ஹதீஸின் தரம்: விபரம் கீழே
21306. அபுல்ஆலியா அல்பர்ராஃ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை பஸராவின் ஆளுநராக இருந்த) உபைதுல்லாஹ் பின் ஸியாத், தொழுகையை (உரிய நேரத்தில்) தொழாமல் தாமதப்படுத்தினார். நான், அப்துல்லாஹ் பின் ஸாமித் (ரஹ்) அவர்களிடம், ஸியாத் செய்தது பற்றி கேட்டேன். அப்போது அவர்கள் என் தொடையில் ஓர் அடி அடித்து விட்டு கூறியதாவது: நான் என் நண்பரான அபூதர் (ரலி) அவர்களிடம் (தொழுகையை தாமதப்படுத்தம் தலைவரகள் பற்றி) கேட்டேன்.
அதற்கவர்கள், என் தொடையில் அடித்து விட்டு, நான் என் நண்பரான-நபி (ஸல்) அவர்களிடம் இதுப் பற்றி கேட்டேன். அப்போது அவர்கள், “தொழுகையை அதன் உரிய நேரத்தில் (தனியாக) தொழுதுக் கொள்வீராக! பிறகு (தாமதப்படுத்தும்) அவர்களுடன் நீர் தொழுகையை அடைந்துக் கொண்டால் அப்போதும் அவர்களுடன் இணைந்து தொழுதுக் கொள்வீராக. (ஆனால் அந்த நேரத்தில்) நான் தொழுது விட்டேன். ஆகவே தொழமாட்டேன் என்று கூறாதீர்” என்று சொன்னார்கள் என்று கூறினார்.
أَخَّرَ عُبَيْدُ اللَّهِ بْنُ زِيَادٍ الصَّلَاةَ، فَسَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ الصَّامِتِ، فَضَرَبَ فَخِذِي، قَالَ: سَأَلَتُ خَلِيلِي أَبَا ذَرٍّ، فَضَرَبَ فَخِذِي، وَقَالَ: سَأَلْتُ خَلِيلِي يَعْنِي النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: ” صَلِّ لِمِيقَاتِهَا، فَإِنْ أَدْرَكْتَ فَصَلِّ مَعَهُمْ، وَلَا تَقُولَنَّ: إِنِّي قَدْ صَلَّيْتُ فَلَا أُصَلِّي
சமீப விமர்சனங்கள்