْزِئُ عَنْهَا أَنْ أُعْتِقَ عَنْهَا؟ قَالَ: «أَعْتِقْ عَنْ أُمِّكَ»


Musnad-Ahmad-23845

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

23845. ஸஅது பின் உபாதா (ரலி) அவர்களின் தாய் இறந்து விட்டார். எனவே அவர், அல்லாஹ்வின் தூதரே! என் தாய் இறந்து விட்டார். அவர் சார்பில் நான் தர்மம் செய்யட்டுமா?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றனர். ‘எது சிறந்த தர்மம்?’ என்று கேட்டார். ‘தண்ணீர் வழங்குதல்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மதீனாவில் இருக்கும் இந்த தண்ணீர் பிடிக்கும் இடம் ஸஅது பின் உபாதா (ரலி) யின் குடும்பத்திற்கு சொந்தமானதாகும்.

அறிவிப்பவர் : ஹஸன் பஸரீ (ரஹ்)

அறிவிப்பாளர் ஷுஃபா (ரஹ்) அவர்கள் கூறினார்:

நான் கத்தாதா (ரஹ்) அவர்களிடம், தண்ணீர் பிடிக்கும் இடத்தைப்பற்றி யார் கூறியது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என்று பதிலளித்தார்.


أَنَّ أُمَّهُ مَاتَتْ، فَقَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أُمِّي مَاتَتْ أَفَأَتَصَدَّقُ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ» قَالَ: فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟ قَالَ: «سَقْيُ الْمَاءِ» قَالَ: فَتِلْكَ سِقَايَةُ آلِ سَعْدٍ بِالْمَدِينَةِ ”

قَالَ شُعْبَةُ: فَقُلْتُ لِقَتَادَةَ: مَنْ يَقُولُ تِلْكَ سِقَايَةُ آلِ سَعْدٍ قَالَ: الْحَسَنُ


Musnad-Ahmad-22459

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

22459. ஸஅது பின் உபாதா (ரலி) அவர்களின் தாய் இறந்து விட்டார். எனவே அவர், அல்லாஹ்வின் தூதரே! என் தாய் இறந்து விட்டார். அவர் சார்பில் நான் தர்மம் செய்யட்டுமா?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றனர். ‘எது சிறந்த தர்மம்?’ என்று கேட்டார். ‘தண்ணீர் வழங்குதல்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மதீனாவில் இருக்கும் இந்த கிணறு ஸஅது பின் உபாதா (ரலி) ஏற்பாடு செய்ததாகும்.

அறிவிப்பவர் : ஹஸன் பஸரீ (ரஹ்)


أَنَّ أُمَّهُ مَاتَتْ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أُمِّي مَاتَتْ فَأَتَصَدَّقُ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ» . قَالَ: فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟ قَالَ: «سَقْيُ الْمَاءِ» قَالَ: فَتِلْكَ سِقَايَةُ آلِ سَعْدٍ بِالْمَدِينَةِ


Musnad-Ahmad-22458

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

22458. ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு தடவை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றபோது நான் அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! நான் செய்யவேண்டிய ஒரு தர்மத்தை பற்றி எனக்கு அறிவியுங்கள்! என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (பிறருக்கு) தண்ணீர் வழங்குவாயாக! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஹஸன் பஸரீ (ரஹ்)


مَرَّ بِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ دُلَّنِي عَلَى صَدَقَةٍ. قَالَ: «اسْقِ الْمَاءَ»


Musnad-Ahmad-16969

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

16969. ஃகுளைஃப் பின் ஹாரிஸ் (ரலி) அவர்களின் மரணவேளையில் அவர்களை சந்தித்த என்னுடைய சில ஆசிரியர்கள் கூறியதாவது:

ஃகுளைஃப் பின் ஹாரிஸ் (ரலி) அவர்களுக்கு மரணவேதனை கடுமையானபோது அவர்கள், உங்களில் யாராவது யாஸீன் அத்தியாயத்தை (இப்போது) ஓதமுடியுமா? என்று கேட்டார்கள். அப்போது ஸாலிஹ் பின் ஷுரைஹ் (ரஹ்) அதை ஓதினார். நாற்பது வசனங்களை ஓதி முடித்திருந்தபோது ஃகுளைஃப் பின் ஹாரிஸ் (ரலி) அவர்களின் உயிர் கைப்பற்றப்பட்டது.

அதனால் தான், மரணத்தை நெருங்கியவர்களிடம் யாஸீன் அத்தியாயம் ஓதப்பட்டால் அவரின் மரணவேதனை இலேசாக்கப்படும் என அந்த ஆசிரியர்கள் கூறினர்.

இப்னு மஃபத் மரணதருவாயில் இருக்கும் போது, அவரிடத்தில் ஈஸா பின் முஃதமிர் யாஸீன் அத்தியாயத்தை ஓதினார்.

அறிவிப்பவர் : ஸஃப்வான் பின் அம்ர் (ரஹ்)


أَنَّهُمْ حَضَرُوا غُضَيْفَ بْنَ الْحَارِثِ الثُّمَالِيَّ، حِينَ اشْتَدَّ سَوْقُهُ، فَقَالَ: «هَلْ مِنْكُمْ أَحَدٌ يَقْرَأُ يس؟» قَالَ: فَقَرَأَهَا صَالِحُ بْنُ شُرَيْحٍ السَّكُونِيُّ، فَلَمَّا بَلَغَ أَرْبَعِينَ مِنْهَا قُبِضَ، قَالَ: وَكَانَ الْمَشْيَخَةُ يَقُولُونَ: إِذَا قُرِئَتْ عِنْدَ الْمَيِّتِ خُفِّفَ عَنْهُ بِهَا قَالَ صَفْوَانُ: «وَقَرَأَهَا عِيسَى بْنُ الْمُعْتَمِرِ عِنْدَ ابْنِ مَعْبَدٍ»


Musnad-Ahmad-20314

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

20314. உங்களில் மரணவேளை நெருங்கியவர்களுக்கு யாஸீன் (36-வது)  அத்தியாயத்தை ஓதுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : மஃகில் பின் யஸார் (ரலி)


«اقْرَءُوهَا عَلَى مَوْتَاكُمْ» ،

قَالَ عَلِيُّ بْنُ إِسْحَاقَ فِي حَدِيثِهِ: يَعْنِي يس


Musnad-Ahmad-20301

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

20301. உங்களில் மரணவேளை நெருங்கியவர்களுக்கு யாஸீன் (36-வது)  அத்தியாயத்தை ஓதுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : மஃகில் பின் யஸார் (ரலி)


«اقْرَءُوهَا عَلَى مَوْتَاكُمْ»

يَعْنِي يس


Musnad-Ahmad-27086

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

27086.


لَمَّا أُصِيبَ جَعْفَرٌ وَأَصْحَابُهُ دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ دَبَغْتُ أَرْبَعِينَ مَنِيئَةً، وَعَجَنْتُ عَجِينِي، وَغَسَّلْتُ بَنِيَّ وَدَهَنْتُهُمْ وَنَظَّفْتُهُمْ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ائْتِينِي بِبَنِي جَعْفَرٍ» ، قَالَتْ: فَأَتَيْتُهُ بِهِمْ فَشَمَّهُمْ وَذَرَفَتْ عَيْنَاهُ، فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، بِأَبِي أَنْتَ وَأُمِّي، مَا يُبْكِيكَ؟ أَبَلَغَكَ عَنْ جَعْفَرٍ وَأَصْحَابِهِ شَيْءٌ؟ قَالَ: «نَعَمْ، أُصِيبُوا هَذَا الْيَوْمَ» ، قَالَتْ: فَقُمْتُ أَصِيحُ وَاجْتَمَعَ إِلَيَّ النِّسَاءُ، وَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى أَهْلِهِ فَقَالَ: «لَا تُغْفِلُوا آلَ جَعْفَرٍ مِنْ أَنْ تَصْنَعُوا لَهُمْ طَعَامًا فَإِنَّهُمْ قَدْ شُغِلُوا بِأَمْرِ صَاحِبِهِمْ»


Musnad-Ahmad-1751

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1751. ஜஃபர் பின் அபூதாலிப் (ரலி அவர்கள் (மூத்தா) போரில் கொல்லப்பட்டு இறந்த செய்தி வந்தபோது, ஜஃபரின் வீட்டினருக்கு கவலை தரும் செய்தி வந்து விட்டதால் அவரது குடும்பத்தாருக்காக உணவு செய்து கொடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி)


لَمَّا جَاءَ نَعْيُ جَعْفَرٍ حِينَ قُتِلَ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اصْنَعُوا لِآلِ جَعْفَرٍ طَعَامًا، فَقَدْ أَتَاهُمْ أمْرٌ يَشْغَلُهُمْ – أَوْ أتَاهُمْ مَا يَشْغَلُهُمْ»


Next Page » « Previous Page