Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-27438

ஹதீஸின் தரம்: More Info

27438. அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் சுபைஆ பின்த் ஹாரிஸ் அல் அஸ்லமிய்யா (ரலி) அவர்களிடம் சென்று அவர்கள் விசயம் பற்றி ( அதாவது இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சுபைஆ மார்க்கத்தீர்ப்பு கேட்டது பற்றியும், அதற்கு அவர்கள் அளித்த பதில் பற்றியும்) கேட்டேன்.

அதற்கு சுபைஆ பின்த் ஹாரிஸ் அல்அஸ்லமிய்யா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நான் ‘பனூ ஆமிர் இப்னு லுஅய்’ குலத்தைச் சேர்ந்த ஸஅத் இப்னு கவ்லா (ரலி) அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தேன். (விடைபெறும் ஹஜ்ஜின் போது) ஸஅத் (ரலி) இறந்துவிட்டார்கள். அப்போது ‘நான்’ கர்ப்பமுற்றிருந்தேன். ஸஅத்  (ரலி) அவர்கள் இறந்து இரண்டு மாதம் தான் ஆனது; (அதற்குள்) நான் பிரசவித்துவிட்டேன்.

மேலும் கூறினார்கள்:

( நான் உதிரப் போக்கிலிருந்து சுத்தமானபோது) பனூ அப்தித் தார் குலத்தில் ஒருவரான ‘அபுஸ் ஸனாபில் இப்னு பஃகக் (ரலி) என்னை பெண் பேச விருப்பம் தெரிவித்தார்.

அவர் என்னிடம் பெண்பேச வரும் போது நான் மருதாணியிட்டு, அலங்கரித்துக் கொண்டேன். அப்போது, அவர், சுபைஆ என்ன விருப்பம் என்று கேட்டார். நான் (மறு)மணம் செய்ய விரும்புகிறேன் என்று கூறினேன். அதற்கு அவர் அல்லாஹ்வின் மீதாணையாக! (கணவன் இறந்த ஒரு பெண் அவனுடைய இறப்புக்குப் பின் இருக்க வேண்டிய ‘இத்தா’ காலமாகிய) நான்கு மாதம் பத்து

دَخَلْتُ عَلَى سُبَيْعَةَ بِنْتِ أَبِي بَرْزَةَ الْأَسْلَمِيَّةِ، فَسَأَلْتُهَا عَنْ أَمْرِهَا فَقَالَتْ: كُنْتُ عِنْدَ سَعْدِ ابْنِ خَوْلَةَ فَتُوُفِّيَ عَنِّي فَلَمْ أَمْكُثْ إِلَّا شَهْرَيْنِ حَتَّى وَضَعْتُ قَالَتْ: فَخَطَبَنِي أَبُو السَّنَابِلِ بْنُ بَعْكَكٍ أَخُو بَنِي عَبْدِ الدَّارِ فَتَهَيَّأْتُ لِلنِّكَاحِ قَالَتْ: فَدَخَلَ عَلَيَّ حَمْوِي وَقَدِ اخْتَضَبْتُ وَتَهَيَّأْتُ فَقَالَ: مَاذَا تُرِيدِينَ يَا سُبَيْعَةُ قَالَتْ: فَقُلْتُ: أُرِيدُ أَنْ أَتَزَوَّجَ قَالَ: وَاللَّهِ مَا لَكِ مِنْ زَوْجٍ حَتَّى تَعْتَدِّينَ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا، قَالَتْ فَجِئْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِي: «قَدْ حَلَلْتِ فَتَزَوَّجِي»


Musnad-Ahmad-19404

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

19404. முஆத் (ரலி) ஷாம் அல்லது ஏமன் நாட்டுக்கு வந்தார். அங்கே கிறித்தவர்கள் தங்கள் பாதிரிமார்களுக்கும், தலைவர்களுக்கும் ஸஜ்தாச் செய்ததைக் கண்டார்.

(நபி (ஸல்) அவர்கள் இதற்கு அதிகத் தகுதி படைத்தவர்கள் என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டனர். (மதீனா வந்தததும்) அல்லாஹ்வின் தூதரே! கிறித்தவர்கள் தமது மத குருக்களுக்கும், தலைவர்களுக்கும் ஸஜ்தாச் செய்ததை நான் கண்டேன். (இவ்வாறு) கண்ணியம் செய்வதற்கு நீங்கள் அதிகத் தகுதி படைத்தவர்கள் என்று என் மனதில் எண்ணினேன்)

ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று கேட்டேன்.

இது தான் எங்களுக்கு முந்தைய நபிமார்களின் முகமன் அவர்கள் கூறினார்கள். இதை எங்கள் நபிக்கு செய்திட நாங்கள் அதிக உரிமை படைத்தவர்கள் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் தங்கள் வேதத்தை மாற்றியது போல் தங்கள் நபிமார்கள் மீது பொய் கூறுகின்றனர். இதை விடச் சிறந்ததை அல்லாஹ் நமக்குத் தந்துள்ளான். அது தான் ஸலாம் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி)


إِنَّهُ أَتَى الشَّامَ، فَرَأَى النَّصَارَى. فَذَكَرَ مَعْنَاهُ إِلَّا أَنَّهُ قَالَ: فَقُلْتُ: لِأَيِّ شَيْءٍ تَصْنَعُونَ هَذَا؟ قَالُوا: هَذَا كَانَ تَحِيَّةَ الْأَنْبِيَاءِ قَبْلَنَا، فَقُلْتُ: نَحْنُ أَحَقُّ أَنْ نَصْنَعَ هَذَا بِنَبِيِّنَا. فَقَالَ: نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهُمْ كَذَبُوا عَلَى أَنْبِيَائِهِمْ كَمَا حَرَّفُوا كِتَابَهُمْ، إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ أَبْدَلَنَا خَيْرًا مِنْ ذَلِكَ السَّلَامَ تَحِيَّةَ أَهْلِ الْجَنَّةِ»


Musnad-Ahmad-19403

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

19403. முஆத் (ரலி) அவர்கள் யமனுக்கு அல்லது ஷாமுக்கு சென்றார்கள். அங்குள்ள கிருஸ்துவர்கள் தமது தலைவர்களுக்கும், ஆட்சியாளர்களும் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தார்கள். இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்’ என்று (தனக்குள்) கூறிக் கொண்டார்கள்…நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து தான் கண்டதை கூறி, நாங்கள் சிரம் பணிந்திட , கண்ணியப்படுத்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்’ (தனக்குள்) கூறிக் கொண்டதை எடுத்து கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்லியிருப்பேன்’…என்று கூறினார்கள்…

அறிவிப்பவர் :  அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி)


قَدِمَ مُعَاذٌ الْيَمَنَ، أَوْ قَالَ: الشَّامَ، فَرَأَى النَّصَارَى تَسْجُدُ لِبَطَارِقَتِهَا وَأَسَاقِفَتِهَا، فَرَوَّى فِي نَفْسِهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَقُّ أَنْ يُعَظَّمَ، فَلَمَّا قَدِمَ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، رَأَيْتُ النَّصَارَى تَسْجُدُ لِبَطَارِقَتِهَا وَأَسَاقِفَتِهَا، فَرَوَّأْتُ فِي نَفْسِي أَنَّكَ أَحَقُّ أَنْ تُعَظَّمَ، فَقَالَ: «لَوْ كُنْتُ آمُرُ أَحَدًا أَنْ يَسْجُدَ لِأَحَدٍ، لَأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا، وَلَا تُؤَدِّي الْمَرْأَةُ حَقَّ اللَّهِ عَزَّ وَجَلَّ عَلَيْهَا كُلَّهُ، حَتَّى تُؤَدِّيَ حَقَّ زَوْجِهَا عَلَيْهَا كُلَّهُ، حَتَّى لَوْ سَأَلَهَا نَفْسَهَا وَهِيَ عَلَى ظَهْرِ قَتَبٍ لَأَعْطَتْهُ إِيَّاهُ»


Musnad-Ahmad-21986

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

21986. முஆத் (ரலி) அவர்கள் யமனில் இருந்து திரும்ப வந்த போது நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! யமனில் உள்ளவர்களில் சிலர் சிலருக்கு ஸஜ்தா செய்வதை பார்த்தேன். எனவே நாங்கள் உங்களுக்கு ஸஜ்தா செய்யலாமா என்று கேட்டார்கள்,

அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஸஜ்தாச் செய்வதை நான் அனுமதிப்பதாக இருந்தால் மனைவியை கணவனுக்கு ஸஜ்தா செய்ய அனுமதித்திருப்பேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஆத் பின் ஜபல் (ரலி)


أَنَّهُ لَمَّا رَجَعَ مِنَ الْيَمَنِ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، رَأَيْتُ رِجَالًا بِالْيَمَنِ يَسْجُدُ بَعْضُهُمْ لِبَعْضٍ، أَفَلَا نَسْجُدُ لَكَ؟ قَالَ: «لَوْ كُنْتُ آمِرًا بَشَرًا يَسْجُدُ لِبَشَرٍ، لَأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا»


Musnad-Ahmad-26841

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

26841.


«إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزَوَّجَهَا، وَهُمَا حَلَالَانِ بِسَرِفٍ، بَعْدَمَا رَجَعَ»


Musnad-Ahmad-26828

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

26828. ..


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزَوَّجَهَا حَلَالًا، وَبَنَى بِهَا حَلَالًا، وَمَاتَتْ بِسَرِفَ، فَدَفَنَهَا فِي الظُّلَّةِ الَّتِي بَنَى بِهَا فِيهَا» ، فَنَزَلْنَا فِي قَبْرِهَا، أَنَا وَابْنُ عَبَّاسٍ


Musnad-Ahmad-20719

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

20719. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(கத்னா எனும்) விருத்தசேதனம் செய்வது ஆண்களுக்கு சுன்னதாகும். பெண்களுக்கு அது சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: உஸாமா பின் உமைர் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” ” الْخِتَانُ سُنَّةٌ لِلرِّجَالِ، مَكْرُمَةٌ لِلنِّسَاءِ


Musnad-Ahmad-26581

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

26581. கணவனை இழந்த பெண், மஞ்சள் அல்லது சிகப்புச் சாயம் பூசப்பட்ட ஆடைகள், நகை ஆகியவற்றை அணியக் கூடாது; தலைக்குச் சாயம் பூசக் கூடாது; சுர்மா இடக் கூடாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)


«الْمُتَوَفَّى عَنْهَا زَوْجُهَا لَا تَلْبَسُ الْمُعَصْفَرَ مِنَ الثِّيَابِ، وَلَا الْمُمَشَّقَةَ، وَلَا الْحُلِيَّ، وَلَا تَخْتَضِبُ، وَلَا تَكْتَحِلُ»


Musnad-Ahmad-25908

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஒரு நாள் ஒருவரின் ஜனாஸா நல்லடக்கத்தை முடித்து விட்டு நபி (ஸல்) அவர்கள் பக்கீ எனும் மய்யவாடியிலிருந்து என்னிடம் வந்தார்கள். நான் அப்போது என் தலையில் வேதனையை பெற்றிருந்தேன். “என் தலையே! என் தலைவலியே! என்று வேதனையில் கூறினேன்” அதை கேட்ட நபி (ஸல்) அவர்கள் நீ சிரமப்பட வேண்டாம் எனக்கு முன் நீ மரணித்தால் உன்னை குளிப்பாட்டி, கஃபன் அணிவித்து, ஜனாஸா தொழுகை நடத்தி, பின்னர் நானே உன்னை நல்லடக்கம் செய்வேன் என்றார்கள். அவ்வாறு நடந்தால் . அல்லாஹுவின் மீது ஆணையாக! நீங்கள் சென்று உங்களுடைய (மற்ற) துணைவியரில் ஒருவருடன் மணவறை காண்பீர்கள். (என்னை மறந்து விடுவீர்கள்)” என்றேன். (அதை கேட்டு) நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். அதன் பிறகு எந்த வேதனையில் அவர்கள் மரணித்தார்களோ அந்த வேதனை அவர்களுக்கு ஆரம்பமானது.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


رَجَعَ إِلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ مِنْ جَنَازَةٍ بِالْبَقِيعِ، وَأَنَا أَجِدُ صُدَاعًا فِي رَأْسِي، وَأَنَا أَقُولُ: وَارَأْسَاهْ قَالَ: بَلْ أَنَا وَارَأْسَاهْ قَالَ: «مَا ضَرَّكِ لَوْ مِتِّ قَبْلِي، فَغَسَّلْتُكِ وَكَفَّنْتُكِ، ثُمَّ صَلَّيْتُ عَلَيْكِ، وَدَفَنْتُكِ؟» قُلْتُ: لَكِنِّي أَوْ لَكَأَنِّي بِكَ، وَاللَّهِ لَوْ فَعَلْتَ ذَلِكَ لَقَدْ رَجَعْتَ إِلَى بَيْتِي فَأَعْرَسْتَ فِيهِ بِبَعْضِ نِسَائِكَ، قَالَتْ: فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ بُدِئَ فِي وَجَعِهِ الَّذِي مَاتَ فِيهِ


Musnad-Ahmad-26306

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

26306. நபி (ஸல்) அவர்கள் இறந்த பின் அவர்களைக் குளிப்பாட்ட முடிவு செய்தனர். ‘மற்றவர்களின் ஆடைகளைக் களைந்து விட்டு குளிப்பாட்டுவது போல் நபி (ஸல்) அவர்களைக் குளிப்பாட்டுவதா? அல்லது அவர்கள் அணிந்திருந்த ஆடையுடனே குளிப்பாட்டுவதா என்பது தெரியவில்லை’ என்று பேசிக் கொண்டனர். அவர்கள் இதில் கருத்து வேறுபாடு கொண்ட போது அல்லாஹ் அவர்களுக்குத் தூக்கத்தை ஏற்படுத்தினான்.

‘நபி (ஸல்) அவர்கள் அணிந்துள்ள ஆடையுடனே குளிப்பாட்டுங்கள்’ என்று வீட்டின் மூலையிலிருந்து ஒருவர் கூறினார். அவர் யாரென்று நமக்குத் தெரியவில்லை. அதன்படி அவர்கள் அணிந்திருந்த ஆடையின் மேல் தண்ணீரை ஊற்றி அதன் மேல் தேய்த்துக் கழுவினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நபி (ஸல்) இறந்த அந்தச் சந்தர்ப்பம் மீண்டும் வரும் என்றிருந்தால் நபி (ஸல்) அவர்களை அவர்களின் மனைவியர் தான் அவர்களைக் குளிப்பாட்டுவோம் என்று ஆயிஷா (ரலி) கூறுவார்கள்…

அறிவிப்பவர் : அப்பாத் பின் அப்துல்லாஹ் (ரஹ்)


لَمَّا أَرَادُوا غُسْلَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اخْتَلَفُوا فِيهِ، فَقَالُوا: وَاللَّهِ مَا نَدْرِي كَيْفَ نَصْنَعُ؟ أَنُجَرِّدُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا نُجَرِّدُ مَوْتَانَا أَمْ نُغَسِّلُهُ وَعَلَيْهِ ثِيَابُهُ؟ قَالَتْ: فَلَمَّا اخْتَلَفُوا أَرْسَلَ اللَّهُ عَلَيْهِمُ السَّنَةَ، حَتَّى وَاللَّهِ مَا مِنَ الْقَوْمِ مِنْ رَجُلٍ إِلَّا ذَقْنُهُ فِي صَدْرِهِ نَائِمًا، قَالَتْ: ثُمَّ كَلَّمَهُمْ مِنْ نَاحِيَةِ الْبَيْتِ، لَا يَدْرُونَ مَنْ هُوَ، فَقَالَ: «اغْسِلُوا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ ثِيَابُهُ» . قَالَتْ: فَثَارُوا إِلَيْهِ، «فَغَسَّلُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي قَمِيصِهِ يُفَاضُ عَلَيْهِ الْمَاءُ وَالسِّدْرُ، وَيُدَلِّكُهُ الرِّجَالُ بِالْقَمِيصِ» ،

وَكَانَتْ تَقُولُ: لَوْ اسْتَقْبَلْتُ مِنَ الْأَمْرِ مَا اسْتَدْبَرْتُ مَا غَسَّلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا نِسَاؤُهُ


Next Page » « Previous Page