Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-11511

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

11511. அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலர் (தொழுகையில் முன் வரிசையில் சேராமல்) பின்னால் விலகி நிற்பதைக் கண்டார்கள். அப்போது முன் வரிசைக்கு வந்து என்னைப் பின்பற்றித் தொழுங்கள். உங்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் உங்களைப் பின்பற்றித் தொழட்டும். மக்களில் சிலர் எப்போதும் (தொழுகை வரிசையில்) பின்தங்கிக்கொண்டே இருப்பார்கள். முடிவில் அவர்களை அல்லாஹ் (தனது அருளிலிருந்து) பின்தங்கச் செய்துவிடுவான் என்று கூறினார்கள்.


رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَصْحَابِهِ تَأَخُّرًا، فَقَالَ: «تَقَدَّمُوا فَأْتَمُّوا بِي، وَلْيَأْتَمَّ بِكُمْ مَنْ بَعْدَكُمْ، وَلَا يَزَالُ قَوْمٌ يَتَأَخَّرُونَ، حَتَّى يُؤَخِّرَهُمُ اللَّهُ»


Musnad-Ahmad-11142

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

11142. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முன் வரிசைக்கு வந்து என்னைப் பின்பற்றித் தொழுங்கள். உங்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் உங்களைப் பின்பற்றித் தொழட்டும். மக்களில் சிலர் எப்போதும் (தொழுகை வரிசையில்) பின்தங்கிக்கொண்டே இருப்பார்கள். முடிவில் அவர்களை அல்லாஹ் (தனது அருளிலிருந்து) பின்தங்கச் செய்துவிடுவான்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


«ائْتَمُّوا بِي يَأْتَمُّ بِكُمْ مَنْ بَعْدَكُمْ، فَإِنَّهُ لَا يَزَالُ قَوْمٌ يَتَأَخَّرُونَ حَتَّى يُؤَخِّرَهُمُ اللَّهُ عَزَّ وَجَلَّ»


Musnad-Ahmad-17157

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

17157. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலாவது வரிசை(யில் நின்று தொழுவோரு)க்கு மூன்று முறையும், அதனை அடுத்துள்ள (இரண்டாவது) வரிசை(யில் நின்று தொழுவோரு)க்கு ஒரு தடவையும் (ஸலவாத்) பிரார்த்தனை செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: இர்பாள் பின் ஸாரியா (ரலி)


«أَنَّهُ كَانَ يُصَلِّي عَلَى الصَّفِّ الْأَوَّلِ ثَلَاثًا، وَعَلَى الَّذِي يَلِيهِ وَاحِدَةً»


Musnad-Ahmad-17156

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

17156. திண்ணை ஸஹாபாக்களில் ஒருவரான இர்பாள் பின் ஸாரியா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலாவது வரிசை(யில் நின்று தொழுவோரு)க்கு மூன்று முறையும், இரண்டாவது வரிசை(யில் நின்று தொழுவோரு)க்கு ஒரு தடவையும் (ஸலவாத்) பிரார்த்தனை செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் நுஃபைர் (ரஹ்)


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي عَلَى الصَّفِّ الْمُقَدَّمِ ثَلَاثًا، وَعَلَى الثَّانِي وَاحِدَةً»


Musnad-Ahmad-17162

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

17162. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலாவது வரிசை(யில் நின்று தொழுவோரு)க்கு மூன்று முறையும், அதனை அடுத்துள்ள (இரண்டாவது) வரிசை(யில் நின்று தொழுவோரு)க்கு ஒரு தடவையும் (ஸலவாத்) பிரார்த்தனை செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: இர்பாள் பின் ஸாரியா (ரலி)


«صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الصَّفِّ الْمُقَدَّمِ ثَلَاثًا، وَعَلَى الَّذِي يَلِيهِ وَاحِدَةً»


Musnad-Ahmad-17148

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

17148. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலாவது வரிசை(யில் நின்று தொழுவோரு)க்கு மூன்று தடவையும், இரண்டாவது வரிசை(யில் நின்று தொழுவோரு)க்கு ஒரு தடவையும் பாவமன்னிப்பு கேட்பவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: இர்பாள் பின் ஸாரியா (ரலி)


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَسْتَغْفِرُ لِلصَّفِّ الْمُقَدَّمِ ثَلَاثَ مِرَارٍ، وَلِلثَّانِي مَرَّةً»


Musnad-Ahmad-22821

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

22821. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் நாளில் ‘அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கின்ற, மேலும், அல்லாஹ்வினுடையவும் அவனுடைய தூதருடையவும் நேசத்தைப் பெற்ற ஒரு மனிதரிடம், நாளை (இஸ்லாமிய சேனையின்) இந்தக் கொடியைத் தரப்போகிறேன். அல்லாஹ் அவருக்கு வெற்றியளிப்பான்’ என்று கூறினார்கள். அந்தக் கொடி தங்களில் எவரிடம் தரப்படும் என்ற யோசனையில் மக்கள் அந்த இரவெல்லாம் மூழ்கியிருந்தனர். மறுநாள் காலையில் அவர்களில் ஒவ்வொருவரும் அது தம்மிடமே தரப்படவேண்டுமென்று ஆசைப்பட்டவர்களாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தனர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அலீ இப்னு அபீ தாலிப் எங்கே?’ என்று கேட்டார்கள். ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அவருக்குக் கண்வலி ஏற்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்புங்கள்’ என்று கூறினார்கள். அலீ (ரலி) அழைத்து வரப்பட்டபோது நபி (ஸல்) அவர்களின் கண்களில் உமிழ்நீரை உமிழ்ந்து அவருக்காக பிரார்த்தித்தார்கள், அதற்கு முன்பு வலி எதுவுமே இல்லாதிருந்ததைப் போல் குணமாகிவிட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர்களிடம் அந்தக் கொடியைக் கொடுத்தார்கள். உடனே அலீ (ரலி), ‘நம்மைப் போன்று அவர்களும் (ஒரே இறைவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாய்) ஆகும் வரை நான் அவர்களுடன்

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَوْمَ خَيْبَرَ: «لَأُعْطِيَنَّ هَذِهِ الرَّايَةَ غَدًا رَجُلًا يَفْتَحُ اللَّهُ عَلَى يَدَيْهِ يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ، وَيُحِبُّهُ اللَّهُ وَرَسُولُهُ» . قَالَ: فَبَاتَ النَّاسُ يَدُوكُونَ لَيْلَتَهُمْ أَيُّهُمْ يُعْطَاهَا؟ فَلَمَّا أَصْبَحَ النَّاسُ غَدَوْا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّهُمْ يَرْجُو أَنْ يُعْطَاهَا فَقَالَ: «أَيْنَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ؟» فَقَالَ: هُوَ يَا رَسُولَ اللَّهِ، يَشْتَكِي عَيْنَيْهِ. قَالَ: «فَأَرْسِلُوا إِلَيْهِ» . فَأُتِيَ بِهِ فَبَصَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي عَيْنَيْهِ، وَدَعَا لَهُ فَبَرَأَ حَتَّى كَأَنْ لَمْ يَكُنْ بِهِ وَجَعٌ، فَأَعْطَاهُ الرَّايَةَ. فَقَالَ عَلِيٌّ: يَا رَسُولَ اللَّهِ، أُقَاتِلُهُمْ حَتَّى يَكُونُوا مِثْلَنَا. فَقَالَ: «انْفُذْ عَلَى رِسْلِكَ حَتَّى تَنْزِلَ بِسَاحَتِهِمْ، ثُمَّ ادْعُهُمْ إِلَى الْإِسْلَامِ، وَأَخْبِرْهُمْ بِمَا يَجِبُ عَلَيْهِمْ مِنْ حَقِّ اللَّهِ فِيهِ، فَوَاللَّهِ لَأَنْ يَهْدِيَ اللَّهُ بِكَ رَجُلًا وَاحِدًا خَيْرٌ لَكَ مِنْ أَنْ يَكُونَ لَكَ حُمْرُ النَّعَمِ»


Musnad-Ahmad-5724

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5724.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மலக்குமார்களின் வரிசையைக் கொண்டு தான் நீங்கள் வரிசையாக நிற்கிறீர்கள். எனவெ தொழுகை வரிசையை நேராக்குங்கள்! இடைவெளிகளை நிரப்புங்கள்! தோள் புஜங்களை நேராக்கிக் கொள்ளுங்கள்!) உங்களின் சகோதரர்களின் கைகளை (பிடித்து அருகில் நிறுத்துவதில்) இதமாக நடந்து கொள்ளுங்கள். ஷைத்தானிற்கு இடைவெளிகளை விடாதீர்கள். யார் வரிசையில் இணைந்து நிற்கிறாரோ அவரை அல்லாஹ் இணைத்துக் கொள்வான். யார் வரிசையைத் துண்டிக்கிறாரோ அவரை அல்லாஹ் துண்டித்து விடுவான்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«أَقِيمُوا الصُّفُوفَ، فَإِنَّمَا تَصُفُّونَ بِصُفُوفِ الْمَلَائِكَةِ وَحَاذُوا بَيْنَ الْمَنَاكِبِ، وَسُدُّوا الْخَلَلَ، وَلِينُوا فِي أَيْدِي إِخْوَانِكُمْ، وَلَا تَذَرُوا فُرُجَاتٍ لِلشَّيْطَانِ، وَمَنْ وَصَلَ صَفًّا، وَصَلَهُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى، وَمَنْ قَطَعَ صَفًّا قَطَعَهُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى»


Next Page » « Previous Page