5326. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மீசையை எடுத்துவிடுங்கள், தாடியை விட்டுவிடுங்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
«خُذُوا مِنْ هَذَا وَدَعُوا هَذَا»
يَعْنِي: شَارِبَهُ الْأَعْلَى، يَأْخُذُ مِنْهُ، يَعْنِي الْعَنْفَقَةَ
Musnad-Ahmad
5326. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மீசையை எடுத்துவிடுங்கள், தாடியை விட்டுவிடுங்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
«خُذُوا مِنْ هَذَا وَدَعُوا هَذَا»
يَعْنِي: شَارِبَهُ الْأَعْلَى، يَأْخُذُ مِنْهُ، يَعْنِي الْعَنْفَقَةَ
5138. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தாடியை வளர்க்குமாறும், மீசையை ஒட்ட நறுக்குமாறும் கட்டளையிட்டார்கள்.
«أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُعْفَى اللِّحَى، وَأَنْ تُجَزَّ الشَّوَارِبُ»
5135. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தாடியை வளரவிடுங்கள், மீசையை ஒட்ட நறுக்குங்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
«أَعْفُوا اللِّحَى، وَحُفُّوا الشَّوَارِبَ»
4654. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மீசையை ஒட்ட நறுக்குங்கள். தாடியை வளரவிடுங்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
«أَحْفُوا الشَّوَارِبَ، وَأَعْفُوا اللِّحَى»
22283. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதிர்ந்த வயதுடைய அன்சாரிகள் சிலரைக் கடந்து சென்றார்கள். அவர்களின் தாடிகள் வெண்மையாக இருந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள், அன்சாரி கூட்டத்தாரே! (உங்கள் தாடிகளை) சிவப்பு நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் வைத்துக் கொள்ளுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! வேதமுடையவர்கள் முழுக்கால் சட்டை அணிகிறார்கள். வேட்டி அணிவதில்லை என்று நான் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் முழுக்கால் சட்டையும் வேட்டியும் அணியுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள்.
நான், அல்லாஹ்வின் தூதரே! வேதமுடையவர்கள் காலுறை அணிகிறார்கள். காலணி அணிவதில்லை என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீங்கள் காலுறையும் காலணியும் அணியுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள்.
நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! வேதமுடையவர்கள் தங்களது தாடிகளை (ஒட்ட) கத்தரித்துக் கொள்கிறார்கள். மீசையை வளர விடுகிறார்கள் என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்களது மீசைகளை நீங்கள் (ஒட்ட) கத்தரியுங்கள். தாடிகளை வளர விடுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)
خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مَشْيَخَةٍ مِنَ الْأَنْصَارٍ بِيضٌ لِحَاهُمْ فَقَالَ: «يَا مَعْشَرَ الْأَنْصَارِ حَمِّرُوا وَصَفِّرُوا، وَخَالِفُوا أَهْلَ الْكِتَابِ» . قَالَ: فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَهْلَ الْكِتَابِ يَتَسَرْوَلَونَ وَلْا يَأْتَزِرُونَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَسَرْوَلُوا وَائْتَزِرُوا وَخَالِفُوا أَهْلَ الْكِتَابِ» . قَالَ: فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَهْلَ الْكِتَابِ يَتَخَفَّفُونَ وَلَا يَنْتَعِلُونَ. قَالَ: فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَتَخَفَّفُوا وَانْتَعِلُوا وَخَالِفُوا أَهْلَ الْكِتَابِ» . قَالَ: فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَهْلَ الْكِتَابِ يَقُصُّونَ عَثَانِينَهُمْ وَيُوَفِّرُونَ سِبَالَهُمْ. قَالَ: فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قُصُّوا سِبَالَكُمْ وَوَفِّرُوا عَثَانِينَكُمْ وَخَالِفُوا أَهْلَ الْكِتَابِ»
24564. ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நபியவர்கள் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கும் போது என்னிடத்தில் வருபவர்களாக இருந்தார்கள். எந்த அளவிற்கென்றால் என்னுடைய அறையின் கதவில் சாய்ந்து இருந்து கொள்வார்கள். நான் என்னுடைய அறையில் இருந்தவளாக அவர்களின் தலையை கழுவி விடுவேண். நபியவர்களின் ஏனைய உடல் பகுதி பள்ளியிலே இருக்கும்.
«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْتِينِي وَهُوَ مُعْتَكِفٌ فِي الْمَسْجِدِ حَتَّى يَتَّكِئَ عَلَى بَابِ حُجْرَتِي، فَأَغْسِلُ رَأْسَهُ، وَأَنَا فِي حُجْرَتِي، وَسَائِرُ جَسَدِهِ فِي الْمَسْجِدَ»
27542. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அல்கஹ்ஃப்” எனும் (18ஆவது) அத்தியாயத்தின் பத்து வசனங்களை மனனம் செய்தவர் (பெருங்குழப்பவாதியான) தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டு பாதுகாக்கப்படுவார்.
அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)
அறிவிப்பாளர் ஹம்மாம் கூறியதாவது:
ஆரம்பத்தில் கதாதா (ரஹ்) அவர்கள், ஸாலிம் பின் அபுல் ஜஃத் வழியாக அறிவிக்கும் போது “அல்கஹ்ஃப் அத்தியாயத்தின் ஆரம்ப பத்து வசனங்கள்” என்றே அறிவித்தார். பின்பு , அறிவிப்பாளர் அப்துஸ் ஸமத் போன்று அல்கஹ்ஃப் அத்தியாயத்தின் பத்து வசனங்கள்” என்று அறிவித்தார்.
كَانَ قَتَادَةُ يَقُصُّ بِهِ عَلَيْنَا قَالَ: حَدَّثَنَا سَالِمُ بْنُ أَبِي الْجَعْدِ الْغَطَفَانِيُّ، عَنْ حَدِيثِ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ الْيَعْمُرِيِّ، عَنْ حَدِيثِ أَبِي الدَّرْدَاءِ، يَرْوِيهِ عَنْ نَبِيِّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ مِثْلَهُ ثُمَّ رَجَعَ إِلَى حَدِيثِ عَبْدِ الصَّمَدِ، قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ سَالِمٍ، عَنْ حَدِيثِ مَعْدَانَ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، يَرْوِيهِ عَنْ نَبِيِّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: مَنْ حَفِظَ عَشْرَ آيَاتٍ مِنْ سُورَةِ الْكَهْفِ
27541. ஹதீஸ் எண்-27540 இல் வரும் செய்தி வேறு அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
حَدَّثَنَا حُسَيْنٌ، فِي تَفْسِيرِ شَيْبَانَ عَنْ قَتَادَةَ، قَالَ: ثَنَا سَالِمُ بْنُ أَبِي الْجَعْدِ، عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، فَذَكَرَ مِثْلَهُ
27540. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அல்கஹ்ஃப்” எனும் (18ஆவது) அத்தியாயத்தின் ஆரம்பப் பத்து வசனங்களை மனனம் செய்திருப்பவர் (பெருங்குழப்பவாதியான) தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டு பாதுகாக்கப்படுவார்.
அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)
«مَنْ حَفِظَ عَشْرَ آيَاتٍ مِنْ أَوَّلِ سُورَةِ الْكَهْفِ عُصِمَ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ»
27516. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அல்கஹ்ஃப்” எனும் (18ஆவது) அத்தியாயத்தின் இறுதிப் பத்து வசனங்களை ஓதுபவர் (பெருங்குழப்பவாதியான) தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டு பாதுகாக்கப்படுவார்.
அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)
ஹஜ்ஜாஜின் அறிவிப்பில் வார்த்தையில் சிறிது மாற்றமாக வந்துள்ளது. (ஆனால் பொருள் ஒன்றே)
«مَنْ قَرَأَ عَشْرَ آيَاتٍ مِنْ آخِرِ الْكَهْفِ، عُصِمَ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ»
قَالَ حَجَّاجٌ: «مَنْ قَرَأَ الْعَشْرَ الْأَوَاخِرَ مِنْ سُورَةِ الْكَهْفِ»
சமீப விமர்சனங்கள்