Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-19259

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

19259. (நபி (ஸல்) அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜின்போது மக்களுக்கு உரையாற்றிய நேரத்தில்) என்னிடம் ‘மக்களை அமைதியுடன் செவி தாழ்த்திக் கேட்கும்படி செய்வீராக!’ என்று கூறினார்கள். (மக்கள் அமைதியுற்ற பின்னர்) ‘எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர் கழுத்தை ஒருவர் வெட்டிக் கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறி விடவேண்டாம்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)


قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْتَنْصِتِ النَّاسَ، لَا تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ»


Musnad-Ahmad-19217

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

19217. நபி (ஸல்) அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜின்போது (மக்களுக்கு உரையாற்றிய நேரத்தில்) என்னிடம் ‘ஜரீரே! மக்களை அமைதியுடன் செவி தாழ்த்திக் கேட்கும்படி செய்வீராக!’ என்று கூறினார்கள். (மக்கள் அமைதியுற்ற பின்னர்) ‘எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர் கழுத்தை ஒருவர் வெட்டிக் கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறி விடவேண்டாம்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي حَجَّةِ الْوَدَاعِ لِجَرِيرٍ: «اسْتَنْصِتِ النَّاسَ» ، وَقَالَ: قَالَ: «لَا تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ»


Musnad-Ahmad-19167

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

19167. நபி (ஸல்) அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜின்போது (மக்களுக்கு உரையாற்றிய நேரத்தில்) என்னிடம் ‘ஜரீரே! மக்களை அமைதியுடன் செவி தாழ்த்திக் கேட்கும்படி செய்வீராக!’ என்று கூறினார்கள். (மக்கள் அமைதியுற்ற பின்னர்) ‘எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர் கழுத்தை ஒருவர் வெட்டிக் கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறி விடவேண்டாம்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)


قَالَ فِي حَجَّةِ الْوَدَاعِ: «يَا جَرِيرُ، اسْتَنْصِتِ النَّاسَ»

ثُمَّ قَالَ فِي خُطْبَتِهِ: «لَا تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ»


Musnad-Ahmad-19260

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

19260. கைஸ் பின் அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜின்போது (மக்களுக்கு உரையாற்றிய நேரத்தில்) என்னிடம் ‘மக்களை அமைதியுடன் செவி தாழ்த்திக் கேட்கும்படி செய்வீராக!’ என்று கூறினார்கள். (மக்கள் அமைதியுற்ற பின்னர்) ‘எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர் கழுத்தை ஒருவர் வெட்டிக் கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறி விடவேண்டாம்’ என்று கூறினார்கள்-

என்று ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாக நமக்கு தகவல் கிடைத்தது.


قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْتَنْصِتِ النَّاسَ» ، ثُمَّ قَالَ عِنْدَ ذَلِكَ: «لَا أَعْرِفَنَّ بَعْدَمَا أَرَى تَرْجِعُونَ بَعْدِي كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ»


Musnad-Ahmad-20449

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

20449.


«أَلَا لَا تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ» ، وَقَالَ ابْنُ سِيرِينَ: ضُلَّالًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ


Musnad-Ahmad-12981

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12981. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவரது கையில் பேரீத்தங்கன்று இருக்கும் நிலையில் கியாமத் நாள் வந்துவிட்டால் அதை நட்டிவைப்பதற்கு அவரால் முடிந்த பட்சத்தில் அவர் நட்டுவைத்துவிடட்டும்…

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


«إِنْ قَامَتِ السَّاعَةُ وَبِيَدِ أَحَدِكُمْ فَسِيلَةٌ، فَإِنْ اسْتَطَاعَ أَنْ لَا يَقُومَ حَتَّى يَغْرِسَهَا فَلْيَفْعَلْ»


Musnad-Ahmad-12902

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12902. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவரது கையில் பேரீத்தங்கன்று இருக்கும் நிலையில் கியாமத் நாள் வந்துவிட்டால் அதை நட்டிவைப்பதற்கு அவரால் முடிந்த பட்சத்தில் அவர் நட்டுவைத்துவிடட்டும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


«إِنْ قَامَتْ عَلَى أَحَدِكُمُ الْقِيَامَةُ، وَفِي يَدِهِ فَسِيلَةٌ فَلْيَغْرِسْهَا»


Musnad-Ahmad-21142

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

21142. நபி (ஸல்) அவர்கள் (மூன்று ரக்அத்) வித்ர்-ஒற்றைப்படைத் தொழுகையில் (முதல் ரக்அத்தில்) ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா என்ற திருக்குர்ஆனின் 87 வது அத்தியாயத்தையும், (இரண்டாவது ரக்அத்தில்) குல் யாஅய்யுஹல் காஃபிரூன் என்ற 109 வது அத்தியாயத்தையும், (மூன்றாவது  ரக்அத்தில்) குல் ஹுவல்லாஹு அஹத் என்ற 112 வது அத்தியாயத்தையும் ஓதுபவர்களாக இருந்தார்கள்.

ஸலாம் கொடுத்து முடித்ததும் “ஸுப்ஹானல் மலிக்குல் குத்தூஸ்” என்று மூன்று முறை சொல்வார்கள்.

அறிவிப்பவர்: உபை பின் கஅப் (ரலி)


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الْوَتْرِ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، فَإِذَا سَلَّمَ قَالَ: «سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ» ثَلَاثَ مَرَّاتٍ


Next Page » « Previous Page